அலுங்காமல், குலுங்காமல் பயணிக்க... வருகிறது புதிய டொயோட்டா இன்னோவா!

Written By:

அரை வேக்காட்டு சாலையாக இருந்தாலும், அசர வைக்கும் நெடுஞ்சாலையாக இருந்தாலும், அலுங்காமல், குலுங்காமல் அழைத்து சென்று எல்லோரையும் இன்புற்றிருக்கச் செய்த டொயோட்டா இன்னோவா புதிய தலைமுறை மாடலகா மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால், புதிய இன்னோவாவை வாங்குவதற்கு பலரும் பரபரக்கும் மனதுடன் ஆவலோடு காத்து நிற்கின்றனர். புதிய தலைமுறைக்கு வழிவிடும் வகையில், பழைய இன்னோவா உற்பத்தி பிரிவிலிருந்து விலகி வழிவிட்டுவிட்டது. எனவே, விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி கார் குறித்த சில முக்கிய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

டொயோட்டாவின் TNGA எனப்படும் புதிய கார் தயாரிப்பு கட்டமைப்பு பாணியில் புதிய தலைமுறை இன்னோவா உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே கட்டமைப்பில்தான் விரைவில் இந்தியா வரும் புதிய ஃபார்ச்சூனர் எஸ்யூவியும், பிரையஸ் காரும் புதிய தலைமுறை மாடல்களாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய கட்டமைப்பின் பலன் என்ன என்கிறீர்களா? காரின் எடை வெகுவாக குறைந்திருப்பதுடன், வலிமையான உடல்கூடு அமைப்பையும் பெற்றிருக்கிறது.

 இன்னோவா என்றாலே...

இன்னோவா என்றாலே...

இன்னோவா என்றாலே இடவசதிதானே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? ஆம், அதைவிட கூடுதல் இடவசதி கொண்டதாக புதிய இன்னோவா வருகை தருகிறது. அதாவது, புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா கார் 150மிமீ கூடுதல் நீளத்துடனும், 70மிமீ கூடுதல் அகலம் கொண்டதாகவும், 35மிமீ கூடுதல் உயரம் கொண்டதாகவும் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், வீல் பேஸ் 2,750மிமீ என்ற பழைய அளவிலேயே உள்ளது. கூடுதல், அகலம் கொண்டிருப்பதால், அதன் பயனாக உட்புறத்தில் இடவசதி வெகுவாக மேம்பட்டிருக்கிறது.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும், எம்பிவி மார்க்கெட்டில் இன்னோவாவுக்கு என ஒரு இடம் இருக்கிறது. அதனை தக்க வைப்பதோடு, தற்போது இன்னமும் பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், தொட்டால் மடங்கிக் கொள்ளும் ஃபோல்டிங் இருக்கைகள் என இந்த பட்டியல் நீள்கிறது.

புதிய எஞ்சின்

புதிய எஞ்சின்

தற்போது விற்பனையில் இருந்து வந்த இன்னோவா காரில் 102 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், புதிய இன்னோவா காரில் 147 பிஎச்பி பவரை அளிக்க வல்ல சக்திவாய்ந்த 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலமாக, மிக சக்திவாய்ந்த காராகவும் மாறியிருக்கிறது. அத்துடன், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, தற்போது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வரப்போகிறது என்பதை நோட் செய்துகொள்ளுங்கள்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை செலுத்தும் இபிடி, மலைச் சாலைகளில் கார் பின்னோக்கி நகர்வதை தவிர்க்கும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், அதிக நிலைத்தன்மையுடன் செல்வதற்கான வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற சிறப்பான பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

டாக்ஸி மார்க்கெட்டுக்கு டாடா

டாக்ஸி மார்க்கெட்டுக்கு டாடா

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா மிகவும் பிரிமியம் மாடலாக தனி நபர் பயன்பாட்டுக்கான மாடலாக மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. எனவே, டூர் ஆபரேட்டர்களுக்கு அதிக முதலீடு செய்வதை கருதி, இன்னோவா க்ரிஸ்ட்டாவை தவிர்க்கலாம் என்ற நிலை உள்ளது. இந்தநிலையில், பழைய இன்னோவாவை தொடர்ந்து டாக்சி மார்க்கெட்டை குறிவைத்து விற்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனை டொயோட்டா தெளிவுப்படுத்தியிருக்கிறது. பழைய இன்னோவா இனி விற்பனை செய்யப்படாது என்று உறுதி பட கூறியிருக்கிறது.

சந்தோஷம் தரும் செய்தி

சந்தோஷம் தரும் செய்தி

டூர் ஆபரேட்டர்களிடமிருந்து இன்னோவாவை விலக்கி வைக்கும் டொயோட்டாவின் திட்டம் தனி நபர் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும். அத்துடன், அவர்கள் எதிர்பார்க்கும் ஓர் முழமையான அந்தஸ்தை தரும் மாடலாக இன்னோவா க்ரிஸ்ட்டா இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

வடிவமைப்பு, வசதிகள், சிறப்பம்சங்கள், பாதுகாப்பு போன்ற அனைத்து விதத்திலும் மேம்படுத்தப்பட்டிருப்பதோடு, பிரிமியம் மாடலாகவும் நிலைநிறுத்தப்பட உள்ளது. எனவே, தற்போதைய மாடலைவிட 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கணிசமான விலை உயர்வுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், பேஸ் மாடல் ஏமாற்றம் தராத சற்றே கூடுதல் விலையில் வரும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அலர்ட்

அலர்ட்

எந்த நேரமும் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி காருக்கு முன்பதிவு தொடங்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது. எனவே, உங்கள் அருகாமையிலுள்ள டீலருடன் புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கான முன்பதிவு துவங்கப்படுவது குறித்து விசாரணை போட்டு வைத்துவிடுங்கள். மேலும், டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தை தொடர்பில் இருங்கள். டொயோட்டாவிடமிருந்து தகவல் கிடைத்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

 
English summary
Toyota Innova Crysta top 8 facts.
Story first published: Thursday, March 24, 2016, 16:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark