ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் புக்கிங், மே 12 முதல் துவங்குகிறது

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் அமியோ காம்பேக்ட் செடானின் புக்கிங்கை மே 12 முதல் துவங்க உள்ளனர்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தயாரித்து வழங்கும் அமியோ காம்பேக்ட் செடான் விரைவில் வெளியாக உள்ளது. இதன் ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங், மே 12-ஆம் தேதி துவங்குகிறது. இதையொட்டி அமியோ கார் மூலம் இந்தியாவின் 17 நகரங்களில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஷோரூம்களுக்கு செல்லும் வகையிலான ரோட் ஷோவும் நடத்தபடுகிறது.

அமியோ காரின் ரோட் ஷோ, பூனேவின் சகன் என்ற இடத்தில் உள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் இருந்து துவங்க உள்ளது. ஃபோக்ஸ்வேகன் அமியோ பின்னர் 17 நகரங்களில் கடந்து, அதன் இறுதி இலக்கை ஜூலை 2, 2016-ல் சென்று அடையும். விருப்பபடும் வாடிக்கையாளர்கள், இந்த ஃபோக்ஸ்வேகன் அமியோ காரில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து, அனுபவித்து மகிழலாம்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், பூனே, சூரத், லூதியானா, கொல்கத்தா, சென்னை, கொச்சி, நாக்பூர், ஜெய்ப்பூர், சண்டிகர், புவனேஷ்வர், பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி, லக்னோ, ஹைதராபாத், கோயம்புத்தூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளபட்டு, இங்கெல்லாம் காட்சிபடுத்தபட்டது.

ஃபோக்ஸ்வேகன் அமியோ, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த அமியோ செடானுக்கு, புதிய 1.2 லிட்டர், 3-சிலிண்டர், எம்பிஐ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் தேர்வு முறையிலான 1.5 லிட்டர், 4-சிலிண்டர், டிடிஐ இஞ்ஜினும் பொருத்தபடுகிறது. 2 இஞ்ஜின்களுமே மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபடும். பெட்ரோல் மாடல், ஏஎம்டி தேர்வுடனும் வழங்கபடும்.

volkswagen-ameo-pre-booking-and-road-show-begins-on-12-may

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல்ஃபோன்களுக்கு என ஒரு ஆப்பை அறிமுகம் செய்ய உள்ளனர். அமியோ பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த அபிளிகேஷனை டவுன்லோட் செய்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கூடுதலாக, ட்விட்டரில் #NamasteAmeo என்ற ஹாஷ்டாக்கை பயன்படுத்தி, இந்த ரோட் ஷோவின் போது, ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான், எந்த சமயத்தில், எந்த நகரங்களில் உள்ளது என்பது குறித்த அதிகபடியான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

English summary
Volkswagen India will commence pre-launch bookings for upcoming compact sedan from May 12, 2016. Ameo will be heading out on 17-city roadshow at VW showrooms. The roadshow begins from Volkswagen's facility in Chakan, Pune. Volkswagen Ameo will travel to 17-cities across India and reaches final destination by July 2, 2016. To know more, check here...
Story first published: Monday, May 9, 2016, 10:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark