டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலுக்கு 10 நாட்களில் 15,000 புக்கிங்

Written By:

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சமீபத்தில் தான் இந்திய வாகன சந்தையில் அறிமுகம் செய்யபட்டது. அதற்குள்ளாக, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம் வழங்கும் இன்னோவா க்ரிஸ்ட்டா மாடலுக்கு 10 நாட்களில் 15,000 புக்கிங் குவிந்துள்ளது. இதில் ஆச்சர்யபடும் விஷயம் என்ன என்றால், அதிகப்படியான புக்கிங், இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுக்கு தான் குவிந்துள்ளது.

இதே நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் டிமாண்ட் கூடிக்கொண்டே இருந்தால், இதன் காத்திருப்பு காலம், மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய நிலையில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 13.83 லட்சம் ரூபாய் முதல் 20.77 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் மும்பை விலையில் விற்கபடுகிறது. இந்த புதிய மாடல், முந்தைய மாடலை காட்டிலும் சுமார் 4 லட்சம் ரூபாய் கூடுதல் விலை கொண்டதாக உள்ளது.

டொயோட்டா நிறுவனம், இந்த இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு ஏராளமான சிறப்பு சொகுசு அம்சங்கள் பொருத்தபட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஏராளமான போக்குவரத்து நிறுவனங்கக்கு மத்தியிலும், பெரிய குடும்பங்களுக்கு மத்தியிலும் இன்னோவா மிகுவும் புகழ்பெற்ற மாடலாக உள்ளது.

toyota-innova-crysta-mpv-15000-bookings-in-10-days

பழைய இன்னோவா மாடலில் இருந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் ஏற்கபட்டு, அவற்றுடன் சில புதிய சிறப்பம்சங்களும் சேர்த்து இந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியில் இணைத்து வழங்கபட்டுள்ளது.

பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள், இந்திய வாகன சந்தைகளில் இன்னோவா மாடலின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்தன. ஆனால், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளும் டொயோட்டா இன்னோவா ஆதிக்கத்தை குறைக்க முடியவில்லை. தற்போதைய நிலையில், ரெனோ லாட்ஜி மற்றும் மஹிந்திரா ஸைலோ ஆகிய மாடல்கள் டொயோட்டாவின் ஆதிக்கத்தை குறைக்கும் முனைப்பில் உள்ளன.

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரத்யேக படங்கள்... உங்களுக்காக...!!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிராந்திய அளவில் பெங்களூரூவில் அறிமுகம்

English summary
All-new Toyota Innova Crysta was launched in Indian market recently. Within short period, Japanese automobile giant has gathered over 15,000 bookings in just 10 Days. Surprisingly, majority of bookings are for top-end automatic variant of Innova Crysta. New model is roughly Rs. 4 lakh more expensive than previous model. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark