3,877 ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான் கார்கள் இந்தியாவில் ரீகால்

Written By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் வென்ட்டோ செடான் மாடலில் 3,877 கார்களை இந்தியாவில் ரீகால் செய்கின்றனர்.

ஆட்டோமோபைல் தொடர்பான ஒழுங்குமுறை ஆணையமான ஆராய் அமைப்பு ஏராளமான வழிமுறைகளை வகுத்துள்ளனர். இதில், கார்பன் மோனாக்ஸைட் (Carbon Monoxide (CO)) உமிழ்வு தொடர்பான வழிமுறைகளும் அடங்கும்.

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ செடான்கள், இந்த வகுக்கபட்ட அளவுகளை தாண்டி கார்பன் மோனாக்ஸைட் உமிழ்வுகள் சம்பந்தபட்டிருந்ததால், இந்த ரீகால் நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

ஜெர்மனி நாட்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ரீகால் செய்யும் வென்ட்டோ செடான்கள், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின்களை கொண்டுள்ளது. இந்த ரீகால் அறிப்பை தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த சம்பந்தபட்ட மேனுவல் கியர்பாக்ஸ், டீசல் இஞ்ஜின் கொண்ட வென்ட்டோ செடான் மாடலின் விற்பனையை உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.

தற்போதைய நிலையில், இந்த இஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸின் கூட்டுடன் வெளியான இந்த வென்ட்டோ செடான் மாடல்களை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மேலும், இந்த பிரச்னை தீர்ப்பது தொடர்பாக ஆராய் அமைப்பிடம் தொழில்நுட்ப ரீதியில் தீர்வுகளுக்கான யோசனைகளை வழங்கி வருகிறது.

கார்பன் மோனாக்ஸைட் (Carbon Monoxide (CO)) உமிழ்வு பிரச்னைகளுக்கு, ஃபோக்ஸ்வேகன் வழங்கும் இந்த தீர்வுகள், ஆராய் அமைப்பு மூலம் ஏற்கபட்டால், அதை உடனடியாக அமல்படுத்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாராக உள்ளது. இப்படியாக, இந்த தீர்வுகள் நடைமுறைபடுத்தப்படும் நிலையில், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் கொண்ட வென்ட்டோ செடான் மாடலின் உற்பத்தி, விற்பனை மீண்டும் துவங்கப்படும் என

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

volkswagen-vento-diesel-sedan-india-recalled

தற்போது, எழுந்துள்ள இந்த 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின்கள் கொண்ட வென்ட்டோ செடானின் ரீகால் தொடர்பான பிரச்னைகள், வெரும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களுடன் மட்டுமே சம்பந்தபட்டுள்ளது என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ரீகால் பிரச்னைக்கும், உலக அளவில் பூதாகரமான மாசு உமிழ்வு தொடர்பான டீசல் கேட் பிரச்னைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வென்ட்டோ டீசல் செடான் மற்றும் போலோ ஹேட்ச்பேக்கின் பிற டீசல் மாடல்கள் எதுவும் இந்த கார்பன் மோனாக்ஸைட் உமிழ்வு பிரச்னையால் பாதிக்கபடவில்லை என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

English summary
Volkswagen recalls 3,877 units of Vento in India. Volkswagen Vento were found to be exceeding Carbon Monoxide (CO) emission limits set by ARAI. These 3,877 units of Vento sedan being recalled uses 1.5-litre diesel engine and 5-speed manual gearbox. Volkswagen claims that this issue only affects manual gearbox version of Vento with 1.5-litre diesel engine. To know more, check here...
Story first published: Friday, April 1, 2016, 13:34 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark