2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் மூலம் செப்டம்பரில் இந்தியாவில் பிரவேசிக்கும் லெக்சஸ்

By Ravichandran

டொயோட்டா நிறுவனம், லெக்சஸ் என்ற தங்களின் சொகுசு கார் பிராண்டை, இந்த செப்டம்பர் மாதம் இந்தியாவிற்குள் கொண்டு வர உள்ளனர்.

லெக்சஸ் பிராண்டின் இந்திய பிரவேசம் மற்றும் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

லெக்சஸ் இந்தியா பிரவேசம்;

லெக்சஸ் இந்தியா பிரவேசம்;

ஜப்பானை மையமாக டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு (லக்சுரி) கார் பிராண்டான லெக்சஸ், இறுதியாக இந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவில் பிரவேசம் செய்ய உள்ளனர்.

இந்திய வாகன சந்தைகளில், சுற்று சூழலுக்கு இனக்கமான கார் மாடலுடன் தங்களின் பிரவேசத்தை மேற்கொள்கின்றனர்.

டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச்...

டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச்...

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடான் தான், டொயோட்டா நிறுவனம், லெக்சஸ் பிராண்டின் கீழ் இந்தியாவில் வழங்கும் முதல் கார் மாடலாக இருக்கும்.

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட், முதன் முதலாக 2016 ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடான், 2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இது, ஆட்கின்ஸன் சைக்கிள் மூலம் இயங்குகிறது. இதன் இஞ்ஜின் எலக்ட்ரிக் மோட்டாருடனும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் எலக்ட்ரிக் மோட்டார், 650V நிக்கல்-மெட்டல் ஹைட்ரைட் (650V nickel-metal hydride(Ni-MH)) பேட்டரி மூலம் பவர் பெறுகிறது.

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடானின், 2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் இஞ்ஜின் கூட்டாக சேர்த்து 200 ஹெச்பியையும், 470 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடானின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தான், முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

எடை;

எடை;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடான், 1,670 கிலோகிராம் எடை கொண்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்;

ஃப்யூவல் டேங்க்;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடான், 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடான், ஒரு லிட்டருக்கு 17 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஸ்டைல்;

ஸ்டைல்;

ஸ்டைல் பொருத்த வரை, 2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடானின் மிக முக்கியமான அம்சமாக இருப்பது இதன் அகன்ற வாய் தான். இதுவே, லெக்சஸ் பிராண்ட்டின் குடும்ப முக தோற்றம் போல் அமைந்துவிட்டது.

எல்இடி டேடைம் ரன்னிங் உடனான எல்இடி ஹெட்லேம்ப்கள், இதன் கிரில்லின் 2 பக்கத்திலும் உள்ளன. ஹெட்லேம்ப்களுக்கு கீழே, ஃபிரண்ட் பம்பர் மீது ஃபாக் லேம்ப்கள் உள்ளன.

ரியர்;

ரியர்;

எல் வடிவிலான கிராஃபிக்ஸ் கொண்ட கூர்மையாக தோன்றும் டெயில்லேம்ப் தான், 2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடானின் பின் பக்கத்தில் (ரியர்) உள்ள மிக முக்கியமான அம்சமாக உள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடானின் மிக அதிக அளவிலான லெதர் மற்றும் கட்டை பயன்படுத்தபட்டுள்ளது.

மேலும், நவீன இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டத்துடன், ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கபட்டுள்ளது.

விலை;

விலை;

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் செடான், இந்தியாவில் சுமார் 50 லட்சம் ரூபாய் என்ற விலையில் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டொயோட்டா லெக்சஸ் சொகுசு கார்கள் விரைவில் இந்தியா வருகை!

லெக்சஸ் தொடர்புடைய செய்திகள்

டொயோட்டா தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Toyota's luxury car brand Lexus is finally entering India in September. Lexus will be making rather eco-friendly debut with launch of 2016 Toyota Lexus ES 300h Hybrid Sedan. This ES 300h is powered by 2.5-litre petrol engine, with an electric motor that draws its power from 650V nickel-metal hydride(Ni-MH) battery. It has 65-litre fuel tank. ES 300h returns mileage of 17km/l. To know more, check here...
Story first published: Saturday, June 11, 2016, 16:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X