உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்கும் வால்வோ!

Written By:

வால்வோ நிறுவனம் தான், உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்க உள்ளது.

வால்வோவின் சாவி இல்லாத கார்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

சாவிகள் இல்லாத தொழில்நுட்பம்;

சாவிகள் இல்லாத தொழில்நுட்பம்;

தற்போது நடைமுறையில் உள்ள வழக்கமான சாவிகளுக்கு பதிலாக சாவிகளே இல்லாத கார்களை தயாரிக்க வால்வோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த சாவிகள் இல்லாத கார்கள் 2017-ஆம் ஆண்டு முதல் விற்கபட உள்ளது. புளூடூத் மூலம் இயங்கும் தொழில்நுட்பம் மூலம் சாவிகள் இல்லாமலேயே கார்களை திறக்கவும், மூடவும் முடியும்.

டிஜிட்டல் கீ;

டிஜிட்டல் கீ;

டிஜிட்டல் கீ என அழைக்கபடும் இந்த சாவிகள், வாடிக்க்கையாளர்களின் மொபைல் ஃபோனில் உள்ள வால்வோ ஆப் மூலம் இயக்ககூடியதாக இருக்கும்.

இந்த டிஜிட்டல் கீ, வழக்கமான சாவிகள் செய்யும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும். இந்த டிஜிட்டல் கீ மூலம், கார்களின் கதவுகளை திறக்க முடியும், மூட முடியும், இஞ்ஜினை துவக்க முடியும்.

பல்வேறு சாவிகள்;

பல்வேறு சாவிகள்;

இந்த புதிய தொழில்நுட்பம் மூலமும், இந்த ஆப் மூலமும், வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட சாவியை பெற்று கொள்ள முடியும்.

ஒரே ஆப் மூலம் பல்வேறு டிஜிட்டல் சாவிகளை பெறுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் வெவ்வேரு வால்வோ கார்களை வெவ்வேரு இடங்களில் உபயோகித்து கொள்ள முடியும்.

பிற நன்மைகள்;

பிற நன்மைகள்;

இந்த சாவிகளே இல்லாத டிஜிட்டல் கீ மூலம், உலகின் எந்த ஒரு பகுதியிலும் கார்களை புக்கிங் செய்யவும், அதற்கான தொகையை பெற முடியும்.

வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்த டாக்ஸி வந்த உடன், அவர்களுக்கான கார்களை ஜிபிஎஸ் தொழிக்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு, அந்த கார் வந்தவுடன் ஓட்டி செல்லலாம்.

இதனால் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கார் ரெண்டல் மையங்களில் காத்திருப்பதையும் குறைத்து கொள்ளலாம்.

பரிமாற்றம் செய்யகூடியது;

பரிமாற்றம் செய்யகூடியது;

வால்வோ வழங்கும் இந்த டிஜிட்டல் கீயை, வாடிக்கையாளர்கள், மொபைல்ஃபோன்கள் மூலம் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நன்பர்களுக்கு இடையில் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதனால், தேவைபட்டால் பிறரும் விருப்பபட்டால் இந்த கார்களை இயக்கி கொள்ள முடியும்.

வால்வோ நிறுவனம், ஸ்வீடன் நாட்டில் உள்ள கோதென்பர்க் விமான நிலையத்தில் உள்ள சன்ஃப்ளீட் எனப்படும் ஷேரிங் நிறுவனம் மூலம் இந்த புதிய தொழில்நுட்பத்தை நடைமுறைபடுத்த உள்ளது.

வால்வோ கருத்து;

வால்வோ கருத்து;

"வால்வோ நிறுவனம், தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, உருவாக்குவதில்லை. வால்வோ நிறுவனத்தால் உருவாக்கபடும் தொழில்நுட்பங்கள், மக்களின் வாழ்வை எளிமையாக்கி அவர்களுக்கு நேரத்தை மிச்சபடுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக உள்ளது.

போக்குவரத்திற்கான தேவைகள் காலத்திற்கு ஏற்ப மாறி இருப்பதிற்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் தயாரிப்புகளும் மாறிக்கொண்டே இருக்கிறது" என வால்வோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஹென்ரிக் கிரீன் கூறினார்.

"எங்களது நவீன டிஜிட்டல் கீ தொழில்நுட்பம், வால்வோ கார்கள் உபயோகிக்கபடும் முறைகளையே மாற்றிவிடும். இதனால், ஒரு நாள் முழுவதும், பார்க்கிங் மையங்களில் வெருமனே நிறுத்தி வைப்பத்தை காட்டிலும், காரின் சொந்தகாரர்கள் விருப்பபட்டால், இவற்றை தாங்கள் விருப்பபடும் நபர்களுடன் பகிர்ந்து கொண்டு, வால்வோ கார்களின் முழு உபயோகத்தை உறுதி செய்து கொள்ள முடியும்" என ஹென்ரிக் கிரீன் தெரிவித்தார்.

யோசனைகள் வரவேற்பு;

யோசனைகள் வரவேற்பு;

"இந்த ஷேர்ட் கீ டெக்னாலஜி எப்படி எல்லாம் உபயோகபடுத்தலாம் என தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்த டிஜிட்டல் கீ தொழில்நுட்பத்தை இன்னும் செம்மையாக மேம்படுத்தும் வகையில், மக்களிடம் இருந்தும் யோசனைகள் வரவேற்கபடுகிறது" என

ஸ்பெஷல் தொழில்நுட்பங்களுக்கான வால்வோ நிறுவன உயர் அதிகாரி ரோசென்க்விஸ்ட் தெரிவித்தார்.

வழக்கமான சாவிகள்?

வழக்கமான சாவிகள்?

இந்த டிஜிட்டல் கீ கொண்ட வால்வோ கார்கள் அறிமுகம் செய்யபட்ட பின்பும், வழக்கமான சாவிகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அவை தொடர்ந்து வழங்கபடும் என அறிவிக்கபட்டுள்ளது.

அறிமுகம்?

அறிமுகம்?

வால்வோ நிறுவனத்தின் இந்த டிஜிட்டல் கீ தொழில்நுட்பம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் ஃபிப்ரவரி 22 முதல் ஃபிப்ரவரி 25 வரை நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்ச்சியில் எரிக்ஸன் பூத்-தில் காட்சிபடுத்தபட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர்

வால்வோ கார் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் ஆர்டரை பெற்ற இன்ஃபோசிஸ்!

புதிய கார் அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் கார் நிறுவனங்கள் தீவிரம்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Volvo becomes the First Car Manufacturer in the World to launch Keyless Cars. Volvo is planning to sell keyless cars from 2017, with Bluetooth enabled digital keys, which would substitute the physical keys. This Digital key will be enabled through Volvo app on consumer's mobile phone. Through mobile phones, Customers can share these Digital Keys.
Story first published: Wednesday, February 24, 2016, 19:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark