ஊபர் மற்றும் அமெரிக்கன் டூரிஸ்டர் இணைந்து வழங்கும் ஸ்பெஷல் மும்பை ட்ரீட்

Written By:

ஊபர் மற்றும் அமெரிக்கன் டூரிஸ்டர் ஆகிய 2 நிறுவனங்கள் இணைந்து, மும்பை மக்களுக்கு ஒரு சிறப்பான மும்பை ட்ரீட் (ஸ்பெஷல் மும்பை ட்ரீட்) வழங்க உள்ளனர்.

இந்த சிறப்பான மும்பை ட்ரீட், ஏப்ரல் 3-ஆம் தேதி வழங்க்கபடுகிறது.

ஆப் அடிப்படையிலான டேக்ஸி சர்வீஸ் வழங்கும் நிறுவனமான ஊபர், "ஊபர் டூரிஸ்டர்" என்ற பிரச்சாரத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் சில மக்களுக்கு, இது வாழ்நாள் அனுபவமாக இருக்கும். இந்த ஊபர் டூரிஸ்டர் பிரச்சாரம், ஊபர் மற்றும் அமெரிக்கன் டூரிஸ்டர் ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டணியில் நடைபெறும்.

ஊபர் ஆப்பில், ஹிட்டன் வியூ எனப்படும் மறைக்கப்பட்ட அம்சம் வழங்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் அன்லாக் செய்ய வேண்டும்.

ஊபர் டூரிஸ்டர் என்று பெயரிடபட்டுள்ள இந்த அம்சம் கோரிக்கையின் பேரில் வழங்கப்படும் அம்சமாக (ஆன்-டிமாண்ட் ஃப்யூச்சர்) இருக்கும். இதன் மூலம் மும்பையில் உள்ள ஹிட்டன் ஜெம்ஸ் எனப்படும் மறைக்கபட்ட பொக்கிஷங்களை காணும் வாய்ப்புகள் வழங்கபடுகிறது.

ஊபர் ஆப்பில் உள்ள ஊபர் டூரிஸ்டர் என்று உள்ள ஹிட்டன் வியூ எனப்படும் மறைக்கப்பட்ட அம்சத்தை எப்படி அன்லாக் செய்யலாம் என விவரமாக தெரிந்து கொள்வோம்;

(*) ஊபர் ஆப்-பை ஏப்ரல் 3, 2016 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணிக்கு இடையில் திறக்கவும்.

(*) புரமோஷன் செக்‌ஷனில் (பிரிவு), ஊபர்டூரிஸ்டர் என்ற கோட்-டை நிரப்பவும்.

(*) ஹிட் செய்து, ஊபர்டூரிஸ்டர் என்று கோரிக்கை சமர்பிக்கவும்.

(*) உங்களுக்கு இணைப்பு கிடைத்தால், 3 பயணியர்களுக்கு, 5 டூர் செய்யும் தேர்வுகள் கிடைக்கும்.

(*) அனைத்து டூர்களும் 90 நிமிட நேரத்திற்கு நடத்தபடும். நடந்து செல்லும் வகையிலான இந்த டூர்கள் அனைத்தும், நிபுணர்கள் மூலம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

ubertourister-campaign-in-mumbai-on-3-april

(*) இதற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் கோரிக்கைகளை ஒரு முறைக்கு மேல் சமர்பிக்க வேண்டும்.

(*) ஊபர் டூரிஸ்டர் பிரச்சாரத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். இதனால், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

கைடட் டூர் என்ற பெயரில் நிபுணர்கள் மூலம் நடத்தபடும் இந்த டூர், மும்பையில் இருக்கும் எவரையும் அதிசயிக்க வைக்கும். இதில், கண்ணுக்கினிய பாந்த்ரா, பாம்பே ஃபோர்ட் (கோட்டை), யம் மாட்டுங்கா, தானேவில் உள்ள எறியில் பயணம் என பல்வேறு முக்கிய அம்சங்கள் உள்ளன.

வாடிக்கையாளர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.

English summary
App-based taxi service provider Uber Partners with American Tourister for providing Special Mumbai Treat to citizens of Mumbai. This UberTourister campaign is developed in partnership by Uber and American Tourister. This Campaign is held on April 3, 2016. Selected individuals will be offered this Guided Tour for Free by Experts. To know more, check here...
Story first published: Saturday, April 2, 2016, 10:55 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark