விற்பனையில் உலகின் நம்பர்-1 பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட டொயோட்டா!

Written By:

டொயோட்டா கார் நிறுவனம் தான், உலகின் மிகப்பெரிய மற்றும் முதன்மையான கார் நிறுவன பட்டத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

டொயோட்டா கார் நிறுவனத்தின் இந்த சாதனை குறித்த கூடுதல் தகவல்களை, வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

முதன்மையான இடம்...

முதன்மையான இடம்...

2015-ஆம் ஆண்டு இனிதே முடிவடைந்தது. 2015-ஆம் ஆண்டில் அதிகம் கார்கள் விற்பனை செய்த பெருமையை, டொயோட்டா கார் நிறுவனமே மீண்டும் பெற்றுள்ளது.

2015-ஆம் ஆண்டில் மட்டுமே, ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இந்த கார் நிறுவனம், 10.15 மில்லியன் கார்களை விற்றுள்ளது. டொயோட்டா கார் நிறுவனம் இந்த பட்டத்தை தொடர்ந்து 5-வது ஆண்டாக தக்கவைத்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

2014-லும் முதல் இடம்;

2014-லும் முதல் இடம்;

டொயோட்டா கார் நிறுவனம், 2014-ஆம் ஆண்டிலும் அதிக கார்கள் விற்று சாதனை படைத்துள்ளது. 2014-ஆம் ஆண்டில், டொயோட்டா நிறுவனம், உலக அளவில் 10.23 கார்களை விற்றுள்ளது.

2-வது இடம்?

2-வது இடம்?

டொயோட்டா நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம் தான் அதிகமான கார்களை விற்றுள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 9.93 மில்லியன் கார்களை விற்றுள்ளது.

2015-ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமே முன்னணியில் இருந்தது. பிற்பாதியில், டீசல்கேட் ஊழல் வெளியானதால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை வெகுவாக பாதிக்கபட்டது.

3-வது இடம்?

3-வது இடம்?

அமெரிக்க கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் 3-வது இடத்தில் உள்ளது. 2015-ஆம் ஆண்டில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 9.8 மில்லியன் கார்களை விற்றது.

டொயோட்டா-வின் புகழ்வாய்ந்த மாடல்கள்?

டொயோட்டா-வின் புகழ்வாய்ந்த மாடல்கள்?

டொயோட்டா கார் நிறுவனம் சார்பாக தயாரிக்கபடும் மாடல்களில், டொயோட்டா கரொல்லா, பிரையஸ், லேண்ட் க்ரூஸர் ஆகிய மாடல்கள் உலக அளவில் மிகவும் புகழ்வாய்ந்த மாடல்களாக விளங்குகின்றன.

இந்தியாவில்..?

இந்தியாவில்..?

ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா சார்பாக தயாரிக்கபடும் மாடல்களில், டொயோட்டா இன்னோவா எம்பிவி தான் இந்தியாவில் மிக அதிகம் விற்பனையாகும் மாடலாக உள்ளது.

அடுத்த அறிமுகம்?

அடுத்த அறிமுகம்?

இந்திய வாகன சந்தைகளுக்கு, டொயோட்டா இன்னோவா பொலிவு கூட்டபட்டு வழங்கபட உள்ளது. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் படி, இந்த பொலிவு கூட்டபட்டு வழங்கபட உள்ள இன்னோவா, கிரைஸ்டா என அழைக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கிரைஸ்டா இஞ்ஜின்...

கிரைஸ்டா இஞ்ஜின்...

பொலிவு கூட்டபட்ட புதிய டொயோட்டா இன்னோவா எம்பிவி, மேம்படுத்தபட்ட இஞ்ஜின் மற்றும் இதர கூடுதல் வசதிகளுடன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த இஞ்ஜின், 2.4 லிட்டர், 147 பிஹெச்பி-யை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இது தேர்வு முறையிலான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன்

இணைக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மென்மை மனம் படைத்த ஏர் ஆர் ரஹ்மானின் அரக்க குணம் படைத்த கார்!

புதிய டொயோட்டா இன்னோவா காரை பழைய மாடலிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... படங்களுடன், விபரங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Toyota continues to remain as the World's Biggest Carmaker. 2015 year has ended. In the year 2015, the Japanese brand Toyota has sold 10.15 million cars worldwide. The second place is held by Volkswagen. In 2015, Volkswagen sold 9.93 million vehicles. American carmaker General Motors holds the third place. In 2015, General Motors sold 9.8 million vehicles.
Story first published: Friday, January 29, 2016, 14:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark