இந்தியாவிற்கான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிக்கு 5-ஸ்டார் ரேட்டிங்

Written By:

இந்தியாவிற்கான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் டிகுவான் எஸ்யூவி பெற்றுள்ள ரேட்டிங் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

விபத்து நிகழும் நேரத்தில், எந்த ஒரு காரும், எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, அவை கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது. அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார், 3 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தரத்தை நிர்ணயிக்க, குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP), லேட்டின் என்கேப் (Latin NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

யூரோ என்கேப்;

யூரோ என்கேப்;

ஐரோப்பிய பகுதிகளில் உள்ள நாடுகளில் இயக்கபடும் கார்களுக்கு என பிரத்யேகமாக நடத்தபடும் கிராஷ் டெஸ்ட்கள் தான் யூரோ என்கேப் என அழைக்கபடுகிறது.

இந்த கிராஷ் டெஸ்ட்கள், 4 துணை பிரிவுகளில் நடத்தப்படுகிறது. பெரியவர்கள் பாதுகாப்பு, குழந்தை பயணிகளுக்கான பாதுகாப்பு, பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு மற்றும் டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம் என்ற பிரிவுகளில் இந்த கிராஷ் டெஸ்ட்கள் நடத்தப்படுகிறது.

5-ஸ்டார் ரேட்டிங்;

5-ஸ்டார் ரேட்டிங்;

திறன் வாய்ந்த சீட் பெல்ட்கள், சீட் மற்றும் ஏர் பேக்குகள் மற்றும் டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டம்கள் காரணமாக ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிக்கு 5-ஸ்டார் ரேட்டிங் கிடைத்தது.

மொத்தமுள்ள புள்ளிகளில், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி 96% புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்தியாவில் டிகுவான் எஸ்யூவி;

இந்தியாவில் டிகுவான் எஸ்யூவி;

முதல் தலைமுறை ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, கடைசி வரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவே இல்லை. இரண்டாம் தலைமுறை ஃபோக்ஸ்வேகன் டிகுவான், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிக்கு 5-ஸ்டார் ரேட்டிங் கிடைத்தது, அதற்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

சர்வதேச சந்தைகளுக்கான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, 3 விதமான இஞ்ஜின் டியூனிங்-களுடன் வெளியாகிறது.

இதன் பெட்ரோல் இஞ்ஜின்களின் டியூனிங் 125 பிஹெச்பி முதல் 180 பிஹெச்பிக்கும் இடையில் இருக்கும். இதன் டீசல் இஞ்ஜின்களின் டியூனிங் 115 பிஹெச்பி முதல் 240 பிஹெச்பிக்கும் இடையில் இருக்கும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிக்கான 2 இஞ்ஜின் தேர்வுகளும், 6-ஸ்பீட் மேனுவல் மற்றும் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வெளியாகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, இந்தியாவில் தான் அசெம்பிள் செய்யப்படும். எனினும், இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து, இது வரை அலுவல் ரீதியான தெளிவுத்தன்மை வழங்கப்படவில்லை.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2017 துவக்கத்திலோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூரோ என்கேப் சிறப்பு;

யூரோ என்கேப் சிறப்பு;

யூரோ என்கேப், 1997-ஆம் ஆண்டு முதல், வாகனங்களுக்கான கிராஷ் டெஸ்ட்களை நடத்தி வருகிறது. மற்ற கிராஷ் டெஸ்ட்களுக்கு, யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்கள் முன்னோடியாக விளங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆசியான் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்

கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

டிகுவான் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
India bound Volkswagen Tiguan SUV has scored an impressive 5-Star rating at Euro NCAP crash tests. These crash tests were based on stringent methods of four sub-sections which included occupant protection for adults and children, pedestrian protection and driver assistance systems. Volkswagen Tiguan scored 96 percent at the Euro NCAP. To know more, check here...
Story first published: Friday, June 24, 2016, 19:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark