ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆசியான் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் 5-ஸ்டார் ரேட்டிங்

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் ஆசியான் என்கேப் கிராஷ் டெஸ்ட் சோதனைகளில், 5-ஸ்டார் ரேட்டிங் மதிப்பீடு பெற்றது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் பெற்ற மதிப்பீடு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

எந்த ஒரு காரும், விபத்து நிகழும் நேரத்தில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, அவை கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது. அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார், 3 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தரத்தை நிர்ணயிக்க, குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP), லேட்டின் என்கேப் (Latin NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

ஆசியான் என்கேப்;

ஆசியான் என்கேப்;

ஆசியான் பகுதியில் உள்ள நாடுகளில் இயக்கபடும் கார்களுக்கு என பிரத்யேகமாக நடத்தபடும் கிராஷ் டெஸ்ட்கள் தான் ஆசியான் என்கேப் என அழைக்கபடுகிறது.

கிராஷ் டெஸ்ட் - வென்ட்டோ;

கிராஷ் டெஸ்ட் - வென்ட்டோ;

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்கும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான், சமீபத்தில் தான், மலேசியாவில் அறிமுகம் செய்யபட்டது. அதற்கு முன்னதாக, இவை ஆசியான் என்கேப் கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்டது.

மாற்று;

மாற்று;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான், தற்போது விற்பனையில் உள்ள போலோ மாடலுக்கு மாற்றாக அமைய உள்ளது.

எனினும், போலோ மாடலின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், வென்ட்டோ செடான் மாடலில் அப்படியே தொடரப்பட உள்ளது.

வென்ட்டோ பெற்ற மதிப்பீடு;

வென்ட்டோ பெற்ற மதிப்பீடு;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடானுக்கு மொத்தம் 4 ஏர் பேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ, ஃப்ராண்டல் மற்றும் சைட் இம்பேக்ட் கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்டது.

4 ஏர் பேக்குகள் மற்றும் இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் கொண்ட மாடல், 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றுள்ளது. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களுடன் 5-ஸ்டார் ரேட்டிங் பெறுவது பெரிய அதிசயமாக கருதப்படவில்லை.

பிற ரேட்டிங்;

பிற ரேட்டிங்;

இஎஸ்சி எனப்படும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் இல்லாத மாடல், 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றது.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடானில் ஏபிஎஸ் மற்றும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சீட்பெல்ட் ரிமெய்ண்டர் ஆகிய அம்சங்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கபடுகிறது.

சமீபத்திய கிராஷ் டெஸ்ட்கள்;

சமீபத்திய கிராஷ் டெஸ்ட்கள்;

சமீபத்திய இந்தியாவின் முன்னோடி கார் மாடல்களுக்கு குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்கள் நடத்தபட்டது. இதில், எந்த கார் மாடல்களும் 1 ஸ்டார் ரேட்டிங்கை கூட பெறவில்லை.

குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்ட ரெனோ க்விட், ஹூண்டாய் இயான், மாருதி சுஸுகி செலரியோ, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ ஆகிய மாடல்கள் 0 ஸ்டார் ரேட்டிங் தான் பெற்றன.

இந்தியாவில் பாதுகாப்பு விதிமுறைகள்;

இந்தியாவில் பாதுகாப்பு விதிமுறைகள்;

இந்தியாவில் பாதுகாப்பு விதிமுறைகள், இன்னும் கடுமையாக ஆக்கபடவில்லை. பல்வேறு கார் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏர் பேக்குகளை தேர்வு முறையிலேயே வழங்கி வருகின்றன.

2017-க்குள், ஒவ்வொரு புதிய காரும் ஏர் பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் வசதியினை கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளது. தற்போது உள்ள மாடல்கள், இது போன்ற பாதுகாப்பு வசதிகளை 2019-ஆம் ஆண்டுக்குள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

இந்திய கார்கள் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், 0 மதிப்பீடு

மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கிற்கு 3 ஸ்டார் ரேட்டிங்

கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Volkswagen Vento gets 5-Star Safety Rating in the recently held ASEAN NCAP Crash Tests. Volkswagen recently launched Vento into Malaysian market. Vento will be replacing the Polo sedan soon. Vento being tested was equipped with 4 airbags. Frontal, as well as side impact crash tests, were conducted on Volkswagen sedan. To know more, check here...
Story first published: Friday, May 20, 2016, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X