சவாலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ விற்பனைக்கு வந்தது!

Written By:

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் ரக செடான் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களைவிட சற்று விலை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நம்ப முடியாத அளவு குறைவான விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களைவிட சற்று குறைவான விலையில் மட்டுமல்ல, ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விலையைவிட குறைவான விலையிலும் வந்திருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம். சரி, வாருங்கள் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

தற்போது பெட்ரோல் மாடலில் மட்டுமே ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், Trendline, Comfortline, Highline ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டிலேயே முதல்முறையாக சில சிறப்பு வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ. அதில், முக்கியமானவையாக, மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர், கை மற்றும் விரல்கள் மாட்டிக் கொள்ளாத வகையில், தானாக கீழே இறங்கிவிடும் ஆன்ட்டி பின்ச் பவர் விண்டோஸ், நெடுஞ்சாலையில் சீரான வேகத்தில் செலுத்தும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், வளைவுகளில் கார் திரும்பும்போது அந்த திசையில் சரியான கோணத்தில் ஒளியை பாய்ச்சும் ஸ்டேட்டிக் கார்னரிங் லைட்ஸ் உள்ளிட்ட வசதிகள் குறிப்பிடத்தக்கவை.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் வியூ கேமரா, முன்புறத்திற்கான ஆர்ம் ரெஸ்ட், பின்புற இருக்கைகான ஏசி வென்ட், குளிர்ப்பதன வசதி கொண்ட க்ளவ் பாக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்ஸ் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.47 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடல் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இது 89 பிஎச்பி பவரையும், 104 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைக்கும். மேலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

விலை விபரம்

விலை விபரம்

மும்பை எக்ஸ்ஷோரூம் விலை

ட்ரென்ட்லைன்: ரூ.5,13,864

கம்போர்ட்லைன்: ரூ.5,87,914

ஹைலைன்: ரூ.6,91,680

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

ட்ரென்ட்லைன்: ரூ.5,24,300

கம்போர்ட்லைன்: ரூ.5,99,950

ஹைலைன்: ரூ.7,05,900

 
English summary
Volkswagen Ameo compact sedan car Launched In India.
Story first published: Sunday, June 5, 2016, 23:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark