ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கண்காட்சி பூனேவில் நடைபெறும்

Written By:

ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ ஃபேர் என்ற பெயரிலான ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கண்காட்சி நாளை (20-3-16) பூனேவில் நடைபெறுகிறது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியா, ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ ஃபேர் என்ற இந்த பிரத்யேக கண்காட்சியை அதன் ரசிகர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் நடத்துகிறது. இந்த ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கண்காட்சி, விரைவில் வெளியாக இருக்கும் வாகனங்கள் காட்சிபடுத்தப்படுகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்ட அனைத்து வாகனங்களும் பூனே வாழ் மக்களுக்கு காட்சிபடுத்தபட உள்ளது.

அனைத்து வாகனங்களும் காட்சிபடுத்தபடும் முகவரி;

கேஸல் ராயெல் டவர்ஸ்,

ரேஞ்ச் ஹில்ஸ்,

போஸ்லே நகர் எக்ஸ்டென்ஷன்,

பூனே.

வாடிக்கையாளர்களுக்கு, வெளியாக இருக்கும் வாகனங்களின் உள் நபர் முன்னோட்டம் வழங்கப்படுகிறது.

இந்த ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கண்காட்சியில், டிகுவான், பஸாட் ஜிடிஇ, போலோ ஜிடிஇ, பீட்டில், புதிய அமியோ ஆகிய வாகனங்கள் காட்சிபடுத்தபடுகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்ட பெரும்பாலான மாடல்கள், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கண்காட்சியில், மக்கள் அதிக அளவில் பங்குபெறுவார்கள் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

volkswagen-auto-fair-pune-20th-march

ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் டிரைவர்கள் கொண்டு, ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் கார்களில் சோதனை முறையிலான டிரைவ் சந்தர்ப்பங்கள் வழங்கப்படும். அப்போது, ஃபோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் வாகனங்களின் அசலான திறன் மற்றும் பவரை உணர வாடிக்கையாளர்கள் முடியும். ஆனால், இந்த கார்களை வாடிக்கையாளர்கள் இயக்க முடியாது. இதனை பயற்சி பெற்ற கைதேர்ந்த டிரைவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகிறது.

ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கண்காட்சியின் போது, பல்வேறு சலுகைகளும் வழங்கபடுகிறது. போலோ, வென்ட்டோ, ஜெட்டா ஆகிய மாடல்கள் ஸ்பாட் புக்கிங் செய்யும் வகையில் கிடைக்கும். இந்த கார்களின் மீது ஈர்க்கும் வகையிலான சலுகைகள் வழங்கப்படும். பூனேவில் நாளை நடைபெறும் இந்த ஃபோக்ஸ்வேகன் ஆட்டோ கண்காட்சி காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

English summary
Volkswagen India will be organising a special event called Volkswagen Auto Fair in Pune on March 20th. Upcoming vehicles will be showcased in this 'Volkswagen Auto Fair'. This Auto fair is held in Castel Royale Towers, Range Hills, Bhosale Nagar Extension, Pune between 11:00 am to 7:00 pm. To know more about this Volkswagen Auto Fair, check here...
Story first published: Saturday, March 19, 2016, 13:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark