ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

Written By:

இந்திய வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையினை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஏராளமான கார் நிறுவனங்கள் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றனர்.

ஹூண்டாய் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 2016-17 ஆண்டுகளில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் 2-வது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது.

1998-ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம், ஹூண்டாய் சான்ட்ரோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அப்போது முதல், தொடர்ந்து தரமான கார்களை வழங்கி வருகிறது.

ஹூண்டாய் நிறுவனம், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு கடுமையான சவால் வழங்கி வருகிறது. ஹூண்டாய் நிறுவனம், இந்த 2016-17 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள மாடல்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஹூண்டாய் இயான் ஃபேஸ்லிஃப்ட்;

ஹூண்டாய் இயான் ஃபேஸ்லிஃப்ட்;

ஹூண்டாய் நிறுவனம் வழங்கும் பொலிவு கூட்டப்பட்ட ஹூண்டாய் இயான் தான், இந்தியாவில் இந்நிறுவனம் வழங்கும் நுழைவு நிலை ஹேட்ச்பேக் ஆகும். ஹூண்டாய் இயான் தான் மாருதி 800 நிறுத்தப்பட்ட பிறகு, 800 சிசி செகம்ன்ட்டில் மீண்டும் மறு பிரவேசம் செய்த முதல் கார் ஆகும்.

மாருதி நிறுவனம், ஆல்ட்டோ 800 மாடலை கொண்டு கடும் போட்டி வழங்கியது. இருந்தாலும், ஹூண்டாய் இயான் ஹேட்ச்பேக், நுழைவு நிலை ஹேட்ச்பேக்குகளுக்கு தரம் நிர்ணயம் செய்யும் மாடலாக உருவகப்படுத்தி கொண்டுவிட்டது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

பொலிவு கூட்டப்பட்ட புதிய ஹூண்டாய் இயான், ஹூண்டாயின் ஃப்ளூயிடிக் டிசைன் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, இந்த மாடலுக்கு வெளிப்புற மாற்றங்கள் செய்யபடும்.

இஞ்ஜின் விவரக்குறிப்புகளில் எந்த விதமான மாற்றங்களும் இருக்காது. இந்த புதிய ஹூண்டாய் இயான், 814 சிசி பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 998 சிசி என 2 பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கப்படும். ஹூண்டாய் நிறுவனம், இந்த மாடலை, ஆட்டோமேட்டிக் மாடல் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்விலும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 3 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; அக்டோபர் 2016

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா;

புதிய ஹூண்டாய் எலன்ட்ரா, ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள 6-ஆம் தலைமுறை செடானாக இருக்கும். இதன் எக்ஸ்டீரியர் பொருத்த வரை, குரோம் பூச்சு செய்யப்பட்ட சிங்கிள் கிரில்லுக்கு பதிலாக பெரிய ஹெக்ஸாகனல் பொருத்தப்பட உள்ளது.

எக்ஸ்டீரியர் அம்சங்கள் அதிக அளவில் மாற்றப்பட்ட நிலையில், 5-ஆம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா போன்றே பரிமாணங்கள் கொண்ட போதிலும், 6-ஆம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா சற்று பெரியதாக காட்சி அளிக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

பிரிமியம் செடான் செகம்ன்ட்டில் வகைப்படுத்தபட்டுள்ள இந்த புதிய ஹூண்டாய் எலன்ட்ரா, செவர்லே க்ரூஸ் மற்றும் ஸ்கோடா லாரா ஆகிய மாடல்களுடன் போட்டி போட உள்ளது.

6-ஆம் தலைமுறை ஹூண்டாய் எலன்ட்ரா, 2015 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் காட்சிபடுத்தபட்டது. இந்த 2015 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில், 2.0 லிட்டர் கொள்ளளவுடன் காணப்பட்ட இந்த மாடல், 147 பிஹெச்பியையும், 179 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டது.

இந்தியாவிற்கான புதிய ஹூண்டாய் எலன்ட்ரா, 1.6 லிட்டர் டீசல் இஞ்ஜின் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ள வகையில் மாற்றி அமைக்கபடும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 15 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; அக்டோபர் - நவம்பர் 2016

ஹூண்டாய் டூஸான்;

ஹூண்டாய் டூஸான்;

எஸ்யூவி செகம்ன்ட்டில், ஹூண்டாய் நிறுவனம் சிறந்த அளவில் விற்பனையாகும் க்ரெட்டா மற்றும் சான்ட்டா பீ ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. எனினும், இந்த 2 மாடல்களுக்கும் இடைவில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், ஹூண்டாய் நிறுவனம், புதிய டூஸான் எஸ்யூவியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படக்கூடிய புதிய ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 3-ஆம் தலைமுறை மாடல் ஆகும். புதிய ஹூண்டாய் டூஸான், சான்ட்டா பீ மாடலின் சிறிய கார் போல் காட்சி அளிக்கிறது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, ஹூண்டாயின் ஃப்ளூயிடிக் ஸ்டரக்சர் 2.0 டிசைன் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி, 114 பிஹெச்பியை வெளிபடுத்தும் 1.7 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்விலும், 182 பிஹெச்பியை வெளிபடுத்தும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்விலும் வெளியிடப்படும்.

கியர்க்பாக்ஸ் தேர்வை பொருத்த வரை, இந்த 2 இஞ்ஜின்களும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 18 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; 2016 இறுதி / 2017 துவக்கம்

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா;

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா;

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா, 2016 பெய்ஜிங் மோட்டார் ஷோவில், கான்செப்ட் வடிவில் காட்சிபடுத்தபட்டது.

குரோம் பூச்சு கொண்ட பெரிய கிரில் முதல் அம்சமாக காட்சி அளிக்கும் ஹெட்லேம்ப்கள் வரை, புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா, அதன் இளைய இணை மாடலான எலைட் ஐ20 மாடலின் ஏராளமான அம்சங்களை ஏற்று கொண்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

சமீப காலமாக, நிகழ் தலைமுறை ஹூண்டாய் வெர்னா இழந்த ஈர்ப்பை, புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா, மீட்டு கொண்டு வரும் வகையில், இதன் டிசைன் அட்டகாசமாக உள்ளது.

நிகழ் தலைமுறை ஹூண்டாய் வெர்னாவில் உள்ள, 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் இஞ்ஜின் தேர்வுகள், அடுத்த தலைமுறை ஹூண்டாய் வெர்னாவிலும் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா, மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் வெளியாகும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 8 லட்சம் ரூபாய் முதல் 14 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; ஜூன் - ஜூலை 2017

ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ்;

ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ்;

ஹூண்டாய் நிறுவனம், எம்யூவி செகம்ன்ட்டில் மட்டும் தான் எந்த வாகனங்களையும் வழங்காத நிலை நீடித்து வந்தது.

இந்த குறையை தீர்க்கும் வகையில், ஹூண்டாய் நிறுவனம், ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ் எம்யூவி என்ற புதிய எம்யூவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ் எம்யூவி, முன்னதாக 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்டது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ் எம்யூவி (கான்செப்ட்) மாடல், ஹூண்டாயின் ஐ10 காரின் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ் எம்யூவி, மாருதி எர்டிகா மற்றும் ஹோண்டா மொபிலியோ ஆகிய மாடல்களுடன் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெர்னா மாடலில் உள்ளது போல், ஹூண்டாய் ஹெக்ஸா ஸ்பேஸ் எம்யூவி-க்கும், ஹூண்டாய் நிறுவனம் 1.4 லிட்டர் இஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் இஞ்ஜின் பொருத்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 7 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; 2017 துவக்கம்

ஹூண்டாய் கார்லினோ;

ஹூண்டாய் கார்லினோ;

சப்-4-மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செகம்ன்ட்டில், சமீபத்தில் தான் மாருதி நிறுவனம், விட்டாரா ப்ரெஸ்ஸா அறிமுகம் செய்து அபார வெற்றி கண்டது.

இதே போல், தங்கள் நிறுவனம் சார்பாக, ஹூண்டாய் நிறுவனம் இது வரை எந்த ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காரையும் வழங்காத நிலை நீடித்து வருகிறது. இதனால் காம்பேக்ட் எஸ்யூவி மாடலில், ஹூண்டாய் நிறுவனம் ஹூண்டாய் கார்லினோ என்ற புதிய கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம், இந்த ஹூண்டாய் கார்லினோ மாடலை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் நிலையில் காட்சிபடுத்தியது.

ஹூண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் கார்களின் பட்டியல் - முழு விவரம்

ஹூண்டாய் கார்லினோ காம்பேக்ட் எஸ்யூவி, விரைவில் தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்ல உள்ளது. இந்த ஹூண்டாய் கார்லினோ, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி -க்கு கீழாக வகைபடுத்தப்படும்.

ஹூண்டாய் கார்லினோ காம்பேக்ட் எஸ்யூவிக்கு, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.4 டீசல் இஞ்ஜின் தேர்வுகளில் வழங்கப்படலாம்.

ஹூண்டாய் கார்லினோ காம்பேக்ட் எஸ்யூவி, மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா டியூவி300 ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 7 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் ; 2017 இறுதி / 2018 துவக்கம்

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2016 பிற்பாதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள கார்கள் - முழு விவரம்

மாருதி நிறுவனம் வருங்காலத்தில் வெளியிட உள்ள கார் மாடல்கள் - முழு விவரம்

இந்த ஆண்டு விற்பனைக்கு உறுதியான புதிய கார்கள்... உங்களுக்கு கையேடு போன்று பயன்படும்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
South Korea based car manufacturer Hyundai has become the second largest car maker in India. Hyundai has given best fight to Maruti Suzuki in terms of offering best in quality and performance oriented cars. Hyundai Motors has plans to introduce lots of Models in India. To know more on Upcoming Hyundai Car Models in India, to be introduced by Hyundai, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark