டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பெட்ரோல் வேரியண்ட் தீபாவளிக்கு வெளியீடு

By Ravichandran

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் பெட்ரோல் வேரியண்ட், இந்தியாவில் தீபாவளியின் போது அறிமுகம் செய்யபட உள்ளது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் புதிய திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா...

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா...

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, இண்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெஹிகிள் (International Multi-purpose vehicle (IMV)) எனப்படும் பிளார்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இண்டர்நேஷனல் மல்டி-பர்பஸ் வெஹிகிள், ஏறக்குறைய அதே மல்டி-பர்பஸ் வெஹிகிள் (எம்பிவி) ஆகும்.

முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா அறிமுகம் செய்யபட்டது.

தோற்றம்;

தோற்றம்;

முந்தைய தலைமுறை டொயோட்டா இன்னோவா காரை காட்டிலும், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, சற்று இலகுவாகவும், கூடுதல் திடமாகவும் உள்ளது.

டீசல் வேரியண்ட்;

டீசல் வேரியண்ட்;

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனம், பழைய இன்னோவா விஷயத்திலும், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியிலும் டீசல் இஞ்ஜின் பொருத்துவதே முக்கியமான யோசனையாக கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில், புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் என 2 தேர்வுகளில் கிடைக்கிறது.

பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கான காரணம்;

பெட்ரோல் வேரியண்ட் அறிமுகத்திற்கான காரணம்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் என்ற 2 தேர்வுகளில் மட்டும் கிடைப்பதாலேயே, இவற்றை டெல்லி பகுதிகளில் விற்பனை செய்வதில் சிக்கல்கள் உள்ளது.

டெல்லியில், 2.0 லிட்டருக்கும் கூடுதல் கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின் விற்பதற்கு அனுமதி இல்லை.

2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்;

2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்;

டெல்லி பகுதிகளில், 2.0 லிட்டருக்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின் உடைய வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதி உள்ளது.

இதனால், டொயோட்டா நிறுவனம், 2.7 லிட்டர் அளவிலான பெட்ரோல் இஞ்ஜின் உருவாக்கி வருகிறது.

விற்பனை சரிவு;

விற்பனை சரிவு;

டெல்லியில் 2,000 சிசி அளவுக்கு கூடுதலான கொள்ளளவு கொண்ட டீசல் வாகனங்களின் விற்பனையின் தடையினால், டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

உயர் அதிகாரி கருத்து;

உயர் அதிகாரி கருத்து;

உச்ச நீதிமன்றம் டெல்லிப் பகுதியில், 2000 சிசி-க்கும் கூடுதலான இஞ்ஜின் கொண்டுள்ள வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு மாதத்தின் விற்பனையிலும் சுமார் 800 கார்கள் என்ற அளவில் விற்பனை குறைந்துள்ளது.

இந்த பிரச்னையை சமாளிக்கும் வகையில், டொயோட்டா நிறுவனம் புதிய 2.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் உருவாக்கி வருகிறது. இதற்காக, ஜப்பானில் உள்ள ஆர் அண்ட் டி எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி-க்கான இஞ்ஜினியர்கள், தீவிரமாக பணி புரிந்து வருகின்றனர்" என டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார் நிறுவனத்தின் உயர் அதிகாரி என்.ராஜா கூறினார்.

பிற சந்தைகளில் உபயோகம்;

பிற சந்தைகளில் உபயோகம்;

2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தபட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா ஏற்கனவே தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யபட்டு வருகிறது.

ஆனாக், இந்தியாவிற்காக பிரத்யேகமான முறையில், 2.7 லிட்டர் என்ற கொள்ளளவு கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் தயாரிக்கபட்டு வருகிறது. இது முதன் முதலாக இந்தியாவில் தான் அறிமுகம் செய்யபடும்" என உயர் அதிகாரி என்.ராஜா தெரிவித்தார்.

அறிமுகம்;

அறிமுகம்;

2.7 லிட்டர் என்ற கொள்ளளவு கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் உடைய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, இந்த ஆண்டு தீபாவளியின் போது அறிமுகம் செய்யபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி இந்தியாவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள்!

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Japan based Automobile Giant Toyota Motors is planning to New Toyota Innova Crysta with petrol engine. Regarding this, Toyota India is working on development of a 2.7-litre petrol engine for Indian Market. This new variant of New Toyota Innova Crysta is expected to be launched during Diwali. To know more Toyota's plans for new variant, check here...
Story first published: Wednesday, May 18, 2016, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X