இந்த ஆண்டு விற்பனைக்கு உறுதியான புதிய கார்கள்... உங்களுக்கு கையேடு போன்று பயன்படும்!

Written By:

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமாகப் போகும் புதிய கார்களின் தெரிந்து கொள்ளும் முன்னோட்ட நிகழ்ச்சியாக டெல்லி சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ அமைந்தது. இந்தநிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்களில் இந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடல்களை மட்டும் தனியாக எடுத்து பட்டியலிட்டிருக்கிறோம்.

இந்த பட்டியல் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம். இந்த ஆண்டில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

01. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மாருதி விட்டார பிரெஸ்ஸா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த புதிய கார் மாடலுக்கான பெரும்பாலான மாருதி டீலர்களில் முன்பதிவும் செய்யப்டுகிறது. டீசல் மாடலில் மட்டும் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா டியூவி300 உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு நேர் போட்டியை தரும். இந்த எஸ்யூவியில் 88.5 பிஎச்பி பவரையுமம், 200 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. சற்று தாமதமாக ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலையும் அறிமுகம் செய்ய மாருதி பரிசீலித்து வருகிறது. ஏராளமான நவீன வசதிகள் நிரம்பிய இந்த மாடல் அடுத்த மாதம் 23ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக தகவலும் எமக்கு கிடைத்திருக்கும்.

02. மாருதி இக்னிஸ்

02. மாருதி இக்னிஸ்

எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் தரும் ஆதரவை பார்த்து, விலை குறைவான க்ராஸ்ஓவர் மாடல் ஒன்றை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி அறிமுகம் செய்தது. இக்னிஸ் என்ற அந்த மினி க்ராஸ்ஓவர் மாடல் மிகச்சிறப்பான அம்சங்களை பெற்றிருக்கிறது. மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய க்ராஸ்ஓவர் ரூ.5 லட்சத்திற்குள் ஆரம்ப விலை கொண்டதாக வருகிறது. ஸ்விஃப்ட்டில் இடம்பெற்றிருக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டிருக்கிறது.

03. மாருதி பலேனோ ஆர்எஸ்

03. மாருதி பலேனோ ஆர்எஸ்

மாருதி நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக் காரான பலேனோ மாடலின் அதிசக்திவாய்ந்த மாடலாக பலேனோ ஆர்எஸ் என்ற புதிய மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மாருதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய காரில் சுஸுகி நிறுவனத்தின் புத்தம் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரை வழங்க வல்ல இந்த மாடல், மாருதியின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் மாடலாக வெளிவர இருக்கிறது. எஞ்சின் மட்டுமின்றி, கூடுதலாக பிரத்யேக பாடி கிட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால், தோற்றத்தில் சாதாரண மாடலைவிட சற்று மிரட்டலாக இருக்கும்.

04. டாடா ஸீக்கா

04. டாடா ஸீக்கா

விரைவில் பெயர் மாற்றத்துடன் வர இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹேட்ச்பேக் கார் ஸீக்கா. மிகச் சிறப்பான டிசைன் மற்றும் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லி டீசல் எஞ்சின் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். ரூ.4 லட்சத்தையொட்டிய விலையில் எதிர்பார்க்கப்படும் இந்த மாடலில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. எனவே, கொடுக்கும் பணத்திற்கு சிறப்பான பட்ஜெட் மாடலாக இருக்கும். இதனடிப்படையிலான காம்பேக்ட் செடான் மாடலும் எதிர்பார்க்கப்படுகிறது.

05. ஹூண்டாய் டூஸான்

05. ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவியை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. சர்வதேச அளவில் விற்பனையில் இருக்கும் புதிய மாடலை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 135 பிஎச்பி பவரையும், 373 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.18 லட்சம் முதல் ரூ.23 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

06. புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

இந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்களில் முக்கியமானது புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார். கூடுதல் சிறப்பம்சங்கள், தொழில்நுட்பங்களுடன் பிரிமியம் மாடலாக மாறியிருக்கும் புதிய இன்னோவா கார் அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கும். இதனை உறுதி செய்யும் விதத்தில் ரூ.50,000 முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது. எனவே, இந்த காரை வாங்குவதற்கு ஆயத்த பணிகளை வாடிக்கையாளர்கள் துவங்கிவிடலாம். புதிய டொயோட்டா இன்னோவா காரில் 147 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். தற்போதைய 2.5 லிட்டர் டீசல் எஞ்சினைவிட இது 45 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும். இடவசதியும் மேம்பட்டிருப்பதோடு, புதிய தலைமுறை மாடல் பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. அதேபோன்று, விலையிலும் சற்று கூடுதலாக இருக்கும்.

07. புதிய ஸ்கோடா சூப்பர்ப்

07. புதிய ஸ்கோடா சூப்பர்ப்

புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரும் விரைவில் இந்தியா வருகை தர இருக்கிறது. வடிவத்தில் சற்று பெரிதாகவும், எடையில் குறைவாகவும் கட்டமைப்பட்டிருக்கும் இந்த புதிய மாடலில் ஏற்கனவே இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய மாடலில் 177 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 141 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.24 லட்சம் முதல் ரூ.30 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23ந் தேதி இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

08. டட்சன் ரெடிகோ

08. டட்சன் ரெடிகோ

ரெனோ க்விட் பிளாட்ஃபார்மில் நிசான் நிறுவனம் தனது டட்சன் பட்ஜெட் பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் புதிய குட்டி கார் மாடல். இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.3.5 லட்சத்தில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் டட்சன் பிராண்டுக்கு புதுத்தெம்பை அளிக்கும் என நிசான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வர இருக்கிறது.

09. டொயோட்டா பிரையஸ்

09. டொயோட்டா பிரையஸ்

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ஹைபிரிட் கார் மாடல் என்ற பெருமைக்குரிய டொயோட்டா பிரையஸ் காரின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்தியாவில் வி்ற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஹைபிரிட் காரில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றன. இரண்டும் சேர்ந்த அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 163 என்எம் டார்க்கையும் வழங்கும். கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 22.11 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிவிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

10. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

10. ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

டிசைனில் சிறிய மாறுதல்கள், கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றிருக்கும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மார்ச்சில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முகப்பில் புதிய க்ரில் அமைப்பு உள்ளிட்ட சிறிய மாற்றங்கள் இருந்தாலும், குறிப்பாக, இந்த கார் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வருவதே வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டும் அம்சமாக இருக்கிறது. இந்த காரில் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கியர்பாக்ஸ் மாடலைவிட ஏஎம்டி மாடல் ரூ.25,000 கூடுதலாக இருக்கும். நகர்ப்புறத்தில் ஓட்டுபவர்களுக்கு இந்த ஏஎம்டி மாடல் சிறந்த சாய்ஸாக அமையும்.

11.ஃபோக்ஸ்வேகன் அமியோ

11.ஃபோக்ஸ்வேகன் அமியோ

மாருதி டிசையருக்கு போட்டியாக ஃபோக்ஸ்வேகன் விரைவில் களமிறக்க இருக்கும் புதிய காம்பேக்ட் செடான்தான் அமியோ. இந்தியாவுக்காக ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியிருக்கும் முதல் கார் மாடல் என்பதும் அமியோ வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டியிருக்கிறது. ஏனெனில், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் சிறந்த கட்டுமான தரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்ட மாடலாக இருக்கும் என்பதே அதற்கு காரணம். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. ஃபோக்ஸ்வேகன் போலோ காரைவிட கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என்பதால், நிச்சயம் ரூ.5.5 லட்சத்திற்கு மேலான ஆரம்ப விலை கொண்டதாக இருக்கும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

12. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

12. ஃபோக்ஸ்வேகன் டிகுவான்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரிமியம் எஸ்யூவி மாடலான டிகுவான் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 7 சீட்டர் எஸ்யூவி மாடலான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஹூண்டாய் சான்டா ஃபீ மற்றும் ஹோண்டா சிஆர்வி போன்ற எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால், விலை ரூ.30 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

13. புதிய ஹோண்டா அக்கார்டு

13. புதிய ஹோண்டா அக்கார்டு

புதிய தலைமுறை ஹோண்டா அக்கார்டு கார் இந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது. இந்தியாவில் புதிய அக்கார்டு கார் ஹைபிரிட் மாடலில் வருகிறது. இந்த காரில் 141 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இரண்டும் சேர்ந்து அதிகபட்சமாக 196 பிஎச்பி பவரையும், 306 என்எம் டார்க்கையும் வழங்கும். தாய்லாந்தில் விரைவில் இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்பட இருப்பதால், இந்தியாவிலும் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

14. டாடா ஹெக்ஸா

14. டாடா ஹெக்ஸா

டாடா ஆரியா எம்பிவி காரின் அடிப்படையிலான எஸ்யூவி மாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் டாடா ஹெக்ஸா எஸ்யூவியும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தையொட்டி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹெக்ஸா எஸ்யூவியில் 154 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் கொண்டதாக வருகிறது. ரூ.10 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

15. நிசான் எக்ஸ்ட்ரெயில்

15. நிசான் எக்ஸ்ட்ரெயில்

நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவியி புதிய தலைமுறை மாடலாக மேம்பட்டு, மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. தற்போது ஹைபிரிட் மாடலில் வர இருக்கும் இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாருடன் இணைந்து 142 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும். சிவிடி கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் ஆற்றல் சக்கரங்களுக்கு கடத்தப்படும். ரூ.30 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

16. நிசான் ஜிடி- ஆர்

16. நிசான் ஜிடி- ஆர்

உலக அளவில் புகழ்பெற்ற நிசான் ஜிடி ஆர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் நேரடியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த கார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

 17. ஃபோர்டு மஸ்டாங்

17. ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்காவில் மட்டும் புகழ் பெற்றிருந்த மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடலான ஃபோர்டு மஸ்டாங் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காரில் 435 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 6 ஸ்பீடு செலக்ட்ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. ரூ.70 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது.

18 ரெனோ க்விட் ஏஎம்டி

18 ரெனோ க்விட் ஏஎம்டி

ரெனோ க்விட் கார் 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகிய மாடல்களிலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் ஏஎம்டி மாடல்தான் தற்போது பெரும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த இருமாடல்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

19. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி

19. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி

கடந்த சில ஆண்டுகளாக போக்குக் காட்டி வந்த ஜீப் பிராண்டின் எஸ்யூவி மாடல்கள், ஒருவழியாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்திய வருகையை உறுதி செய்தன. மேலும், இந்தியாவில் ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடல் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜீப் செரோக்கீயின் அதிசக்திவாய்ந்த வேரியண்ட்டான ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலில் 475 எச்பி பவரையும், 637 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 6.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 257 கிமீ வேகம் வரை தொடக்கூடிய வல்லமை பொருந்தியது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஆடி க்யூ5, பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

20. ஹோண்டா பிஆர்வி

20. ஹோண்டா பிஆர்வி

இந்தியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் காம்பேக்ட் எஸ்யூவி மாடல் ஹோண்டா பிஆர்வி. காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் வரும் 7 சீட்டர் மாடல் என்பதே இதன் மிகப்பெரிய பலம். இந்த எஸ்யூவியில் 117 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 98 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெற்றிருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை தரும். ரூ.8 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையிலான விலை பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

 

English summary
Upcoming Cars in India 2016.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more