MQB பிளாட்ஃபார்ம் கார்களை ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிற்கு கொண்டு வராது

By Ravichandran

MQB பிளாட்ஃபார்ம் (எம்க்யூபி பிளாட்ஃபார்ம்) அடிப்படையிலான கார்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட மாட்டாது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எம்க்யூபி பிளாட்ஃபாரம் அடிப்படையிலான கார்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட மாட்டாது வரப்பட மாட்டாது என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு சில நிறுவனங்களின் கார்களுக்கு இணையாக, அவை உருவாக்கப்படும் பிளாட்ஃபாரம்களும் நன்கு புகழ் பெற்று விடுகிறது. அவ்வகையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி பிளாட்ஃபார்மும் ஒன்றாகும்.

volkswagen-emission-scandal-stops-launch-new-cars-mqb-platform-india-01

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், டீசல்கேட் எனப்படும் மாசு உமிழ்வு தொடர்பான ஊழலில் சிக்கியது. இதனால் ஏற்பட்ட அவப்பெயர் மற்றும் விற்பனை பாதிப்பு ஆகிய காரணங்களால் சுமார் 9 பில்லியன் டாலர்கள் வரை இழக்க நேரிட்டது. ஃபோக்ஸ்வேகன் குழுமம், இந்த மாபெரும் இழப்பை வரும் 10 ஆண்டுகளில் ஈடுகட்ட நினைக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், எம்க்யூபி பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட போலோ மற்றும் வென்ட்டோ ஆகிய மாடல்கள் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இவை, 2018-19-ல் இந்தியாவிற்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தற்போது உபயோகத்தில் உள்ள பிக்யூ25 என்ற போலோ ஆர்கிடெக்சர் (PQ25-Polo architecture) எனப்படும் கட்டமைப்பு முறையில் வடிவமைக்கப்பட்ட போலோ மாடலே இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

volkswagen-emission-scandal-stops-launch-new-cars-mqb-platform-india-02

எம்க்யூபி பிளாட்ஃபார்ம் ஆனது, ஃபோக்ஸ்வேகனின் பெரிய கார்களான ஸ்கோடா ஆக்டாவியா, சூப்பர்ப், ஆடி ஏ3 ஆகிய பெரிய கார்களில் பயபடுத்தபடுகிறது. இந்த எம்க்யூபி பிளாட்ஃபார்மை, சிறிய கார்களில் உபயோகிக்கும் எண்ணம் இல்லை என ஃபோக்ஸ்வேகன் தெளிவுப்படுத்தியது.

இது குறித்து, ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் மேனேஜிங் டைரக்டரான ஆன்ட்ரியாஸ் லார்மேன் சில முக்கியமான விவரங்களை தெளிவு படுத்தினார். அப்போது, எம்க்யூபி பிளாட்ஃபார்ம் தான் இந்த சந்தைகளுக்கு சரியான தீர்வா அல்லது வேறு ஏதேனும் தீர்வுகள் உள்ளதா எனவும், இங்கிருக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்று ஆராய்ந்து வருகிறோம். பொலிவு கூட்டப்பட்ட பிக்யூ25 தான் சிறந்த தேர்வாக இருக்கும். இது ஹைபிரிட் ஆகவும், அல்லது எம்க்யூபி பிளாட்ஃபார்ம் ஆகவும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகிறது.

volkswagen-emission-scandal-stops-launch-new-cars-mqb-platform-india-03

பிக்யூ26 (PQ26) பிளாட்ஃபார்ம் என்பது பிக்யூ25 பிளாட்ஃபார்மின் பொலிவு கூட்டப்பட்ட வடிவம் ஆகும். பிக்யூ26 பிளாட்ஃபார்ம் என்பது குறுகிய கால் தீர்வாகவே அமையும். இந்த பிக்யூ26 பிளாட்ஃபார்மில், ஃபோக்ஸ்வேகன் அதே வாகன கட்டமைப்பை தக்க வைத்து கொள்ளும். ஆனால், கனெக்டிவிட்டி அம்சங்களுக்கு எலக்ட்ரிக்கல் சிஸ்டம் மாற்றி அமைக்கப்படுகிறது.

volkswagen-emission-scandal-stops-launch-new-cars-mqb-platform-india-04

இந்திய வாகன சந்தைகளுக்கு, டிகுவான் எஸ்யூவி மற்றும் பஸ்ஸாட் உள்ளிட்ட புதிய எஸ்யூவி மற்றும் பிரிமியம் செடானை இந்திய வாகன சந்தைகளுக்கு அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளனர்.

volkswagen-emission-scandal-stops-launch-new-cars-mqb-platform-india-05
Most Read Articles
English summary
Volkswagen Will Not Launch MQB Platform built Cars in India. Volkswagen had to bring Polo and Vento sedan built on MQB platform and was expected to be launched in 2018-19. Now, VW will work on existing Polo architecture PQ25, which will bring new Polo to India. VW said it will not use MQB platform for its smaller vehicles. To know more, check here...
Story first published: Tuesday, August 16, 2016, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X