ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் காம்பேக்ட் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அமியோ டீசல் செடானின் அறிமுகம், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 'மேட் இன் இந்தியா' எனப்படும் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் அமியோவின் பெட்ரோல் மாடலை சில மாதங்களுக்கு அறிமுகம் செய்தனர். இதையடுத்து, டீசல் மாடலும் அறிமுகம் செய்யப்படுவதாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் மாடல் மற்றும் அதன் அறிமுகம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் அதிக்கப்படியான அம்சங்கள், பெட்ரோல் மாடலின் டிசைன் அம்சங்களை போன்றே இருக்கும்.

டீசல் மாடல்;

டீசல் மாடல்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் பெட்ரோல் மாடல், இந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது முன்னதாக, 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. போலோ மாடல் வடிவமைக்கப்பட்டுள்ள அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு இதுவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அறிமுக தேதியில் குழப்பம்;

அறிமுக தேதியில் குழப்பம்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், கடந்த சில தினங்களுக்கு முன் செப்டம்பர் 27-ல் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இதன் அறிமுகம் தள்ளி போகும் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இந்த மாடல், இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், ட்ரென்ட்லைன், கம்ஃபர்ட்லைன் மற்றும் ஹைலைன் ஆகிய 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், 4 சிலிண்டர்கள், டர்போசார்ஜர் உடைய 1.5 லிட்டர் டிடிஐ டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின், 108.62 பிஹெச்பியையும், அதிகப்படியாக 250 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 7-ஸ்பீட் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் கொண்டதாக உள்ளது.

முக்கிய அம்சங்கள்;

முக்கிய அம்சங்கள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், குரூஸ் கண்ட்ரோல், டச்ஸ்கிரீன் இன்போஃடேயின்மென்ட் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், செக்மென்ட்டில் முதல் முறை அம்சங்களை ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது. இது, டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், கிரம்பிள் ஸோன், ஆண்டி-பெர்ஃபோரேஷன் வாரண்டி, 3 வருட பெயின்ட் வாரண்டி, 6-வருட அண்டி-கர்ரோஷன் பெர்ஃபோரேஷன் வாரண்டி உள்ளிட்ட அம்சங்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக கொண்டுள்ளது.

போட்டி;

போட்டி;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், ஹோண்டா அமேஸ், மாருதி சுஸுகி ஸ்விப்ட் டிசையர், டாடா போல்ட், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர், ஹூண்டாய் எக்ஸன்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போடுகிறது.

விலை;

விலை;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் விலைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ (டீசல்) டிஎல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடையது - 6.26 லட்சம் ரூபாய்

ஃபோக்ஸ்வேகன் அமியோ (டீசல்) சிஎல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடையது - 7.27 லட்சம் ரூபாய்

ஃபோக்ஸ்வேகன் அமியோ (டீசல்) சிஎல் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் உடையது - 8.40 லட்சம் ரூபாய்

ஃபோக்ஸ்வேகன் அமியோ (டீசல்) ஹெச்எல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடையது - 8.08 லட்சம் ரூபாய்

ஃபோக்ஸ்வேகன் அமியோ (டீசல்) ஹெச்எல் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் உடையது - 9.21 லட்சம் ரூபாய்

குறிப்பு; இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் எப்படி இருக்கிறது... ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!

சவாலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ விற்பனைக்கு வந்தது!

ஃபோக்ஸ்வேகனின் போலோ, வென்ட்டோ மாடல்களில் 2 புதிய எடிஷன்கள் அறிமுகம்...

English summary
Volkswagen India has launched its Ameo compact sedan with diesel engine. Standard equipment in Volkswagen Ameo TDI has several segment first features. It has Dual airbags, ABS (anti-lock braking system), crumple zone, anti-perforation warranty, three-year paint warranty, and six-year anti-corrosion perforation warranty will be offered as standard. To know more, check here...
Story first published: Friday, September 30, 2016, 18:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark