புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ... தெரிந்துகொள்ள வேண்டிய 12 விஷயங்கள்!

Written By:

4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய செடான் கார் மார்க்கெட்டில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய காரை களமிறக்குகிறது. ஃபோக்ஸ்வேகன் அமியோ என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் பலரின் எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் கார்கள் என்றாலே, தரமான பாகங்கள், சிறப்பான கட்டுமானத் தரம், பாதுகாப்புமிக்க மாடல்கள் என்ற எண்ணம் வாடிக்கையாளர் மனதில் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் குறித்த சில முக்கிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

01. மேட் இன் இந்தியா

01. மேட் இன் இந்தியா

இந்தியாவுக்காக, போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்கியிருக்கும் முதல் கார் மாடல் அமியோ.

02. உள்நாட்டு பாகங்கள்

02. உள்நாட்டு பாகங்கள்

தற்போது விற்பனையில் உள்ள பிற ஃபோக்ஸ்வேகன் கார்களைவிட பெருமளவில் உள்நாட்டு[இந்திய] உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்படும் முதல் மாடலாகவும் இருக்கும்.

03. உற்பத்தி

03. உற்பத்தி

மஹாராஷ்டிர மாநிலம், புனே நகருக்கு அருகிலுள்ள சகன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஃபோக்ஸ்வேகன் ஆலையில் இந்த கார் செய்யப்படுகிறது. உற்பத்தி துவங்கியவுடன் முதல் கார்

04. நாமகரணம்

04. நாமகரணம்

அமோ என்ற லத்தீன் மொழி வார்த்தையை தழுவி அமியோ என்று பெயரிடப்பட்டிருக்கிறதாம். அமோ என்றால், "நான் விரும்புகிறேன்" என்று அர்த்தம்.

குறிப்பு: இந்த ஸ்லைடிலிருந்து மாதிரிக்கா ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் காரின் படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

05. பிளாட்ஃபார்ம்

05. பிளாட்ஃபார்ம்

ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்ட்டோ கார்கள் வடிவமைக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, போலோ காரின் காம்பேக்ட் செடான் மாடலாக மாற்றப்பட்டிருக்கிறது. எனவே, முகப்பு, பக்கவாட்டு டிசைன் மற்றும் உள் வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இருக்காது. பின்புற டிசைன் மட்டும் மாற்றம் கண்டிருக்கும்.

06. பாதுகாப்பான மாடல்

06. பாதுகாப்பான மாடல்

பிற ஃபோக்ஸ்வேகன் கார்களைப் போன்றே, இந்த புதிய அமியோ காரும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள் இடம்பெற்றிருக்கும். சிறந்த கட்டுமானத் தரம் கொண்ட மாடலாகவும் இருக்கும். அதாவது, இந்த செக்மென்ட்டிலேயே ஃபோர்டு ஆஸ்பயர் போன்றே மிகச்சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மாடலாக இருக்கும்.

07. எஞ்சின் ஆப்ஷன்கள்

07. எஞ்சின் ஆப்ஷன்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 74 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் எம்பிஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 88.7 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும்.

08. மைலேஜ்

08. மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

9. ஆட்டோமேட்டிக் மாடல்

9. ஆட்டோமேட்டிக் மாடல்

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, இந்த காரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மாடலிலும் வருவதாக வெளியானத் தகவல் பெரும் எதிர்பார்ப்பை கிளறியிருக்கிறது.

 10. எதிர்பார்க்கும் விலை

10. எதிர்பார்க்கும் விலை

ரூ.5.50 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 11. அறிமுக தேதி

11. அறிமுக தேதி

வரும் பிப்ரவரி 2ந் தேதி இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 12. போட்டியாளர்கள்

12. போட்டியாளர்கள்

மாருதி டிசையர், ஹூண்டாய் எக்ஸென்ட், ஹோண்டா அமேஸ் டாடா ஸெஸ்ட் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் கார்களுடன் நேரடியாக போட்டி போடும்.

 
English summary
Here are 5 important things you should know about the Volkswagen Ameo sub-compact sedan car.
Story first published: Saturday, January 23, 2016, 13:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark