ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

Written By:

சலுகையான விலையில் கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளை மனதில் வைத்து இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் தொடர்ந்து காணலாம்.

ஸ்பெஷல் எடிசன்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ Preferred Edition என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் கம்போர்ட்லைன் எனப்படும் நடுத்தர வகை வேரியண்ட்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு வந்துள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்கள்

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் எம்பிஐ மற்றும் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களிலும், டிடிஐ மற்றும் டிடிஐ டிஎஸ்ஜி ஆகிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும்.

கூடுதல் ஆக்சஸெரீகள்

இந்த ஸ்பெஷல் வென்ட்டோ காரில் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளை கவரும் வகையில், புதிய அலாய் வீல்கள், சைடு மோல்டிங், பிரிமியம் லெதர் சீட் கவர்கள், போர்ட்டபிள் நேவிகேஷன் சாதனம், வயர்லெஸ் முறையில் இயங்கும் ரியர் வியூ கேமரா மற்றும் கருப்பு வண்ண கூரை உள்ளிட்டவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

சகாய விலை

ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் சாதாரண கம்போர்ட்லைன் வேரியண்ட்டுகளைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும். அதாவது, இதில் பொருத்தப்பட்டிருக்கும் ஆக்சஸெரீகளின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு சற்று சகாயமானதாக இருக்கும்.

ஸ்பெஷல் பேக்கேஜ்

இந்த கூடுதல் ஆக்சஸெரீகளை வென்ட்டோ காரின் கம்போர்ட்லைன் வேரியண்ட் மட்டுமின்றி, அனைத்து வேரியண்ட்டுகளிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, உங்கள் அருகாமையிலுள்ள டீலர்களிடத்தில் விசாரணையை போட்டு விட்டு செல்வது உசிதம்.

English summary
The Preferred edition will be available on all Comfortline variants of the Vento, MPI, TSI, TDI and TDI DSG variants.
Story first published: Friday, November 25, 2016, 9:34 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos