ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 1.9 லட்சம் டீசல் கார்கள் இந்தியாவில் ரீகால்

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் 1.9 லட்சம் டீசல் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுத்துள்ளது.

ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் விற்கப்பட்ட சுமார் 1.9 லட்சம் டீசல் கார்களை திரும்ப அழைத்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், முன்னதாக எமிஷன் டீசல்கேட் எமிஷன் ஸ்கேண்டல் ('Dieselgate' emissions scandal) எனப்படும் மாசு உமிழ்வு தொடர்பான மென்பொருள் முறைகேட்டில் சிக்கியதை அடுத்து, இந்த ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

volkswagen-to-recall-1-9-lakh-diesel-cars-india-dieselgate-scandal

இது தொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இது வரையில் இந்தியாவில் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் எதிர் கொள்ளவில்லை. இந்த நிலையில், தாமாக முன் வந்து, இந்த ரீகால் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த டீசல்கேட் முறைகேடு, செப்டம்பர் 2015-ல் அமெரிக்காவில் வெளியாகியது.

உண்மையில், ஃபோக்ஸ்வேகன் குழுமம் மற்றும் அதன் கீழ் இயங்கும் பிராண்ட்கள் மூலம் தயாரிக்கபட்டு இந்தியாவில் விற்பனை செய்யபட்டுள்ள மொத்தம் 3.23 லட்சம் கார்கள் இந்த டீசல்கேட் முறைகேடு மூலம் பாதிக்கபட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக 1.9 லட்சம் கார்களுக்கு ரீகால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தபட்ட ஒழுங்கு முறை ஆணையங்களிடம் இருந்து அனுமதி கிடைத்த உடன், இந்த ரீகால் நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதல் துவங்கிவிடும்.

டீசல்கேட் முறைகேட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து கார்களும் EA 189 சீரிஸ் மாடலை சேர்ந்ததாகும். இந்த EA 189 சீரிஸ் மாடல், 1.2 இஞ்ஜின், 1.5 இஞ்ஜின் மற்றும் 2.0 லிட்டர் இஞ்ஜின் ஆகிய இஞ்ஜின் தேர்வுகள் பொருத்தபட்டவையாக உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவின் உயர் அதிகாரி கமல் பாசு, பிடிஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, "இந்த 2016 பிற்பாதியில் இருந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 1.9 லட்சம் டீசல் கார்களை செய்கிறது. முன்னதாக, டீசல்கேட் முறைகேடு தொடர்பாக ஏராளமான கார்கள் அமெரிக்காவில் ரீகால் செய்யப்பட்டு, இந்த பிரச்னை சரி செய்யபட்டது. அமெரிக்காவில் இந்த பிரச்னை சரி செய்யபட்டது போல், இந்தியாவிலும் சரி செய்யும் நோக்கில் தான், ஃபோக்ஸ்வேகன் இந்தியாவிலும் ரீகால் செய்யபடுகிறது" என கமல் பாசு தெரிவித்தார்.

English summary
German carmaker Volkswagen has announced recall of massive 1.9 lakh cars sold in India due to issues related to emissions scandal. This Recall activities will start in July once Volkswagen gets permission from regulatory bodies involved. Recall of 1.9 lakh cars marks start of larger 3.23 lakh car recall, Volkswagen had announced last December. To know more, check here...
Story first published: Monday, June 6, 2016, 15:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark