டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் பிராண்ட் கார்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி

Written By:

டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் பிராண்ட் கார்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தடம் பதிப்பது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனத்தின் லெக்சஸ் பிராண்ட்டும், இந்தியாவில் பிரவேசம் செய்கிறது.

லெக்சஸ் பிராண்ட் கார்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இறக்குமதி;

இறக்குமதி;

முன்னதாக, டொயோட்டா நிறுவனம், லெக்சஸ் பிராண்ட் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளிட்டிருந்தோம். சமீபத்தில் வெளியாகிய ஏற்றுமதி / இறக்குமதி தரவுகள் படி, லெக்சஸ் பிராண்ட்டின் 14 ஆர்எக்ஸ்450ஹெச் எஸ்யூவிகள் ஹோமோலோகேஷன் நடவடிக்கைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஆர்எக்ஸ்450ஹெச் லெக்சஸ்ஸின் நடுத்தர ஹைப்ரிட் எஸ்யூவி (midsize hybrid SUV) ஆகும். இந்த ஆர்எக்ஸ்450ஹெச் மாடலில், 3.5 லிட்டர், வி6 பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் பேட்டரிகளால் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்டுள்ளது. இந்த பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் கூட்டாக 290 பிஹெச்பி திறன் வெளிப்படுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

சர்வதேச சந்தைகளுக்கான லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச் ஹைப்ரிட் எஸ்யூவியின் இஞ்ஜின் சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

எரிபொருள் சிக்கனம்;

எரிபொருள் சிக்கனம்;

லெக்சஸ் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம், போக்குவரத்து நெரிசல் நேரத்தில், எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. லெக்சஸ் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் மூலம், வாகனங்கள் தேவைப்படும் போது, ஆக்சிலரேஷன் செய்யும் போது வெறும் எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் இயங்கும் திறன் உடையதாக இருக்கும். இதன் கம்பஸ்ஷன் இஞ்ஜின் குறைந்த வேகங்களின் போது தானாக நின்று கொள்ளும்.

டிரைவ் சிஸ்டம் தேர்வுகள்;

டிரைவ் சிஸ்டம் தேர்வுகள்;

லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச் ஹைப்ரிட் எஸ்யூவி, ஃபிரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய தேர்வுகளுடன் வெளியாகிறது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

லெக்சஸ் ஆர்எக்ஸ்450ஹெச் ஹைப்ரிட் எஸ்யூவியில், எலக்ட்ரிக் செயில்கேட், கீலஸ் இக்னிஷன், 9-ஸ்பீக்கர் எண்டர்டெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டியூவல் ஸோன் கிளைமேட் சிஸ்டம் ஆகிய சிறப்பு அம்சங்கள் கொண்டுள்ளது. மேலும், இந்த எஸ்யூவியில், சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும் மாடல்களில் உள்ளது போல், ஏராளமான அம்சங்கள் தேர்வு முறையில் அளிக்கப்படும்.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

சில நாட்களுக்கும் முன்பு தான், டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் பெங்களூரூவில் தங்களின் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளதாகவும், அங்கு லெக்சஸ் பிராண்ட்டின் கார்கள் தயாரிக்கபடுவதாகவும் செய்திகள் வெளியாகியது. தற்போதைய நிலையில், லெக்சஸ் பிராண்ட் தொடர்பான செய்திகள் அவ்வளவாக வெளியாகாமல் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாக வெளியாக, நீங்கள் அதை உங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்தில் தேய்ந்து கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டொயோட்டா லெக்சஸ் கார்களின் உற்பத்தி இந்தியாவில் விரைவில் துவக்கம்

2016 டொயோட்டா லெக்சஸ் இஎஸ் 300ஹெச் ஹைப்ரிட் மூலம் செப்டம்பரில் இந்தியாவில் பிரவேசிக்கும் லெக்சஸ்

டொயோட்டா லெக்சஸ் சொகுசு கார்கள் விரைவில் இந்தியா வருகை!

English summary
Toyota has started importing of Lexus SUV into India. Toyota is in plans to launch Lexus brand in India. According to search on import/export database, it is revealed that, Toyota has imported 14 units of RX450h SUV to India for homologation purposes. RX450h is Lexus' midsize hybrid SUV. It is available with choice of front-wheel drive and all-wheel drive system. To know more, check here...
Story first published: Friday, September 30, 2016, 11:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark