ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்டில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா-விற்கு 4 ஸ்டார் ரேட்டிங்

By Ravichandran

ஆசியன் என்சிஏபி கிராஷ் டெஸ்டில், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா-விற்கு 4 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது.

இன்னோவா க்ரிஸ்ட்டா எஸ்யூவிக்கு கிடைத்த இந்த ரேட்டிங் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸலைடரில் தெரிந்து கொள்ளலாம்.

என்கேப் கிராஷ் டெஸ்ட் பற்றி...

என்கேப் கிராஷ் டெஸ்ட் பற்றி...

ஒவ்வோரு மாடல் காரும் விபத்து காலத்தில் எந்த வகையில் உறுதியாக உள்ளது என்பதை மதிப்பீடு செய்ய, கிராஷ் டெஸ்ட் என்ற பெயரில் சோதனைகள் நடத்தபடுகிறது.

அந்த வகையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கென நியூ கார் அசெஸ்மெண்ட் புரோகிராம் (ஆசியான் என்சிஏபி) என்ற பெயரில் பிரத்யேகமான கிராஷ் டெஸ்ட் என்ற பெயரில் சோதனைகள் நடத்தபடுகிறது.

இன்னோவா க்ரிஸ்ட்டா கிடைத்த மதிப்பீடு;

இன்னோவா க்ரிஸ்ட்டா கிடைத்த மதிப்பீடு;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா-வின் பேஸ் வேரியண்ட் கொண்டு தான் கிராஷ் டெஸ்ட் மேற்கொள்ளபட்டது.

ஈஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் இல்லாத மாடல் கொண்டு தான் இந்த கிராஷ் டெஸ்ட் மேற்கொள்ளபட்டது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 14.10 புள்ளிகளும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 76 சதவிகித மதிபீடும் கிடைத்தது.

ஈஎஸ்சி வசதி இல்லாததால், இன்னோவா க்ரிஸ்ட்டா கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் மதிப்பீடை பெற முடியவில்லை.

சோதனை செய்யபட்ட மாடல்;

சோதனை செய்யபட்ட மாடல்;

கிராஷ் டெஸ்ட் மேற்கொள்ளபட்ட மாடல், ஏபிஎஸ் (ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) மற்றும் டிரைவர் மற்றும் பயணியக்கான சீட் பெல்ட் ரிமைண்டருடன் வருகிறது.

கிராஷ் டெஸ்ட் செய்யபட்ட டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவின் பேஸ் வேரியண்ட், 2.0 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 137 பிஹெச்பியையும், 183 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, இந்தியாவில் 2016-ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அறிமுகம் செய்யபடும் இஞ்ஜின் விவரம்;

அறிமுகம் செய்யபடும் இஞ்ஜின் விவரம்;

இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மாடல், புதிய 2.4 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 147 பிஹெச்பியையும், 359 டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா எம்பிவி, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்

புதிய டொயோட்டா இன்னோவா, இந்தியாவில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்?

இன்னோவா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
The Toyota Innova Crysta was awarded with four star rating in the New Car Assessment Program for Southeast Asian Countries (ASEAN NCAP). Innova Crysta was awarded with 14.10 points for Adult Occupant Protection and 76 percent for Child Occupant Production. The Innova Crysta shall be launched in India, around mid 2016.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X