30 புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துகிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்!

By Gopi

அடுத்த 9 ஆண்டுகளுக்குள் பேட்டரியில் இயங்கக்கூடிய 30 எலக்ட்ரிக் கார்களை புதிதாக அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தக் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை வாகனங்களாக (Green Vehicles) வலம் வர உள்ளன. வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறும் வகையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் அந்தக் கார்களை வடிவமைக்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் கார்

இதைத் தவிர, டீசல் எஞ்சின் மாசுக் கட்டுப்பாட்டு முறைகேடு விவகாரத்தில் நற்பெயரை இழந்த அந்நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதன் காரணமாகவே, வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய இந்த புதிய உத்தியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கையாண்டுள்ளது.

அண்மையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் எஞ்சின்களை மாசுக் கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தியதில், சில முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதாவது, எஞ்சின் வெளியிடும் மாசுவின் அளவைக் குறைத்துக் காட்டும் வகையிலான மென்பொருள்கள் வோல்க்ஸ்வேகன் காரில் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பல்வேறு சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் ஆளானது ஃபோக்ஸ்வேகன் கார் நிறுவனம்.

மேலும், சர்வதேச அளவில் அந்நிறுவனத்தின் கார் விற்பனை பாதிக்கப்பட்டதாகவும், வேறு சில காரணங்களால் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.6 சதவீதம் குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தொலைநோக்குத் திட்டம் - 2025 நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 30 எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் தலைவர் மேத்தியாஸ் முல்லர், டீசல் எஞ்சின் விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டு வருவதும், அதிலிருந்து புதிய படிப்பினையைக் கற்க வேண்டியதும் அவசியமாகிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகனங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். எங்களது வெற்றி தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

அதைக் கருத்தில் கொண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

2025-ஆம் ஆண்டில் 20 அல்லது 30 லட்சம் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய வோல்க்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த கார் விற்பனையில் 20-இலிருந்து 25 சதவீதமாகும்.

இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருமா ஃபோக்ஸ்வேகன்? பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles
English summary
Volkswagen is looking to lead in electric vehicle market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X