டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவியின் விலைகள் விரைவில் உயரும்

Written By:

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி உட்பட பல்வேறு மாடல்களின் விலைகள் இந்தியாவில் உயர்த்தப்பட உள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம், இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி உட்பட பல்வேறு மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

டொயோட்டா நிறுவனத்தின் இந்த விலையேற்றம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

காரணம்;

காரணம்;

சமீபகாலமாக, இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானின் யென் ஆகியவற்றின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதும், ஸ்டீல் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் தொடர் விலையேற்றங்களும், இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விலையேற்றம் அமலாகும் தேதி;

விலையேற்றம் அமலாகும் தேதி;

டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள விலையேற்றம், இந்த மாத இறுதியில் இருந்தோ அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்தோ அமலாகும் என தகவல்கள் வெளியாகிறது.

அதிகமாக பாதிக்கப்படும் மாடல்;

அதிகமாக பாதிக்கப்படும் மாடல்;

இந்தியாவில் மிக அதிக அளவில் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, மிக அதிகமாக பாதிக்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. முந்தைய தலைமுறை இன்னோவாவை காட்டிலும், புதிய தலைமுறை இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 1.5 லட்சம் ரூபாய் விலை கூடிதயதாக இருக்கிறது. மீண்டும், இதன் விலை மேலும் அதிகரிக்கப்பட்டால், வாடிக்கையாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விற்கப்படும் மாடல்கள்;

விற்கப்படும் மாடல்கள்;

டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் தற்போதைய நிலையில், எட்டியாஸ் லிவா ஹேட்ச்பேக், கரோல்லோ ஆல்டிஸ், கேம்ரி ஆகிய செடான்கள், லேண்ட் குரூஸர் மற்றும் லேண்ட் குரூஸர் ப்ரேடோ எஸ்யூவி ஆகிய மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. இந்த கார் மாடல்களின் விலைகள், 5.13 லட்சம் ரூபாய் முதல் 1.34 கோடி ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்கப்படுகிறது.

பிற நிறுவனங்களின் விலையேற்றம்;

பிற நிறுவனங்களின் விலையேற்றம்;

இந்தியாவின் பிற முன்னணி கார் நிறுவனங்களும் சமீபத்தில் தான், தங்கள் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலாகும் வகையில், மாருதி சுஸுகி நிறுவனம் தங்களின் கார் மாடல்களின் விலைகளை, 1,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் என்ற அளவில் உயர்த்தியுள்ளனர்.

அதே போல், ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் அமலாகும் வகையில், ஹூண்டாய் நிறுவனமும், தங்கள் கார்களின் விலைகளை, 3,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் என்ற அளவிற்கு உயர்த்தினர்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Kirloskar Motors would hike prices across its models including their premium MPV Innova Crysta. This Price rise would be done by end of this month or early October 2016. Increased pressure of appreciation of the yen and the dollar against Indian Rupee and increased cost of commodities like steel are mentioned as reasons for this price rise. To know more, check here...
Story first published: Thursday, September 15, 2016, 18:38 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos