ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் எடிசன் அறிமுகம்: கூடுதல் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Written By:

பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறப்பான மாடல் ஃபோக்ஸ்வேகன் போலோ கார். விற்பனைக்கு பிந்தைய சேவை, பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால் போட்டியாளர்களின் நெருக்கடியாவில் இந்த கார் போதிய வரவேற்பை பெறாத நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கூடுதல் வசதிகள், சிறப்பம்சங்களுடன் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் சிறப்பு பதிப்பு மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய காரில் இடம்பெற்று இருக்கும் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆல்ஸ்டார் எடிசன்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் என்ற பெயரில் இந்த புதிய கார் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஹெட்லைட் வாஷர்கள், 15 இன்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய வண்ணம்

சாதாரண மாடலிலிருந்து இதனை வேறுபடுத்தும் விதத்தில் ஆல்ஸ்டார் பேட்ஜ் பி பில்லரில் பதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஆல்ஸ்டார் போலோ கார் புளூ சில்க் என்ற புதிய வண்ணத்தில் வந்துள்ளது.

இன்டீரியர் அம்சங்கள்

உட்புறத்தில் புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் வந்துள்ளது. இருக்கைகளில் நடுவில் பிரத்யேக கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் தையல் வேலைப்பாடுகளுடன் வசீகரிக்கின்றன.

பிரிமியம் அம்சங்கள்

ஃபோக்ஸ்வேகன் போலோ ஆல்ஸ்டார் காரில் மெட்டாலிக் பெடல்கள், கால் வைக்கும் இடத்திற்கான விசேஷ விளக்குகள், ஆல்ஸ்டார் பேட்ஜ் கொண்ட ஸ்கஃப் பிளேட்டுகள் உள்ளிட்டவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

விசேஷ வசதிகள்

புதிய ஆல்ஸ்டார் போலோ காரில் முன் இருக்கைக்கு நடுவில் ஆர்ம்ரெஸ்ட், பின்புற இருக்கை பயணிகளுக்கான பிரத்யேக ஏசி வென்ட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான கூடுதல் வசதிகளாக கருதி சேர்க்கப்பட்டுள்ளன.

எஞ்சின் விபரம்

எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. சாதாரண போலோ கார்களில் இருக்கும் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும்.

விலை விபரம்

ரூ.7.51 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண மாடலுடன் ஒப்பிடும்போது ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த போலோ ஆல்ஸ்டார் கார் வந்துள்ளது.

English summary
Limited edition Polo AllStar sits above the top end Polo variants and brings in some additional equipment.
Story first published: Wednesday, November 23, 2016, 9:36 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos