ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் கார், இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யபட்டது.

தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அமியோ பெயர் காரணம்?

அமியோ பெயர் காரணம்?

அமியோ என்ற பெயர், அமோ என்ற லத்தின் மொழி சொல்லில் இருந்து உருவாக்கபடுள்ளது.

அமியோ என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் ‘I Love' (தமிழில் - விரும்புகிறேன்) என்ற பொருள் வருகிறது.

இஞ்ஜின் விவரங்கள் - 1;

இஞ்ஜின் விவரங்கள் - 1;

இஞ்ஜின் கேபாசிட்டி;

பெட்ரோல்; 1.2 லிட்டர், 3 சிலிண்டர்

டீசல்; 1.5 லிட்டர், 4 சிலிண்டர்

பவர் (பிஹெச்பி);

பெட்ரோல்; 104

டீசல்; 89

இஞ்ஜின் விவரங்கள் - 2;

இஞ்ஜின் விவரங்கள் - 2;

டார்க் (என்எம்);

பெட்ரோல்; 175

டீசல்; 230

மைலேஜ் (கிலோமீட்டர் / லிட்டர்);

பெட்ரோல்; 16.47

டீசல்; 20.14

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டு வெளியாகிறது.

ஃபோக்ஸ்வேகன் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு முறையில் வழங்கபடுகிறது.

சிறப்பு அம்சங்கள் - 1;

சிறப்பு அம்சங்கள் - 1;

(*) ரெய்ன் சென்சிங் வைப்பர்கள் (மழையை உணரும் வைப்பர்கள்) - செக்மண்டில் முதல் முறையாக

(*) ஆட்டோ டிம்மிங்

(*) ஐஆர்விஎம் குரூஸ் கண்ட்ரோல் -செக்மண்டில் முதல் முறையாக

(*) ரியர் ஏசி அவுட்லட்

(*) ஏபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ட்யூவல் ஏர்பேக்-கள் (ஸ்டாண்டர்ட் அம்சங்களாக)

சிறப்பு அம்சங்கள் - 2;

சிறப்பு அம்சங்கள் - 2;

(*) டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம்

(*) கூல்ட் கிளவ்பாக்ஸ்

(*) ஃப்ரண்ட் ஆர்ம்ரெஸ்ட்

(*) ஹில் ஹொல்ட் கண்ட்ரோல்

(*) எலக்ட்ரானிக் இம்மொபலைஸர்

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் இண்டீரியர், போலோவின் இண்டீரியரை போலவே உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ-வின் இண்டீரியர்-ட்யூவல் டோன் பிளாக் மற்றும் பீஃஜ் நிறங்களிலும், செண்டர் கன்சோல் சில்வர் ட்ரிம் வண்ணத்திலும், மல்டி ஃபங்க்‌ஷன் 3-ஸ்போக் ஸ்டியரிங் வீல் கொண்டுள்ளது.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தான், ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை;

விலை;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள், இது வரை வெளியிடப்படவில்லை.

போட்டி கார்கள்;

போட்டி கார்கள்;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் காம்பேக்ட் செடானான அமியோ-விற்கு சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இல்லையெனில், இந்த செக்மண்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி ஸ்விஃப்ட் டிசைர் காரிடம் இருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டும்.

இதோடு மட்டுமல்லாமல், ஹூண்டாய் ஆக்ஸண்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய மாடல்களும், ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் கடும் போட்டியாக விளங்க உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ... தெரிந்துகொள்ள வேண்டிய 12 விஷயங்கள்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் காருக்கு அமியோ என பெயர் சூட்டபட்டுள்ளது

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், 3 புதிய ஃபோக்ஸ்வேகன் கார்கள் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

Most Read Articles
English summary
Volkswagen Ameo Compact Sedan is revealed in India. The word Ameo is derived from the Latin word Amo. Amo means 'I Love'. Ameo looks almost like a carbon copy of the Polo. But, Ameo has a boot added onto the back. The Ameo is expected to reach showrooms in the second half of 2016. Price details of Ameo has not been revealed so far.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X