பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி செப்டம்பரில் அறிமுகம்

By Ravichandran

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம் வழங்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியன்ட், வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியாகிறது.

முன்னதாக, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா பிரிமியம் எம்பிவி, மே 2-ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது. அப்போது, இந்த இன்னோவா க்ரிஸ்ட்டா, டீசல் இஞ்ஜின் கொண்ட தேர்வுடன் மட்டுமே வெளியாகியது. விரைவில், தேர்வு முறையிலான பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாடலாகவும் அறிமுகம் செய்யப்படும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது.

toyota-innova-crysta-mpv-petrol-variant-2016-september-launch

இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றாலும், டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் இன்னோவா க்ரிஸ்ட்டாவை, டீசல் வாகனங்களுக்கான தடை இருப்பதால், டெல்லியில் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், டொயோட்டா நிறுவனத்தின் மொத்த விற்பனையில், 7% விற்பனை பாதிக்கபட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா ஆகியவை, 2.0 லிட்டருக்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின்கள் கொண்டுள்ளதால், டெல்லியில் விற்பனை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.

toyota-innova-crysta-mpv-petrol-variant-september-2016-launch

இவற்றிற்கு தீர்வாக டொயோட்டா நிறுவனம், 4 சிலிண்டர்கள் உடைய 2.7 லிட்டர், விவிடி-ஐ பெட்ரோல் இஞ்ஜின் வடிவமைக்கிறது. இந்த இஞ்ஜின், 161.76 பிஹெச்பியையும், 245 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இது 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும். இந்த பெட்ரோல் இஞ்ஜினின் உற்பத்தி, ஜூலையில் துவங்குகிறது.

பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இறுதியாக, இந்த புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் எந்த விதமான தடைகளும் இன்றி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

toyota-innova-crysta-mpv-petrol-variant-september-launch-expected

பல்வேறு வேரியன்ட்களில் செய்யப்பட கூடிய இந்த பெட்ரோல் இஞ்ஜின் உடைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 14 லட்சம் அல்லது அதற்கும் கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Toyota Motors India will be launching their all-new Toyota Innova Crysta with an optional petrol engine option in 2016 September. Due to Diesel Engine ban, Toyota Motors is not able to sell their Innova Crysta in Delhi-NCR region. Hence, Toyota is making the 2.7-litre, four-cylinder, VVT-i petrol engine. Production of petrol engine is expected to start by July. To know more, check here...
Story first published: Monday, June 20, 2016, 10:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X