விரைவில் இந்தியா வரும் புதிய ரெனோ கார்கள்!

Written By:

சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திராவுடனான உறவை முறித்துக் கொண்டு இந்திய மார்க்கெட்டில் தடாலடியாக களமிறங்கிய ரெனோவுக்கு, டஸ்ட்டர் எஸ்யூவி மூலம் முகவரி கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட க்விட் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அந்த நிறுவனத்தின் மதிப்பை எகிற செய்துள்ளது.

க்விட் கொடுத்த உற்சாகத்தையடுத்து, தற்போது பல புதிய கார் மாடல்களை களமிறக்க ரெனோ திட்டமிட்டிருக்கிறது. இந்தியர்கள் அதிகம் விரும்பும் ரகத்தில் கார்களை களமிறக்க முடிவு செய்து அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அவ்வாறு, அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் புதிய கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

 சக்திவாய்ந்த க்விட் கார்

சக்திவாய்ந்த க்விட் கார்

தற்போது க்விட் கார் 800சிசி பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனையாகி வருகிறது. இதன் செக்மென்ட்டில் ஓரளவு சக்திவாய்ந்த மாடலாகவே இருக்கிறது இருப்பினும், அந்த காரின் எஸ்யூவி ஸ்டைலிலான தோற்றத்திற்கு இன்னும் சற்று சக்திவாய்ந்த எஞ்சின் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. இதனை பூர்த்தி செய்யும் விதத்தில், புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலிலும் க்விட் வர இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 90-95என்எம் டார்க்கையும் வழங்கும்.

 க்விட் ஆட்டோமேட்டிக்

க்விட் ஆட்டோமேட்டிக்

இந்த புதிய 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட க்விட் கார் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருவதால், வாடிக்கையாளர்களிடத்தில் அதிக ஆவல் நிலவுகிறது. ரூ.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே 1.5 லட்சம் முன்பதிவுகளுடன் க்விட் கார் அசாத்திய பலம் கொண்ட மாடலாக விஸ்வரூம் எடுத்துள்ளது. இந்த நிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வரும் புதிய 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட க்விட் கார் அதிக முன்பதிவுகளை பெறும் என்பது திண்ணமாக கூறலாம். இது மாருதிக்கும், ஹூண்டாய்க்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

ரெனோ கேப்டூர்

ரெனோ கேப்டூர்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டஸ்ட்டருடன் அதிரடி காட்டிய, ரெனோ நிறுவனம் இந்தியர்களின் எஸ்யூவி மோகத்தை கருத்தில்கொண்டு கேப்டூர் எஸ்யூவியையும் களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் ரஷ்யாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய எஸ்யூவியை விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யும் முனைப்புடன் ரெனோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கேப்டூர் சிறப்பம்சங்கள்

கேப்டூர் சிறப்பம்சங்கள்

டஸ்ட்டரைவிட பிரிமியம் மாடலாக நிலைநிறுத்தப்படும். இது முழுமையான எஸ்யூவியாக இல்லாமல் க்ராஸ்ஓவர் ரக ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த எஸ்யூவி ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் எதிர்பார்க்கலாம். ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய மாடலை ரெனோ களமிறக்க திட்டமிட்டு உள்ளது.

 மினி எஸ்யூவி

மினி எஸ்யூவி

மஹிந்திரா கேயூவி100, மாருதி இக்னிஸ் போன்ற கார்களுக்கு போட்டியை தரும் விதத்தில் புதிய மினி எஸ்யூவி மாடலையும் ரெனோ களமிறக்க திட்டமிட்டிருக்கிறது. HBC என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்படும் இந்த எஸ்யூவி மாடல், க்விட் காரின் அடிப்படையிலான மினி எஸ்யூவி மாடலாக உருவாக்கப்படுகிறது. இந்த காரிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் 64 -69 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும் என்பதோடு, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் இருக்கும். ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கலாம்.

Photo Credit: IAB

 காம்பேக்ட் செடான்

காம்பேக்ட் செடான்

விரைவில் வர இருக்கும் டாடா கைட்-5 காம்பேக்ட் செடான் காருக்கு இணையான ரகத்தில் புதிய மினி செடான் ரக காரையும் ரெனோ அறிமுகப்படுத்த உள்ளது. இதுவும் க்விட் கார் உருவான அதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்படுகிறது. LBC என்ற குறியீட்டுப் பெயரில் இந்த கார் வடிவமைக்கப்படுகிறது. இந்த காரிலும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படும். ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் இடையிலான விலையில் வருகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Photo Credit: IAB

புதிய ரெனோ டஸ்ட்டர்

புதிய ரெனோ டஸ்ட்டர்

புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியுடன் மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், இந்த எஸ்யூவியின் நீளம் 700மிமீ வரை அதிகரிக்கப்படுகிறது. எஞ்சினில் அதிக மாற்றங்கள் இருக்காது. தற்போது இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை அதிக எரிபொருள் சிக்கனம் தரும் வகையில் மாற்றங்களை செய்து அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ரெனோ டஸ்ட்டரை எதிர்பார்க்கலாம். ரூ.9 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

காம்பேக்ட் எம்பிவி கார்

காம்பேக்ட் எம்பிவி கார்

ரெனோ லாட்ஜி கார் எதிர்பார்த்த விற்பனையை பதிவு செய்ய தவறியதையடுத்து, இந்த செக்மென்ட்டில் புதிய எம்பிவி ரக காரை அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டிருக்கிறது. இந்த கார் க்விட் உருவாக்கப்பட்ட CMF-A பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்படும். டஸ்ட்டர் எஸ்யூவியில் இருக்கும் அதே எஞ்சின்களை இந்த காரிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது. ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டு துவக்கத்தில் எதிர்பார்க்கலாம்.

 
English summary
Upcoming Renault Cars In India 2016-17.
Story first published: Wednesday, July 13, 2016, 10:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark