ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியிடபட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல்...

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல்...

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி என்ற மாடலை உருவாக்கி வருகிறது.

இந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் நீட்டிக்கப்பட்ட (எக்ஸ்டென்டெட்) வீல்பேஸ் வேரியன்ட் (extended wheelbase variant) ஆகும்.

ஸ்பை படங்கள் ;

ஸ்பை படங்கள் ;

டிகுவான் எக்ஸ்எல் எனப்படும் இந்த புதிய எஸ்யூவி சீனாவில், எந்த விதமான உரு மறைப்பும் இல்லாமல் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியது.

அறிமுகம்;

அறிமுகம்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, இந்த ஆண்டில் வரும் மாடதங்களில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோற்றம்;

தோற்றம்;

ஸ்டைலிங் பொருத்த வரை, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவியின் தோற்றத்திற்கும், தற்போது விற்பனையில் உள்ள வழக்கமான உருவம் கொண்ட இணை மாடலான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவிக்கும், பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை.

முக்கியமான மாற்றம்;

முக்கியமான மாற்றம்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி மற்றும் வழக்கமான ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியையும் அடுத்தடுத்து பக்கவாட்டில் நிற்க வைத்தால், டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி நீண்ட வீல் பேஸ் கொண்டிருப்பதை தெளிவாக கவனிக்க முடியும்.

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, நீண்ட வீல் பேஸ் கொண்டிருப்பதனால், கூடுதல் சீட் வரிசை சேர்க்கபட்டுள்ளது. இதனால், இந்த ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, 7-சீட்டர் வாகனமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வருமா?

இந்தியாவிற்கு வருமா?

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, வருங்காலங்களில் உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்க வேண்டாம்.

இதற்கு பதிலாக, வழக்கமான அளவில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள 9 எஸ்யூவி-களின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும்.

இந்த இஞ்ஜின், 148 பிஹெச்பி மற்றும் 340 என்எம் டார்க் அல்லது 181 பிஹெச்பி மற்றும் 380 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இது பெட்ரோல் இஞ்ஜின் தேர்வுடனும் வெளியாகலாம்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவியின் அனைத்து இஞ்ஜின்களும், ஸ்டாண்டர்டாக ஃபோக்ஸ்வேகனின் 7-ஸ்பீட் டிஎஸ்ஜி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஏடபுள்யூடி;

ஏடபுள்யூடி;

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எக்ஸ்எல் எஸ்யூவி, ஏடபுள்யூடி என ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தை தேர்வு முறை அம்சமாக கொண்டிருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோக்ஸ்வேகன் தொடர்புடைய செய்திகள்

டிகுவான் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
German carmaker Volkswagen has been working on an extended wheelbase variant of its Tiguan SUV. This new SUV is called as Volkswagen Tiguan XL SUV. Volkswagen Tiguan XL was seen spotted almost totally undisguised in China ahead of its launch later this year. Tiguan XL SUV showed almost no difference in terms of styling compared to its normal sized sibling. To know more, check here...
Story first published: Monday, July 25, 2016, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X