2017 எஸ்60 போல்ஸ்டார் மற்றும் 2017 வி60 போல்ஸ்டார் மாடல்கள் அறிமுகம்

By Ravichandran

வால்வோ நிறுவனம், 2017 எஸ்60 போல்ஸ்டார் மற்றும் 2017 வி60 போல்ஸ்டார் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளனர்.

2017 எஸ்60 போல்ஸ்டார் மற்றும் 2017 வி60 போல்ஸ்டார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

போல்ஸ்டார்...

போல்ஸ்டார்...

போல்ஸ்டார் என்பது வழக்கமான வால்வோ கார்களின் பெர்ஃபார்மன்ஸ் (செயல்திறன் கூட்டபட்ட) மாடல்கள் ஆகும்.

இதனை குறிக்கும் வகையில், வால்வோ நிறுவனத்தின் இத்தகைய போல்ஸ்டார் மாடல்களில் பிரத்யேகமான போல்ஸ்டார் பேட்ஜ் வழங்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2017 எஸ்60 போல்ஸ்டார் மற்றும் 2017 வி60 போல்ஸ்டார் ஆகிய 2 மாடல்களுமே, ஒரே மாதிரியான 2.0 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட சூப்பர் சார்ஜ்ட் மற்றும் டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இவற்றின் இஞ்ஜின், 362 பிஹெச்பியையும், 470 என் எம்டர்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2017 எஸ்60 போல்ஸ்டார் மற்றும் 2017 வி60 போல்ஸ்டார் கார்களின் இஞ்ஜின்கள், 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான், பவர் மற்றும் டார்க், 4 சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது.

திறன் கூட்டல்;

திறன் கூட்டல்;

இந்த போல்ஸ்டார் மாடல்களின் இஞ்ஜின் பெரிய டர்போ, புதிய இணைக்கும் ராட்கள், விதவிதமான கேம்ஷாஃப்ட்ஸ், பெரிய ஏர் இன்டேக்குகள், அதிக கொள்ளளவு கொண்ட எரிபொருள் பம்ப் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இவை அனைத்தும், இஞ்ஜினில் இருந்து கூடுதல் திறன் எடுக்க உதவுகிறது.

எடை குறைப்பு;

எடை குறைப்பு;

வால்வோ நிறுவனம், இந்த போல்ஸ்டார் மாடல்களின் முன் பக்க ஆக்ஸிலில் இருந்து 24 கிலோகிராம்களையும், பின் பக்கத்தில் 20 கிலோகிராம் எடையை குறைத்துள்ளது.

இஞ்ஜின் திறன்;

இஞ்ஜின் திறன்;

வால்வோவின் இந்த போல்ஸ்டார் மாடல்கள் நின்றநிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

வால்வோ போல்ஸ்டார், உச்சபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

பிரேக் அமைப்பு;

பிரேக் அமைப்பு;

வால்வோவின் 2 போல்ஸ்டார் கார்களும், 371 மில்லிமீட்டர் ஸ்லாட்டட் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது. இந்த டிஸ்க் பிரேக்குகள், 20-இஞ்ச் இலகு எடை கொண்ட சக்கரங்களின் பின்னால் தெரியாத படி பொருத்தபட்டுள்ளது.

உற்பத்தி அதிகரிப்பு;

உற்பத்தி அதிகரிப்பு;

வால்வோவின் போல்ஸ்டார் பேட்ஜ் கொண்ட கார்களின் உற்பத்தி, ஒரு வருடத்திற்கு 1,500 கார்கள் என்ற அளவிற்கு இரு மடங்காக உயர்த்தபட்டுள்ளது.

ஏற்றுமதியும் அதிகரிப்பு;

ஏற்றுமதியும் அதிகரிப்பு;

வால்வோவின் போல்ஸ்டார் புளூ-பேட்ஜ் கொண்ட கார்கள் முன்னதாக 13 நாடுகளுக்கு மட்டும் விற்பனை செய்யபட்டு வந்தது.

தற்போது, இந்த மாடல் கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் எண்ணிக்கை, 47 என்ற அளவிற்கு உயர்த்தபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்கும் வால்வோ!

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

வால்வோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Volvo has unveiled their 2017 S60 and V60 Polestar models. This Polestar badge is given to performance oriented versions of Volvo's cars. Polestar Models can hit 0 - 100km/h in 4.7 seconds. It has top speed is limited to 250km/h. The number of countries the blue-badged cars would be sold is increased from 13 to 47. To know more, check here...
Story first published: Monday, April 4, 2016, 21:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X