மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

Written By:

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனங்களை அறிமுகம் செய்வதில் மும்முரமாக உள்ளது.

மஹிந்திரா நிறுவனம், இந்தியாவில் ஏராளமான வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம், 2016-17 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள வாகனங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா;

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா;

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் மும்பையில் தலைமை அலுவலகம் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம், 2011-ஆம் ஆண்டில் இந்தியாவில் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில் 21-வது இடத்தில் உள்ளது.

மேலும், இது ஃபார்ச்சூன் இந்தியா 500 கம்பெனிகளில் ஒன்றாகவும் உள்ளது.

மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், வருங்காலத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் நோக்கி வருகிறது. 2016-17 இந்திய வாகன சந்தைகளில் ஏராளமான வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெட்ரோல்;

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெட்ரோல்;

உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும், டீசல் வாகனங்களின் தடை பிரபலமாகி வருகிறது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கலுக்கும் இருக்கும் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. மேலும், பெட்ரோல் வாகனங்களின் மவுசு கூடிக்கொண்டே வருகிறது.

மஹிந்திரா நிறுவனம், டீசல் மாடல்களில் சில சிறந்து விற்பனை ஆகும் மாடல்களை கொண்டுள்ளது. எனினும் இந்நிறுவனத்தின் ரேஞ்ச்சில் பெட்ரோல் வாகனங்கள் இல்லாதது குறையாகவே உள்ளது.

இந்த குறையை தீர்க்க தான் மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெட்ரோல் மாடலை அறிமுகம் செய்வதில் முனைப்புடன் உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

டிசைன் பொறுத்த வரை, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாடலில் பெரிய எதிர்பார்ப்புகள் கொள்ள தேவை இல்லை.

ஏற்றுமதிக்கான ஸ்கார்ப்பியோ மாடலில் உள்ள அதே 2.2 லிட்டர் இஞ்ஜின் தான் இந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பெட்ரோல் மாடலிலும் பொருத்தப்பட உள்ளது.

இதன் இஞ்ஜின், 140 பிஹெச்பியையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் தேதி ; ஆகஸ்ட் - செப்டம்பர் 2016

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல்;

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல்;

மஹிந்திரா நிறுவனம் வழங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500, சிறந்த அளவில் விற்பனையாகும் மற்றொரு மாடல் ஆகும். ஸ்கார்ப்பியோ எதிர்கொள்ளும் அதே பிரச்னை தான், மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மாடலும் எதிர்கொண்டு வருகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் பெட்ரோல் மாடலின் அறிமுகம், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கான விலை இடைவெளியை குறைக்க உதவும்.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பெட்ரோல் மாடலுக்கும், முன்பு குறிப்பிட்டிருந்த அதே 2.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் தான் பொருத்தப்படும்.

இந்த இஞ்ஜின், 140 பிஹெச்பியையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 11 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் தேதி ; ஆகஸ்ட் - அக்டோபர் 2016

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ;

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிபடுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், அதன் சூப்பரான டிசைன் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மாடலின் கூபே வடிவம் ஆகும்.

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ, டிசைன் மொழி விஷயத்தில் மஹிந்திரா நிறுவனம் வருங்காலத்தை நோக்கி பயணிப்பதை வெளிப்படுத்துகிறது.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ, வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள எஸ்யூவி-களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது.

இந்த மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ மாடலின், பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களுக்கு மஹிந்திரா நிறுவனம், 2.2 லிட்டர் இஞ்ஜின் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டர்போ சார்ஜர்கள் மற்றும் நவீன (அட்வான்ஸ்ட்) கம்பஸ்ஷன் சிஸ்டம் உபயோகிக்கப்படும் இந்த மாடலில் இருந்து, 200 பிஹெச்பிக்கும் கூடுதலான பவர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 20 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் தேதி ; 2017

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஹைப்ரிட்;

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஹைப்ரிட்;

மஹிந்திரா நிறுவனம், அவ்வப்போது மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் ஹைப்ரிட் மாடலை காட்சிபடுத்தி வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஹைப்ரிட் மாடலும் அதே இஞ்ஜின் கான்ஃபிகரேஷன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டீசல் விலை, பெற்றோலின் விலைக்கு நிகராக நெருங்கினாலும், டீசல் இஞ்ஜினின் தேவையை இந்த ஹைப்ரிட் இஞ்ஜின் தீர்த்து விடும் என தெரிகிறது. பெட்ரோல் இஞ்ஜின் கொண்ட மாடல்களை காட்டிலும், டீசல் இஞ்ஜின் கொண்ட மாடலுக்கு அதிக இழுக்கும் திறன் உள்ளதால், டீசல் மாடல்களுக்கு என்றும் அதிக வரவேற்பு உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஹைப்ரிட் மாடலுக்கு, 2.2-லிட்டர் எம் ஹாக் டீசல் இஞ்ஜின் பொருத்தப்படும். கூடுதலாக, பொருத்தபட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார், கூடுதல் செயல்திறன் மற்றும் மைலேஜ் வழங்குகிறது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 15 லட்சம் ரூபாய் முதல் 17 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் தேதி ; 2017

மஹிந்திரா சாங்யாங் டிவோலி;

மஹிந்திரா சாங்யாங் டிவோலி;

மஹிந்திரா நிறுவனம், காம்பேக்ட் எஸ்யூவி செக்மன்ட்டில் அதிகப்படியான மாடல்களை உருவாக்கிவிட்டது. அப்படி இருந்த போதும், ரெனோ டஸ்ட்டர் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய மாடல்கள் இருந்து எழும் போட்டியை சமாளிக்க முடியவில்லை.

இந்த இடைவெளியை குறைக்கும் வகையில், மஹிந்திரா நிறுவனத்தின் கட்டுபாட்டில் உள்ள தென் கொரியாவை மையமாக கொண்டு இயங்கும் சாங்யாங் நிறுவனம், டிவோலி எஸ்யூவியை அறிமுகம் செய்கிறது.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

மஹிந்திரா சாங்யாங் டிவோலி, 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் தேர்வுகள் கொண்டிருக்கும்.

இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 126 பிஹெச்பியையும், 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

இதன் டீசல் இஞ்ஜின், 113 பிஹெச்பியையும், 300 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 8 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் தேதி ; 2016 இறுதி / 2017 துவக்கம்

மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டன்;

மஹிந்திரா சாங்யாங் ரெக்ஸ்டன்;

மஹிந்திரா வழங்கும் சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவியின் சமீபத்தில் தான் வெளியாகியது. தற்போது வெளியாகிய படங்கள் படி, அதன் கட்டு மஸ்தான தோற்றத்துடன் ஆக்ரோஷமாகவும், துணிச்சலுடனும் காணப்படுகிறது.

லேட்டர் ஃபிரேம் உள்ள 2017 சாங்யாங் ரெக்ஸ்டன், முந்தைய மாடலை காட்டிலும் எடை குறைவாக உள்ளது. இதனால், இந்த மாடல் கொண்டுள்ள குறைந்த எடை, மைலேஜ் வழகுவதற்கு அனுகூலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள கார்கள் - முழு விவரம்

மஹிந்திராவின் 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி, புதிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் இந்த 2017 சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி மாடலில் பொருத்தப்படும்.

விலை, அறிமுகம்;

விலை, அறிமுகம்;

எதிர்பார்க்கப்படும் விலை ; 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய்

எதிர்பார்க்கப்படும் தேதி ; 2017

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மஹிந்திரா தொடர்புடைய செய்திகள்

சாங்யாங் தொடர்புடைய செய்திகள்

ஸ்கார்ப்பியோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Mahindra & Mahindra is India's largest SUV manufacturer in India. It has been innovating to produce newer vehicles with best of technology. This MNC headquartered out of Mumbai in India was ranked 21st in list of top companies in India in 2011 for Fortune India 500 companies. Mahindra has lined up several models for launch in 2016-17. To know more, check here...
Story first published: Thursday, June 23, 2016, 17:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark