2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 3 புதிய ஃபோக்ஸ்வேகன் கார்கள் அறிமுகம்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 3 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யபடும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா உறுதிபடுத்தியுள்ளது.

விரைவில் வெளியாக உள்ள, ஃபோக்ஸ்வேகன் கார்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

3 மாடல்கள் அறிமுகம்;

3 மாடல்கள் அறிமுகம்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்ம, 3 புதிய கார்கள் அறிமுகம் செய்யபடும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த 3 புதிய மாடல்கள் ஃபோக்ஸ்வேகன் பிராண்ட் மதிப்பை மேலும் கூட்ட உள்ளது.

அமியோ;

அமியோ;

முதன்மையாக, இந்திய சந்தைகளுக்கு என பிரத்யேகமான மாடல் ஒன்று அறிமுகம் செய்யபடுகிறது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கபடும் காம்பேக்ட் செடானாக உள்ளது.

இது அமியோ என்று அழைக்கபட வாய்ப்புகள் உள்ளது. இந்த அமியோ காம்பேக்ட் செடானின் உலகளாவிய அறிமுகம், டெல்லி எக்ஸ்போவின் 13-வது பதிப்பில் நிகழ உள்ளது.

டிகுவான்;

டிகுவான்;

ஃபோக்ஸ்வேகன் இந்தியா சார்பாக வெளியிடப்பட உள்ள 2-வது கார், பிரிமியம் எஸ்யூவியாக இருக்கும். ஜெர்மானிய கார் உற்பத்தி நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரிமியம் எஸ்யூவி, டிகுவான் என்று அழைக்கபட உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் பிரிமியம் எஸ்யூவி ஏற்கனவே ஐரோப்பிய சந்தைகளில் விற்பனைகளில் உள்ளது. இது இந்திய வாகன சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.

பஸ்ஸாட் ஜிடிஈ;

பஸ்ஸாட் ஜிடிஈ;

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் சார்பாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட உள்ள 3-வது தயாரிப்புக்கு, ஃபோக்ஸ்வேகன் பஸ்ஸாட் ஜிடிஈ பிலக்-இன் ஹைப்ரிட் ஆகும்.

இந்த பஸ்ஸாட் ஜிடிஈ 1.4 லிட்டர் டிஎஸ்ஐ இஞ்ஜின் மற்றும் ஒரு எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டுள்ளது. கம்பைண்ட் ரேன்ஜ் எனப்படும் கூட்டு ரேன்ஜ்-ல் 1000 கிலோமீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டுள்ளது.

வெரும் எலக்ட்ரிக் எலக்ட்ரிக் மோட்-டில் 50 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல முடியும்.

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன்;

ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன்;

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பல்வேறு விதமான தயாரிப்புகளை காட்சிபடுத்த உள்ளது.

போலோ, கிராஸ் போலோ, வெண்டோ, ஜெட்டா மற்றும் புதிய பீட்டில் உள்ளிட்ட பல்வேறு ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகள் இந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட உள்ளது என தகவல்கள் வெளியாகிறது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Volkswagen India has confirmed that, it is introducing 3 New Models during the 2016 Delhi Auto Expo. These 3 new models from Volkswagen are expected to strengthen the Volkswagen portfolio in India. A compact sedan is being developed which might be named as Ameo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X