புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மே 3-ல் இந்தியாவில் அறிமுகம்

Written By:

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மே மாதம் 3-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா...

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா...

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, இந்த வாகன சந்தைகளில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வாகனம் ஆகும்.

இது தற்போது விற்பனையில் உள்ள நிகழ்தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவிக்கு மாற்றாக அமைகிறது. இது பிரிமியம் எம்பிவியாக அறிமுகம் செய்யபடுகிறது.

புக்கிங்;

புக்கிங்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா கார் உற்பத்தி நிறுவனம், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் போது இந்தியாவில் அறிமுகம் செய்தது.

அறிமுகம் செய்யபட்ட சில நாட்களில், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் புக்கிங்களை ஃபிப்ரவரி மாதத்தில் இருந்தே டொயோட்டா நிறுவனம் ஏற்க துவக்கிவிட்டனர். க்ரிஸ்ட்டா எம்பிவியை புக்கிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், 50,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, நிகழ்தலைமுறை டொயோட்டா இன்னோவா எம்பிவியின் அதே 2,750 மில்லிமீட்டர் என்ற அளவிலான வீல்பேஸ் கொண்டுள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் நீளம் 150 மில்லிமீட்டர், அகலம் 70 மில்லிமீட்டர், 35 மில்லிமீட்டர் என்ற அளவிலும் அதிகரிக்கபட்டுள்ளது. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 4,735 மில்லிமீட்டர் என்ற அளவிலான நீளம், 1,830 மில்லிமீட்டர் என்ற அளவிலான அகலம், 1,795 மில்லிமீட்டர் என்ற அளவிலான உயரம் கொண்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;

இஞ்ஜின் தேர்வுகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2 விதமான டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது.

டீசல் இஞ்ஜின் - 1;

டீசல் இஞ்ஜின் - 1;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் சிறிய டீசல் இஞ்ஜின், 4-சிலிண்டர்களுடன் 2.4 லிட்டர் என்ற அளவிலான கொள்ளளவு கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 148 பிஹெச்பியையும், 343 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டீசல் இஞ்ஜின் - 2;

டீசல் இஞ்ஜின் - 2;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெரிய டீசல் இஞ்ஜின், 4-சிலிண்டர்களுடன் 2.8 லிட்டர் என்ற அளவிலான கொள்ளளவு கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 176 பிஹெச்பியையும், 360 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடு;

சிறப்பு ஏற்பாடு;

2,000 சிசி-க்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின்கள் தடைசெய்யபட்ட டெல்லி என்சிஆர் போன்ற பகுதிகளுக்கு என சிறிய பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாடல் உருவாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.

கிடைக்கும் ட்ரிம்கள்;

கிடைக்கும் ட்ரிம்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் என்ற 3 ட்ரிம்களில் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ், ஜிஎக்ஸ், விஎக்ஸ் ஆகிய வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஜிஎக்ஸ், டாப் எண்ட் வேரியண்ட்டான இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, ட்யூவல் ஸ்லாட்கள் உடைய குரோம் கிரில் கொண்டுள்ளது.

இந்த குரோம் கிரில், அமர்த்தப்பட்டது போன்ற அமைப்பு உடைய ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.

ரியர்;

ரியர்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பின்பக்கம் தட்டையாக ஆக்கபட்டுள்ளது. இதன் பூமராங் வடிவிலான டெயில்-லேம்ப்கள் இதன் தனித்துவம் மிக்க அம்சமாக விளங்குகிறது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிப்யூஷன் வசதி உடைய ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மே 3-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

விலை;

விலை;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 20 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்டில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா-விற்கு 4 ஸ்டார் ரேட்டிங்

டொயோட்டா இன்னோவா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Toyota Innova Crysta India Launch is all set for May 3rd. Crysta is long awaited replacement for Toyota's extremely MPV, the Innova. New Innova Crysta is expected to be priced between Rs. 20 to Rs. 25 lakhs ex-showroom. Bookings for Innova Crysta started way back in February. Crysta is available with 2 Diesel Engine options. To know more, check here...
Story first published: Thursday, April 21, 2016, 13:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark