இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

Written By:

டொயோட்டா வயோஸ் மிட்சைஸ் செடான் கார் இந்தியாவில் தீவிர சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், லோனவாலாவில் சோதனை செய்யப்பட்டு கொண்டிருந்த அந்த காரின் ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி கார் மார்க்கெட்டை உடைக்கும் நோக்கில் வர இருக்கும் இந்த புதிய கார் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

கர்நாடக மாநிலத்தின் தற்காலிக பதிவு எண் கொண்ட இந்த கார் மஹாராஷ்டிராவின் லோனாவாலா என்ற இடத்தில் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

அங்க அடையாளங்கள் மறைக்கப்படாமல் சோதனை செய்யப்பட்டதால், அந்த காரின் முழுமையான டிசைன் அமைப்புகளை காண முடிகிறது. நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

ஹோண்டா சிட்டி காருடன் போட்டி போடும் அளவுக்கான வடிவம், முக அமைப்பை கொண்டிருக்கிறது. ஹெட்லைட்டுகள் டொயோட்டா கரொல்லாவை தழுவியதாக இருக்கிறது. சீராக ஏறி, இறங்கும் கூரை அமைப்பும், பின்புறத்தில் டெயில் லைட்டுகளின் டிசைன் மிக சிறப்பாக இருக்கிறது.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

மிக எளிமையாக அதே நேரத்தில் பாந்தமான டிசைனுடன் காட்சியளிக்கிறது புதிய டொயோட்டா வயோஸ். 8 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள்தான் பக்கவாட்டில் கவர்ச்சியளிக்கும் விஷயம்.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

இந்த காரில் இருக்கும் எஞ்சின் பற்றிய விபரங்கள் இல்லை. ஆனால், 90 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 68 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் எதிர்பார்க்கலாம்.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2018ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா எட்டியோஸ் காரைவிட விலை அதிகமாக இருக்கும். வசதிகளிலும், நம்பகத்தன்மையிலும் வாடிக்கையாளர்களை கவரும்.

 இந்திய மண்ணில் டொயோட்டா வயோஸ் கார்... அடடே அம்சமா இருக்கே!

ஹோண்டா சிட்டி மட்டுமின்றி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சியாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும். மிட்சைஸ் செடான் சந்தையில் உள்ள வெற்றிடத்தை போக்கிக் கொள்ள இந்த புதிய மாடலை களமிறக்குகிறது டொயோட்டா.

Spy Images: Zigwheels

English summary
Toyota Vios Spied Testing — Sheds All It Camouflage. Read the complete details in Tamil.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark