ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பிரத்யேக படங்களின் ஆல்பம்!

Written By:

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் எப்படி இருக்கிறது என்பதை நேற்று நாம் வெளியிட்ட சிறப்பு விமர்சன செய்தித் தொகுப்பில் படித்திருப்பீர்கள். கொடுக்கும் பணத்திற்கு மதிப்புமிக்க காராகவும், டிசைனும் பிடித்துப் போய்விட்டது என உங்கள் மனதில் பட்டிருக்கலாம். அப்படியென்றால், இந்த காரை முன்பதிவு செய்துவிடலாம் என்று கிளம்பி கொண்டிருக்கும் இந்த நேரத்தில்...

ஃபோக்ஸ்வேகன் அமியோ

  

இந்த கார் சாலையில் செல்லும்போது டிசைன் ஆளுமை எப்படி இருக்கிறது, பூட் ரூம் மூடியை திறந்தால் தலையில் இடிக்குமா, இதன் ஹெட்லைட், பனி விளக்கு டிசைன் எப்படி இருக்கும் என்பன போன்ற பல கேள்விகளும், ஆவலும் மனதில் எழுந்திருக்கும்.

அந்த ஆவலுக்கு தீணி போடும் விதத்தில், ஃபோக்ஸ்வேகன் அமியோ காரை அனைத்து கோணங்களிலும் காண்பதற்கு ஏதுவாக பிரத்யேக படங்களின் தொகுப்பை இங்கே வழங்கியிருக்கிறோம். நிச்சயம் இந்த படத்தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

 

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் தற்போது 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் கொண்ட பெட்ரோல் மாடலில் மட்டுமே வந்திருப்பதை அறிவீர்கள். இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இதன் சக்திவாய்ந்த .5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட டீசல் மாடல் தீபாவளியையொட்டி அல்லது இந்த ஆண்டு இறுதி வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த எஞ்சின் 105 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். இந்த மாடல் அதிக எதிர்பார்ப்பை தூண்டியிருப்பதற்கு மற்றொரு காரணம், டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது.

 

விலையும் போட்டியாளர்களுக்கு சவால் கொடுக்கும் என்பதால், பலரும் அமியோவின் பெட்ரோல் மாடலைவிட, டீசல் மாடலையே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சரி, எமது பிரத்யேக படங்களை பார்த்ததில் உங்களுக்கு முழு திருப்தி ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது.

 
English summary
Volkswagen Ameo: Exclusive Photo Gallery.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X