வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

By Ravichandran

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது.

புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், நன்கு சோதனை செய்யபட்டு, உபயோகப்படுத்தபடும் அதே 2.4 லிட்டர், 5-சிலிண்டர்கள் உடைய டர்போ டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 187 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 420 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், ஒரு லிட்டருக்கு, 13.7 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான திறன் கொண்டுள்ளது.

திறன்;

திறன்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 8.8 விநாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி, உச்சபட்சமாக மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், பேடல் ஷிஃப்டர்கள் கொண்ட 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான், ஏடபுள்யூடி அல்லது ஆல்-வீல்-டிரைவ் என்று அழைக்கபடும் சிஸ்டம் கொண்ட இதன் 4 வீல்களுக்கும் பவர் கடத்தபடுகிறது.

தோற்றம்;

தோற்றம்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், ஸ்டில்ட்களின் (ஊன்றுகோல்) மீது நிற்கும் வழக்கமான வால்வோ எஸ்60 போல் காட்சி அளிக்கிறது.

இதன், முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும், பக்கவாட்டிலும் ஸ்கிட் பிளேட்கள் சேர்க்கபட்டுள்ளது.

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், 65 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. மேலும், 18-இஞ்ச் அல்லாய் வீல்கள் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடானின் தையல் வேலைபாடுகள் (அப்ஹோல்ஸ்ட்ரி), லெதர் கொண்டு செய்யபட்டுள்ளது.

இதன் சென்டர் கன்சோல், வால்வோ கார்களுக்கு என்றே உள்ள பிரத்யேக அம்சமாக விளங்கும் ஏராளமான பட்டன்கள் கொண்டுள்ளது.

மேலும், இதன் 7-இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், காரை ரிவர்ஸ் செய்யும் போது கேமராக்களின் வீடியோக்களை காண்பிக்கும் டிஸ்பிளே சிஸ்டமாகவும் விளங்குகிறது.

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் அம்சங்கள்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடானின் மேற்கூரை, ஸ்டாண்டர்ட் அம்சமாக வருகிறது.

மேலும், வால்வோவின் ட்யூவல் ஸோன் கிளைமேட் சிஸ்டம், காரின் உள்ளே வெப்பநிலை சவுகரியமானதாக உள்ளதை உறுதி செய்கிறது.

இதன் பின்பக்க ஜன்னல்கள் மின்சார முறையில் ஹீட்டிங் செய்யபடுகிறது. இதன் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் டிஎஃப்டி ஸ்கிரீன் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடானிற்கு ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இது ஏபிஎஸ் எனப்படும் ஆண்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி, டைனமிக் ஸ்டெபிலிட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல், மற்றும் வால்வோவின் சிட்டி சேஃப்டி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் கொண்டுள்ளது.

மேலும், க்ரூஸ் கண்ட்ரோல், ஈபிஏ எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக் அசிஸ்ட், ஹில் டிஸ்ஸெண்ட் கண்ட்ரோல், ஸ்பீட் சென்சிட்டிவ் ஸ்டீயரிங் வீல் (வேகத்தை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் ஸ்டியரிங் செய்து கொள்ளும் வீல்) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டயர் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம்) வசதி கொண்ட ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளது.

ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்கள்;

ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக, ட்யூவல் ஸ்டெப் (2 நிலைகள்) முன்பக்க ஏர்பேக்குகள், பக்கவாட்டில் உள்ள ஏர்பேக்குகள் மற்றும் கர்டெய்ன் ஏர்பேக்குகள் கொண்டுள்ளது.

மேலும், விபத்து ஏற்படும் போது முன் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களுக்கு முதுகு தண்டு உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் ஏற்படாதவாறு தடுக்கும் வகையிலான விப்லேஷ் புரொடெக்‌ஷன் எனப்படும் பிரத்யேக வசதியையும் கொண்டுள்ளது.

இதர அமசங்கள்;

இதர அமசங்கள்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், ரெய்ன் சென்ஸார்கள் மற்றும் தண்ணிரை தடுக்கும் வகையிலான வாட்டர் ரெப்பெள்ளண்ட் எனப்படும் அம்சங்களை கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;

கிடைக்கும் வண்ணங்கள்;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான் மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், ரிச் ஜாவா, ஆஸ்மியம் கிரே, ஆய்னிக்ஸ் பிளாக், கிரிஸ்டல் வைட் மற்றும் பிரைட் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

போட்டி;

போட்டி;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், நேரடி போட்டியாக எந்த மாடல்களும் இல்லை.

எனினும், வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடானின் அறிமுகம், பிஎம்டபுள்யூ 3 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் ஆடி ஏ4 ஆகிய மாடல்களுக்கு எதிராக உள்ள போட்டியை சமாளிக்க வால்வோ நிறுவனத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கும்.

விலை;

விலை;

வால்வோ எஸ்60 கிராஸ் கன்ட்ரி கிராஸ்ஓவர் செடான், 38.9 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பவர்ஃபுல் வால்வோ போல்ஸ்டார் கார்களின் விபரம் வெளியீடு

உலகில் முதன் முதலாக சாவி இல்லாத கார்களை தயாரிக்கும் வால்வோ!

வால்வோ தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Volvo has launched their V60 Cross Country Crossover Sedan in India. It has a whole lot of safety Features. It is available in 5 colours - Rich Java, Osmium Grey, Oynx Black, Crystal White and Bright Silver. Priced At Rs. 38.9 Lakhs is priced at Rs. 38.9 Lakhs (Ex-showroom Mumbai). To know more about this Sedan, Check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X