நாளை விற்பனைக்கு அறிமுகமாகிறது ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல்?

By Ravichandran

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தங்களின் அமியோ டீசல் செடான் மாடலை, இந்திய வாகன சந்தைகளில் செப்டம்பர் 27-ல் (நாளை) அறிமுகம் செய்வார்கள் என செய்திகள் வெளியாகிறது. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 'மேட் இன் இந்தியா' எனப்படும் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் அமியோவை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தனர்.

ஃபோக்ஸ்வேகன் அமியோ டீசல் மாடல் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;

அறிமுகம்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் பெட்ரோல் மாடல் கொஞ்ச காலத்திற்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டீசல் மாடல், விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 27-ல் (நாளை) அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிறது.

வேரியன்ட்கள்;

வேரியன்ட்கள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், ட்ரென்ட்லைன், கம்ஃபர்ட்லைன் மற்றும் ஹைலைன் ஆகிய 3 வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்படும்.

டிசைன்;

டிசைன்;

டிசைன் பொருத்த வரை, ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் பெரும்பாலான அம்சங்கள், முன்பு வெளியான பெட்ரோல் மாடலின் டிசைன் அம்சங்களை போலவே இருக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் கொண்டிருக்கும். இந்த இஞ்ஜின், 110 பிஹெச்பியையும், அதிகப்படியாக 230 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடல், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

புக்கிங்;

புக்கிங்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் புக்கிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

விலை;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடானின் டீசல் மாடலின் விலை குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஃபோக்ஸ்வேகன் அமியோ காரின் பிரத்யேக படங்களின் ஆல்பம்!

புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் எப்படி இருக்கிறது... ஒரு ரவுண்டு பார்த்துடலாம்!

சவாலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ விற்பனைக்கு வந்தது!

Most Read Articles
English summary
Volkswagen is most likely to introduce Ameo Compact Sedan with diesel engine ahead of festive season. There are high possibility of VW Ameo diesel launching on September 27, 2016. It will be available in three variants - Trendline, Comfortline, and Highline. Bookings are expected to open very soon. Ameo is Volkswagen's very first completely made in India product. To know more, check here...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X