விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் புதிய டொயோட்டா கார்கள்!

By Saravana Rajan

குவாலிஸ் கார் மூலம் இந்தியாவில் நுழைந்த டொயோட்டா நிறுவனம் தொடர்ந்து சிறந்த தயாரிப்புகளை களமிறக்கி வாடிக்கையாளர்களிடம் நம்பகத்தன்மையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

எனவே, டொயோட்டாவிடமிருந்து வரும் புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் புதிய டொயோட்டா கார் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர்

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் நவீன சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடலாக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், இந்த ஆண்டு துவக்கத்தில் வந்த புதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியும் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளதால், புதிய தலைமுறை ஃபார்ச்சூனரை விரைவில் களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா உள்ளது.

பிரிமியம் மாடல்

பிரிமியம் மாடல்

புதிய தலைமுறை இன்னோவா கார் போன்றே, புதிய ஃபார்ச்சூனர் காரிலும் பல்வேறு நவீன கால சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும். முகப்பு வடிவமைப்பில் மாற்றங்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவற்றுடன் பார்ப்போரை கவர்ந்திழுக்கும். பழைய மாடலைவிட வீல் ஆர்ச்சுகள் தடிமன் குறைக்கப்பட்டிருக்கிறது. கரொல்லா கார் போன்றே, இரட்டை வண்ணக் கலவையிலான இன்டீரியர் உயர்வகை கார் என்ற அந்தஸ்தை கூட்டுவதாக இருக்கும்.

எஞ்சின் & விலை

எஞ்சின் & விலை

இரண்டுவிதமான டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. இதில், 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் 160 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும். 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களிலும் கிடைக்கும். ரூ.23 லட்சம் முதல் ரூ.25 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா திட்டமிட்டிருக்கிறது.

டொயோட்டா வியோஸ்

டொயோட்டா வியோஸ்

ஹோண்டா சிட்டி காருக்கு நேர் போட்டியாளரை இந்தியாவில் களமிறக்க வேண்டும் என்பது டொயோட்டா நிறுவனத்தின் நீண்ட நாள் ஆசை. அதற்காக, தனது வியோஸ் செடான் காரை இந்தியா கொண்டு வருவதற்கும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. எட்டியோஸ் கார் இருந்தாலும், மிட்சைஸ் மார்க்கெட்டிற்கு தகுந்த சிறப்பம்சங்கள் இல்லை என்பதாலேயே, வயோஸ் காரை அந்த நிறுவனம் அறிமுகம் செய்வதில் முனைப்பாக இருக்கிறது.

டிசைன்

டிசைன்

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மிகச் சிறப்பான டிசைன் கொண்ட மாடல். எனவே, இதன் தோற்றம் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும். கரொல்லா கார் போன்றே, இதன் இன்டீரியரும் மிகச்சிறப்பாக இருக்கும். வசதிகளிலும் குறைவிருக்காது. இடவசதியிலும் மிகச்சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எஞ்சின் & விலை

எஞ்சின் & விலை

இந்த காரில் 107 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 87 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் வருவதற்கு வாய்ப்புள்ளது. ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் களமிறக்கப்படும். அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ரஷ்

டொயோட்டா ரஷ்

டொயோட்டா நிறுவனத்தின் டைகட்சூ துணை நிறுவனம் டெரியோஸ் என்ற பெயரில் இந்த மினி எஸ்யூவியை பல நாடுகளில் விற்பனை செய்கிறது. மேலும், சீனாவை சேர்ந்த ஸோட்டீ ஆட்டோ நிறுவனம் உற்பத்தி உரிமத்தை பெற்று இந்த எஸ்யூவியை ஸோட்டீ நோமட் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. இந்த ஸோட்டீ நோமட் எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்து, இந்தியாவில் பிரிமியர் நிறுவனம் ரியோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், டொயோட்டா நிறுவனம் நேரடியாக தனது பிராண்டில் டொயோட்டா ரஷ் எஸ்யூவியை களமிறக்க திட்டமிட்டிருக்கிறது.

டிசைன்

டிசைன்

வடிவத்தில் சிறியதாக தெரிந்தாலும், ஃபார்ச்சூனர் போன்று ஒரு கம்பீரமான டிசைனை பெற்றிருக்கிறது. டாப் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி விளக்குகள் போன்றவை இருக்கும். 4 பேர் செல்வதற்கான இடவசதியை கொண்டிருக்கும். ரூ.10 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, இந்த மார்க்கெட்டில் நுழைந்துவிட வேண்டும் என்ற உந்துதலை டொயோட்டாவுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.

எஞ்சின் & விலை

எஞ்சின் & விலை

டொயோட்டா ரஷ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், இந்த பெட்ரோல் மாடலை தவிர்த்து, 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வரும் என்று தெரிகிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.14 லட்சத்திற்கு இடையிலான விலையில் எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Upcoming Toyota Cars In India in 2016-17.
Story first published: Saturday, July 9, 2016, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X