வால்வோ கார்களின் விலை3% கூடியுள்ளது - முழு விபரம்

Written By:

வால்வோ கார்களின் விலை 3% அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் சமீபத்தில் தங்களின் அனைத்து கார் மாடல்களின் விலைகளையும் உயர்த்தி உள்ளனர். ஸ்வீடனை மையமாக கொண்டு இயங்கும் வால்வோ நிறுவனமும், இந்திய வாகன சந்தைகளில் விற்கும் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளனர்.

சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களின் இந்த விலை அதிகரிப்பு, மத்திய அரசு சார்பாக விதிக்கப்படும் புதிய வரியே காரணமாகும்.

வால்வோ நிறுவனம், ஏறக்குறைய தாங்கள் இந்தியாவில் விற்கும் அனைத்து கார் மாடல்களின் விலைகளையும் உயர்த்தும் நிலை ஏற்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக வால்வோ நிறுவனம் தாங்கள் வழங்கும் கார்களில், 3 மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை குறைத்துள்ளனர்.

வால்வோ கார் தயாரிப்புகளின் மீதான இந்த விலை மாற்றங்கள், ஏப்ரல் 1, 2016 அமலுக்கு வந்துள்ளது.

volvo-india-cars-three-percent-price-hike-from-2016-april

இந்திய சந்தைகளில் விற்கபடும் வால்வோ கார்களின் பழைய விலைகளையும், புதிய விலைகளையும் விவரமாக தெரிந்து கொள்வோம்;

மாடல் - வால்வோ வி40 டி3 கைனட்டிக்

புதிய விலை - 25.49 லட்சம் ரூபாய்

பழைய விலை - 24.75 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ வி40 ஆர்-டிசைன்

புதிய விலை - 28.53 லட்சம் ரூபாய்

பழைய விலை - 27.70 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி டி3 இன்ஸ்க்ரிபஷன்

புதிய விலை - 29.46 லட்சம் ரூபாய்

பழைய விலை - 32.50 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி டி4 பெட்ரோல்

புதிய விலை - 27.30 லட்சம் ரூபாய்

பழைய விலை - 26.50 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எஸ்60 கைனட்டிக்

புதிய விலை - 30.89 லட்சம் ரூபாய்

பழைய விலை - 32.40 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எஸ்60 மொமெண்டம்

புதிய விலை - 35.01 லட்சம் ரூபாய்

பழைய விலை - 35.25 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எஸ்60 இன்ஸ்கிரிப்ஷன்

புதிய விலை - 39.04 லட்சம் ரூபாய்

பழைய விலை - 38.35 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எஸ்60 ஆர்-டிசைன்

புதிய விலை - 41.72 லட்சம் ரூபாய்

பழைய விலை - 40.25 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எஸ்60 கிராஸ் கண்ட்ரி இன்ஸ்கிரிப்ஷன்

புதிய விலை - 38.90 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எஸ்60 டி6 பெட்ரோல்

புதிய விலை - 43.26 லட்சம் ரூபாய்

பழைய விலை - 42.00 லட்சம் ரூபாய்

volvo-india-cars-three-percent-price-hike-from-april

மாடல் - வால்வோ எக்ஸ்சி60 கைனட்டிக்

புதிய விலை - 44.81 லட்சம் ரூபாய்

பழைய விலை - 43.50 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எக்ஸ்சி60 மொமண்டம்

புதிய விலை - 48 லட்சம் ரூபாய்

பழைய விலை - 46.60 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எக்ஸ்சி60 இன்ஸ்க்ரிப்ஷன்

புதிய விலை - 51.71 லட்சம் ரூபாய்

பழைய விலை - 50.20 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எக்ஸ்சி60 ஆர்-டிசைன்

புதிய விலை - 53.56 லட்சம் ரூபாய்

பழைய விலை - 52 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எக்ஸ்சி60 மொமண்டம்

புதிய விலை - 70.97 லட்சம் ரூபாய்

பழைய விலை - 68.90 லட்சம் ரூபாய்

மாடல் - வால்வோ எக்ஸ்90 இன்ஸ்க்ரிப்ஷன்

புதிய விலை - 80.24 லட்சம் ரூபாய்

பழைய விலை - 77.90 லட்சம் ரூபாய்

குறிப்பு ; இந்த அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் ஆகும்.

volvo-india-cars-three-percent-price-hike-from-this-april

வால்வோ நிறுவனம் சார்பாக இந்தியாவில் விற்பனை செய்யபடும் இத்தனை கார் மாடல்களில், வால்வோ வி40 கிராஸ் கண்ட்ரி டி3 இன்ஸ்க்ரிபஷன் மாடல், எஸ்60 கைனட்டிக் மற்றும் எஸ்60 மொமெண்டம் ஆகிய 3 மாடல்களின் விலைகள் மட்டுமே குறைக்கபட்டுள்ளது. இந்த 3 மாடல்களுக்கும் உள்ள நல்ல டிமாண்ட் தான், இவற்றின் விலைகள் குறைக்கபட்டு அதன் ஆதாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏதுவாக அமைந்துள்ளதாக வால்வோ இந்தியா அற்வித்துள்ளது. ஆனால், இதன் தரத்திலும், அம்சங்களிலும் குறைபாடுகள் இல்லாமல் வழங்கபடுகிறது.

தற்போதைய நிலையில், வால்வோ நிறுவனம் தாங்கள் இந்தியாவில் விற்கும் அனைத்து மாடல்களையும் சிபியூ அல்லது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட் எனப்படும் முழுவதும் கட்டிமுடிக்கபட்ட வடிவத்திலியே விற்கபடுகிறது.

தற்போது, ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ, டெல்லி, குர்கான், அஹ்மதாபாத், சூரத், மும்பை, சண்டிகர், கோயம்புத்தூர், ஹைதரபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி, விசாகபட்டினம், கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஷோரூம்கள் உள்ளன. விரைவில், 3 புதிய நகரங்களிலும் ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளது.

English summary
Volvo India has increased prices of their Cars by 3 %. Almost all the Volvo Cars are affected by this price hike. This Price hike came to effect from April 2016. The Price hike has been imposed, because Central Government has introduced new Tax in the recently passed Union budget. To know about which Volvo models prices has increased by what amount, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark