டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் மே மாத விற்பனை ரிப்போர்ட்

Written By:

டொயோட்டா நிறுவனம், கடந்த மே மாதத்தின் போது 6,694 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்த டொயோட்டா இன்னோவா காரும் மாபெரும் ஹிட்டாகியது. 2016 மே மாதத்தில் தான் டொயோட்டா நிறுவனம், புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியை அறிமுகம் செய்தது.

toyota-innova-crysta-mpv-may-sales-waiting-period-increases

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் அறிமுகத்தின் போது பலரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். தற்போது, இதன் முதல் மாத விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளது. டொயோட்டா இன்னோவா காருக்கு கிடைத்தது போன்றே டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு அபாரமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

அறிமுகம் செய்யபட்ட முதல் மாதமான கடந்த மே மாதத்தில் மட்டும், டொயோட்டா நிறுவனம், 6,694 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிகள் என்ற அளவில் அபாரமான விற்பனையை பதிவு செய்துள்ளனர். இத்தகைய அபாரமான விற்பனையின் காரணமாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிக்கு இது வரை 20,000 புக்கிங் குவிந்துள்ளது.

இதன் காரணமாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், இன்னோவா க்ரிஸ்ட்டாவிற்கான காத்திருப்பு காலம், 2 முதல் 3 மாதங்கள் என்ற நிலையில் உள்ளது. பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டே இருப்பதால், இதன் காத்திருப்பு காலம் மேலும் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

toyota-innova-crysta-mpv-may-sales-waiting-period-increases-sharply

2016 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மொத்தம் 2 வகையிலான இஞ்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது. 2016 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் முதல் தேர்வு, 2.4-லிட்டர் டீசல் டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இது எக்கோ மோட் மற்றும் பவர் மோட் என இரு வகையான டிரைவிங் மோட்கள் கொண்டுள்ளது. இதனால், 2016 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளிலும், கேரளாவிலும் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.

2016 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் 2-வது இஞ்ஜின் தேர்வு, 2.8-லிட்டர் டீசல் டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், சீக்வென்ஷியல் ஷிக்ப்ட்கள் உடைய 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

தற்போதைய நிலையில், இந்த 2 வகையிலான இஞ்ஜின் தேர்வுகள் உடைய 2016 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவிகளுக்கும், இந்தியா முழுவதும் எக்கசக்கமான டிமான்ட் உள்ளது.

English summary
Japanese-based manufacturer Toyota registered sale of 6,694 Units of Toyota Innova Crysta MPV (Multi-Purpose Vehicle) in May 2016. Now, May month sales reports are out. Toyota Motors India has amassed over 20,000 bookings since launch. Due to this, Waiting period for all-new Innova Crysta is also growing constantly. To know more, check here...
Story first published: Friday, June 3, 2016, 8:16 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark