கணிசமான அபராதத் தொகையுடன் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து சட்டம்!

By Saravana

வாகனப் பெருக்கம் பெரும் பிரச்னையாக உருமாறி வரும் வேளையில், போக்குவரத்து விதிகளை மீறுவோரால் சாலையில் பயணிப்பவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

எனவே, போக்குவரத்து விதிகளை கடுமையாக்கவும், அதற்கான அபராதத் தொகையை கணிசமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக, போக்குவரத்து விதிகளை மீறும் செயல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்னல் ஜம்ப்

சிக்னல் ஜம்ப்

போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு போட்ட பின்னும் தாண்டி செல்பவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதல்முறை ரூ.500 அபராதமும், அடுத்த முறை தவறுகளுக்கு ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும்.

மொபைல்போன் பேச்சு

மொபைல்போன் பேச்சு

அதிவேகமாக செல்வது மற்றும் மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு முதல்முறை ரூ.1,000, இரண்டாவது முறையிலிருந்து தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

கனரக வாகனங்கள்...

கனரக வாகனங்கள்...

அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களுக்கு முதல்முறை ரூ.2,000 அபராதமும், இரண்டாவது முறையிலிருந்து ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும்.

குடிபோதை டிரைவிங்

குடிபோதை டிரைவிங்

குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு, ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை பொறுத்து முதல்முறை குற்றத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். மறுமுறை தவறுக்கு சிறை தண்டனை வழங்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு ரூ.5,000 அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

உரிமையாளர் ஜாக்கிரதை

உரிமையாளர் ஜாக்கிரதை

ஓட்டுனர் உரிமம் இல்லாதவரை வாகனம் ஓட்டுவதை அனுமதிப்பவருக்கு ரூ.10,000 அபராதம், ஓர் ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.

மைனர் ஓட்டினால்..

மைனர் ஓட்டினால்..

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும். சில சமயத்தில் இரண்டும் சேர்த்து விதிக்கப்படவும் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. /p>

ஓவர்லோடு

ஓவர்லோடு

அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ரூ.20,000 அல்லது ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கு ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்படும்.

Most Read Articles
English summary
There is a bad news for all those people especially youngster who violate traffic rules repeatedly. Union Government has decided to deal with these traffic violators with an iron hand.
Story first published: Saturday, May 21, 2016, 17:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X