புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

Posted By:

மாருதி டிசையரின் ஆளுகையின் கீழ் இருக்கும் காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில், அடுத்து ஒரு புதிய வரவான ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் கார் அறிமுகமாகியிருக்கிறது. இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய மாடல் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் கார்கள் என்றாலே, நேர்த்தியான வடிவமைப்பு, சிறந்த கட்டுமானத் தரத்திற்கும் பெயர் போனது என்பதால், பலருக்கு வாங்கும் எண்ணத்தை தூண்டுவதாகவே அமைந்திருக்கிறது. அந்த ஆவலைத் தணிக்கும் விதத்தில் அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட அமியோ காரின் பிரத்யேக புகைப்படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ

இந்தியாவுக்காக இந்தியாவிலேயே ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியிருக்கும் முதல் கார் மாடல். இந்த கார் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் அடிப்படையிலான செடான் என்பதால், முன்புறத் தோற்றத்தில் அதிக ஒற்றுமைகள் உள்ளன. இந்த காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ், ஏர்பேக்குகள் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ரூ.5.50 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுவதால், இதைவிட ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை கூடுதல் விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிற காம்பேக்ட் செடான் கார்களைவிட விலை அதிகமிருக்கும் என நம்பலாம். ஆனால், வசதிகள், பாதுகாப்பு, டிசைன், தரம் போன்றவற்றில் இந்த கார் போட்டியாளர்களைவிட ஒரு படி முன்னே இருக்கும் என்று கூறலாம்.

English summary
Volkswagen Ameo Compact Sedan- Photo Gallery.
Please Wait while comments are loading...

Latest Photos