வால்வோ எஸ்90 பிரிமியம் செடானின் புக்கிங் இந்தியாவில் துவக்கம்

By Ravichandran

வால்வோ ஆட்டோ இந்தியா நிறுவனம், தாங்கள் வழங்கும் எஸ்90 பிரிமியம் செடானின் புக்கிங்களை ஏற்க துவங்கியுள்ளனர்.

வால்வோ எஸ்90 பிரிமியம் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

வால்வோவின் திட்டம்...

வால்வோவின் திட்டம்...

ஸ்வீடனை மையமாக கொண்டு இயங்கும் வால்வோ நிறுவனம், சர்வதேச சந்தைகளில் தாங்கள் வழங்கும் தயாரிப்புகளை இந்தியாவில் வழங்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, எஸ்90 பிரிமியம் செடானை இந்திய வாகன சந்தைகளிலும் வழங்க உள்ளனர். தற்போது, இதற்கான புக்கிங்கை ஏற்க துவங்கிவிட்டனர்.

வால்வோ எஸ்90...

வால்வோ எஸ்90...

வால்வோ எஸ்90 பிரிமியம் செடான், எஸ்பிஏ அல்லது ஸ்கேலபில் புராடக்ட் ஆர்கிடெக்ச்சர் (Scalable Product Architecture (SPA)) எனப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

வால்வோ எஸ்90 பிரிமியம் செடானுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வருங்கால நோக்குடைய டிசைன் சித்தாந்தம், விரைவில் பிற மாடல்களுக்கும் பரிமாறப்படும்.

வால்வோ எஸ்90 பிரிமியம் செடானின் பல்வேறு டிசைன் அம்சங்கள், பிற மாடல்களில் ஏற்கப்படும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

வால்வோ எஸ்90 பிரிமியம் செடானிற்கு பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் இஞ்ஜின் பொருத்தபட உள்ளது.

வால்வோ எஸ்90 பிரிமியம் செடானுக்கு, 2.0 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்படும் என வால்வோ அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர்.

முதலில் டீசல் இஞ்ஜின்;

முதலில் டீசல் இஞ்ஜின்;

இந்திய அரசு, டீசல் இஞ்ஜின்கள் மீதான தடை குறித்த விஷயத்தில் இன்னும் தெளிவான முடிவு எடுக்காத நிலையே நீடித்து வருகிறது.

இதனால், ஆரம்ப கட்டத்தில், வால்வோ எஸ்90 பிரிமியம் செடான் டீசல் இஞ்ஜினுடனேயே அறிமுகம் செய்யப்படும். மேலும், வாடிக்கையாளர்கள் டீசல் இஞ்ஜின் கொண்ட மாடல்களை வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் என தெரிகிறது.

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

வால்வோ எஸ்90 பிரிமியம் செடானுக்கு, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் இஞ்ஜினின் தேர்வுகள் வரும் காலங்களில் பொருத்தப்படும்.

ப்ரீ-புக்கிங்;

ப்ரீ-புக்கிங்;

வால்வோ எஸ்90 பிரிமியம் செடானுக்கு, ப்ரீ-புக்கிங் எனப்படும் அறிமுகத்திற்கு முந்தைய புக்கிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

வால்வோ எஸ்90 பிரிமியம் செடான், இந்த ஆண்டில் வரும் பண்டிகைக்காலங்களின் போது அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

போட்டி;

போட்டி;

வால்வோ எஸ்90 பிரிமியம் செடான், இந்திய வாகன சந்தைகளில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

வால்வோ எஸ்90 பிரிமியம் செடான், ஜாகுவார் எக்ஸ்ஜே, ஆடி ஏ8, பிஎம்டபுள்யூ 7 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;

விலை;

வால்வோ எஸ்90 பிரிமியம் செடான், இந்தியாவில் 80 லட்சம் ரூபாய் முதல் 90 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்கும் வால்வோ!

இதர தொடர்புடைய செய்திகள்;உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்கும் வால்வோ!

உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்கும் வால்வோ!

வால்வோ நிறுவனத்தின் 2 புதிய மாடல்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம்

வால்வோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Sweden based automobile manufacturer Volvo has plans of offering all its international products in India. Hence, Volvo Auto India has now commenced pre-booking of its premium sedan, S90 across India. S90 premium sedan is developed on their new Scalable Product Architecture (SPA) technology. Volvo S90 Premium Sedan shall be launched during festive season. To know more, check here...
Story first published: Friday, July 8, 2016, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X