2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

Written By:

இந்திய வாகன சந்தையானது மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக உள்ளது. இதனை உணர்ந்து வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், எக்கசக்கமான கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்த 2016-ஆம் ஆண்டின் பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் குறித்த முழு விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

இந்த 2016-ஆம் ஆண்டில், 6 மாதங்களிலேயே விட்டாரா பிரஸ்ஸா, டாடா டியாகோ மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா உள்ளிட்ட ஏராளமான மாடல்கள் அறிமுகம் செய்யபட்டது.

இதே நேரத்தில், சொகுசு கார் மாடல்களான பென்ட்லீ பென்டைகா, ஜாகுவார் எக்ஸ்இ மற்றும் ஸ்கோடா சூப்பர்ப் உள்ளிட்டவையும் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

இந்த 2016 பிற்பாதியில், ஏராளமான கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2016 ஆடி ஏ4;

2016 ஆடி ஏ4;

எளிமையான மற்றும் பெரிய அளவிலான புதிய தலைமுறை 2016 ஆடி ஏ4 சொகுசு கார், நவீன அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த 2016 ஆடி ஏ4 காருக்கு, ஆடி நிறுவனம் ஆடி ஏ4 மாடலின் அதே 2.0 லிட்டர் இஞ்சினை பொறுத்த உள்ளனர். இந்த இஞ்ஜின், மோட்டார் 190 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

கூடுதலாக, ஆடி நிறுவனம், 1.4-லிட்டர் டிஎஸ்ஐ (TSI) டர்போ பெட்ரோல் இஞ்ஜின் சேர்த்து கொள்ள உள்ளது. இந்த இஞ்ஜின் 150 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும். இந்த 2016 ஆடி ஏ4 கார், 2.0-லிட்டர் இஞ்ஜினும் கொண்டிருக்கும்.

பழைய ஆடி ஏ4 மாடலின் இஞ்ஜின், சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், 2016 ஆடி ஏ4 காரின் இஞ்ஜின், 7-ஸ்பீட் டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும். இது 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடனும் வெளியாகும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 38 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஆகஸ்ட் 2016

ஹூண்டாய் டூஸான்;

ஹூண்டாய் டூஸான்;

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், இந்த 2016-ஆம் ஆண்டின் முதல் பாதி வரை சற்று அமைதியாகவே இருந்தது. எனினும், இந்த நிறுவனம், விரைவில் தங்களின் மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் டூஸான் மாடலை அறிமுகம் செய்ய உள்ளனர்.

ஹூண்டாய் டூஸான் மாடல், ஹூண்டாய் தயாரிப்புகளின் புகழ்மிக்க அதே ஃப்ளூயிடிக் ஸ்ட்ரக்சர் டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டிருக்கும். இந்த ஹூண்டாய் டூஸான், ஹூண்டாய் க்ரேட்டாவுக்கு மேலாகாவும், சான்ட்டா பீ மாடலுக்கு கீழாகவும் வகைபடுத்தப்படும்.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

ஹூண்டாய் டூஸான், ஹூண்டாய் டூஸான் மாடலின் சிறிய வடிவம் ஆகும். ஹூண்டாய் டூஸான், டீசல் இஞ்ஜின் மற்றும் பெட்ரோல் இஞ்ஜின் ஆகிய 2 தீவுகளில் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் வேரியன்ட், 1.4 லிட்டர் டி-ஜிடிஐ (T-GDI) டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டதாக இருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 18 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; செப்டம்பர் 2016

ஹூண்டாய் எலன்ட்ரா;

ஹூண்டாய் எலன்ட்ரா;

ஹூண்டாய் நிறுவனம், தொடர்ந்து மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பிரமியம் மாடலான ஹூண்டாய் எலன்ட்ரா தான் ஹூண்டாய் நிறுவனம், அடுத்து அறிமுகம் செய்ய உள்ள மாடல் ஆகும்.

ஹூண்டாய் எலன்ட்ரா, புதிய பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. இது, ஹூண்டாய் நிறுவனம் வழக்கமாக பின்பற்றி வரும் ஃப்ளூயிடிக் டிசைன் மொழியில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

கூபே போல் காட்சி அளிக்கும் இந்த ஹூண்டாய் எலன்ட்ரா மாடலுக்கு, 2.0-லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.6-லிட்டர் டர்போ டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

இதன் பெட்ரோல் இஞ்ஜின் 147 பிஹெச்பியையும், இதன் டீசல் இஞ்ஜின் 125 பிஹெச்பியையும், வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹூண்டாய் எலன்ட்ரா மாடல், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 16 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; செப்டம்பர் 2016

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ்;

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ்;

மாருதி நிறுவனம் அறிமுகம் செய்த பிரமியம் மாடலான பலேனோ தான், இந்நிறுவனத்திற்கு அதிக அளவில் விற்பனை அள்ளி குவித்த மாடல் ஆகும்.

எனினும், இது பிரிமியம் செக்மென்ட்டின் போட்டியில் சற்று பின் தங்கியே காணப்பட்டது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் (ரேலி ஸ்போர்ட்) என்பது, மாருதி பலேனோவின் கூடுதல் திறன்மிக்க மாடல் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ், புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இது, 112 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிசைன் படி, மாருதி சுஸுகி பலேனோ ஆர்எஸ் மாடலின் முன் பக்கத்தில், பக்கவாட்டில் மற்றும் பின் பக்கத்தில், சிறிய பாடி கிட்கள் உள்ளன. மேலும், இது ஆர்எஸ் (ரேலி ஸ்போர்ட்) மாடல் என்பதை குறிக்கும் வகையில், ஆர்எஸ் டேக் கொண்டிருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 6 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; அக்டோபர் - நவம்பர் 2016

ஆடி எஸ்க்யூ7;

ஆடி எஸ்க்யூ7;

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸுக்கு போட்டியாக, ஆடி நிறுவனம் தங்களின் கூடுதல் திறன்மிக்க எஸ்யூவியான ஆடி எஸ்க்யூ7 மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

கூடுதல் திறன்மிக்க மாடலான ஆடி எஸ்க்யூ7, 4.0-லிட்டர் ட்வின் டர்போ வி8 டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 435 பிஹெச்பியையும், 900 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

ஆடி எஸ்க்யூ7 மாடலில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் கம்ப்ரெஸ்ஸர், இதன் பிரேத்யேகமான அம்சமாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் கம்ப்ரெஸ்ஸர், இண்டக்ஷன் சிஸ்டத்தில் காற்றின் சுழற்ச்சியை அதிகரித்து, ட்வின் டர்போ சார்ஜர்களுக்கு உதவிகரமாக இருக்கிறது.

ஆடி எஸ்க்யூ7 எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடுகிறது. பென்ட்லீ பென்டைகா மாடலில் உள்ளது போல், இந்த ஆடி எஸ்க்யூ7 எஸ்யூவியில் ஆக்டிவ் ரோல் பார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 1 கோடி முதல் 1.5 கோடி ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; அக்டோபர் 2016

ஜீப் கிரான்ட் செரோக்கீ

ஜீப் கிரான்ட் செரோக்கீ

ஜீப் கிரான்ட் செரோக்கீ மாடலின் அறிமுகத்தின் மூலம், ஜீப் பிரான்ட், இந்தியாவில் பிரவேசம் செய்ய உள்ளது. ஜீப் நிறுவனம், செரோக்கீ-வில் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளனர்.

முதலாவது மாடலான ஸ்டாண்டர்ட் கிரான்ட் செரோக்கீ, 3.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும். 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட இந்த இஞ்ஜின் 240 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

ஜீப் கிரான்ட் செரோக்கீ, ஹீட்டட் அன்ட் வெண்டிலேட்டட் சீட்கள், பானோராமிக் சன் ரூஃப், சாட்டலைட் நேவிகேஷன், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்சிங் கேமரா, எலக்ட்ரிக் டெயில்கேட், 20 இஞ்ச் அளவிலான குரோம் அல்லாய் வீல்கள் பொருத்தபட்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 35 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஜூலை - அகஸ்ட் 2016

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி;

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி;

ஜீப் நிறுவனம், தங்களின் ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலையும் இந்தியாவிற்குள் கொண்டு வர உள்ளனர். எஸ்ஆர்டி தான், ஜீப் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பிரான்ட் ஆகும்.

ஹெட்லேம்ப்கள், ஃபிரண்ட் புரோஃபைல், பிளாக் எஸ்ஆர்டி வீல்கள் உள்ளிட்டவற்றில் எக்கசக்கமான பிளாக் எலமன்ட்கள் உள்ளன.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலின் இன்டீரியரில், பெஸ்போக், கார்பன் ஃபைபர் இன்சர்ட்கள் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி, 6.4 லிட்டர் இஞ்ஜின் கொண்டிருக்கும். இதன் இஞ்ஜின், 482 பிஹெச்பியை எட்டும் திறன் கொண்டுள்ளது. ஜீப் கிரான்ட் செரோக்கீ எஸ்ஆர்டி, நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 5 நொடிகளில் எட்டிவிடும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 75 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஜூலை - அகஸ்ட் 2016

ஜீப் ரேங்லர் அன்லிமிடெட்;

ஜீப் ரேங்லர் அன்லிமிடெட்;

ஜீப் ரேங்லர் அன்லிமிடெட், ஜீப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள மூன்றாவது மாடலாக இருக்கும். இது ஜீப் நிறுவனத்திடம் இருந்து பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் மாடல் ஆகும்.

ஜீப் ரேங்லர் அன்லிமிடெட் என்பது, இந்தியாவில் உள்ள ரேங்லர் எஸ்யூவியின் 4-டோர் கொண்ட வடிவம் ஆகும்.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

ஜீப் நிறுவனம், இந்த ஜீப் ரேங்லர் அன்லிமிடெட் மாடலுக்கு 2.8 லிட்டர் இஞ்ஜின் பொருத்தியுள்ளனர். இந்த இஞ்ஜின், 200 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

5-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் இந்த மாடல், 4-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 30 லட்சம் முதல் 32 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஜூலை - அகஸ்ட் 2016

மாருதி சுஸுகி இக்னிஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ்;

மாருதி சுஸுகி இக்னிஸ், ஒரு புதிய செக்மென்ட்டையே உருவாக்க உள்ளது. ஹேட்ச்பேக் மாடலை சேர்ந்த இது, எஸ்யூவியின் குணாம்சங்கள் கொண்டுள்ளது.

மாருதி சுஸுகி இக்னிஸ், ஸ்விப்ட் மற்றும் பலேனோ மாடலுக்கு மேலாக வகைப்படுத்தப்படும். மாருதி சுஸுகி இக்னிஸ், நவீன மற்றும் ரெட்ரோ தோற்றம் கொண்டுள்ளது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

இக்னிஸ் மாடலுக்கு, மாருதி சுஸுகி மாடலுக்கு ஆல்ட்டோ கே10 மாடலில் காணப்படும் 1.0 லிட்டர் கே10 இஞ்ஜின் பொருத்தப்படும். மேலும், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இஞ்ஜினும் பொருத்தபட்டிருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 4 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; அக்டோபர் - நவம்பர் 2016

நிஸான் எக்ஸ்-ட்ரெயில்;

நிஸான் எக்ஸ்-ட்ரெயில்;

நிஸான் நிறுவனம், இந்தியாவின் முழு முதல் ஹைப்ரிட் எஸ்யூவியான நிஸான் எக்ஸ்-ட்ரெயில் மாடலை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர். பழைய எக்ஸ்-ட்ரெயில், டீசல் இஞ்ஜின் கொண்டிருந்தது.

புதிய நிஸான் எக்ஸ்-ட்ரெயில், பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் இஞ்ஜிகளை கூட்டாக கொண்டிருக்கும்.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

புதிய நிஸான் எக்ஸ்-ட்ரெயில் மாடலின் பெட்ரோல் இஞ்ஜின், 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். மேலும், இந்த பெட்ரோல் இஞ்ஜினுடன் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த பெட்ரோல் இஞ்ஜின் 115 பிஹெச்பியையும், எலக்ட்ரிக் மோட்டார் 40 பிஹெச்பியையும் வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும். நிஸானின் இந்த எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி, டிசைன் பொருத்த வரை, தற்போதைய ட்ரெண்டை ஒட்டி அமைந்துள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 32 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி

டாடா ஹெக்ஸா;

டாடா ஹெக்ஸா;

டாடா ஆரியா எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இதே டாடா ஆரியாவை வேறு வடிவத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அனைத்து கருத்துகளையும் சரியான முறையில் கேட்டு ஏற்று கொண்ட டாடா நிறுவனம், இதன் டிசைனை கட்டாயம் ஈர்க்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. இதன் டிசைன் ஆங்க்குளார் வடிவத்திலும், ட்ரெண்டிற்கு ஏற்றவாரும் உள்ளது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

டாடா ஆரியா தோற்றம் படி எம்பிவி போல் காட்சி அளித்தது. ஆனால் டாடா ஹெக்ஸா, எஸ்யூவி போல் காட்சி அளிக்கிறது.

டாடா ஹெக்ஸா எஸ்யூவி, சஃபாரி ஸ்டார்ம் மாடலில் காணப்படும் 2.2-லிட்டர் வேரிகார் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இதன் இஞ்ஜின், 156 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 13 லட்சம் முதல் 18 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; ஜுலை 2016

டாடா நெக்ஸன்;

டாடா நெக்ஸன்;

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள மற்றொரு முக்கியமான மாடல் ஆகும்.

டாடா நெக்ஸன், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், கான்செப்ட் வடிவில் காட்சிபடுத்தபட்டது. எனினும். இதன் உற்பத்தி மாடலின் டிசைன் ஆனது, கான்செப்ட் நிலையில் காணப்பட்டது போல் இருக்கும்.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவி டிசைன் விஷயத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் எக்ஸ்டீரியர் மட்டுமல்லாது இதன் இன்டீரியர் டிசைனும் நயமானதாகவும், கூர்மையானதாக உள்ளது. ஆடி மற்றும் மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார் மாடல்களில் காணப்படும் ஃப்லோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இந்த டாடா நெக்ஸன் காம்பேக்ட் எஸ்யூவியிலும் பொருத்தபட்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 6.5 லட்சம் முதல் 9 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; நவம்பர் 2016

டாடா கைட் 5 (டியாகோ செடான்);

டாடா கைட் 5 (டியாகோ செடான்);

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் 10,000-வது கார், அறிமுகம் செய்யபட்ட நாளில் இருந்து இரண்டு மாதத்தில் வெளியிடப்பட்டது.

நீண்ட காலமாக போட்டியில் பின் தங்கி இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தற்போது நல்ல நல்ல மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது.

டாடா கைட் 5, டியாகோவில் இருந்து அமைக்கப்பட்ட சப்-4-மீட்டர் காம்பேக்ட் செடான் ஆகும்.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

டாடா கைட் 5, டாடா டியாகோ போன்றே காட்சி அளிக்கிறது. அனால், இதன் பூட் மற்றும் மூடி (லிட்) சற்று பிரத்யேகமாக காணப்படுகிறது.

டாடா கைட் 5, டாடா செஸ்ட் மாடலுக்கு கீழாக வகைப்படுத்தபட்டுள்ளது.

டாடா கைட் 5, டாடா இன்டிகோ இசிஎஸ் மாடலுக்கு மாற்றாக அமைய உள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 4.5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; நவம்பர் 2016

ஃபோர்டு மஸ்டாங்;

ஃபோர்டு மஸ்டாங்;

ஃபோர்டு நிறுவனம், தங்களின் ஃபோர்டு மஸ்டாங் மாடலை இந்தியாவிற்குள் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளனர்.

6-ஆம் தலைமுறை மஸ்டாங் மாடலான இது, எடை குறைவானதாகவும், திடமாகவும் இருக்கும்.

இந்த ஃபோர்டு மஸ்டாங்கில், ஏராளமான தரம் மிக்க மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது.

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

சர்வதேச அளவில், ஃபோர்டு மஸ்டாங், 3 விதமான ட்யூன்களில் கிடைக்கும்.

இந்தியாவிற்கான ஃபோர்டு மஸ்டாங், 5.0 லிட்டர், வி8 இஞ்ஜின் கொண்டிருக்கும். இதன் இஞ்ஜின், 437 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும்.

இதன் இஞ்ஜின், பேட்டில் ஷிஃப்டர்கள் உடைய 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்க்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 80 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுக தேதி ; 2016 இறுதி

English summary
India's Automobile industry is growing in very fast pace. Already in first half of 2016, India witnessed car launches, which included Maruti's Vitara Brezza, Tata Tiago, and Toyota Innova Crysta. Luxury cars like Bentley Bentayga, Jaguar XE, and Skoda Superb were also luanched. There are lots of Cars waiting to be launched in second Half of 2016. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark