கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகச்சிறிய கார் - 1,76,000 டாலருக்கு ஏலம்

Written By:

உலகின் மிகச்சிறிய கார் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த பீல் பி50 என்ற கார், 1,76,000 டாலருக்கு ஏலம் போனது.

அசாதாரன விலைக்கு ஏலம் போன இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

உலகின் மிகச்சிறிய கார்;

உலகின் மிகச்சிறிய கார்;

1964-ஆம் ஆண்டில் தயாரித்து வெளியான பீல் பி50 என்ற இந்த கார் தான், உலகின் மிகச்சிறிய தயாரிப்பு நிலை காருக்கான கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா பிராந்தியத்தில் உள்ள அமேலியா தீவில் நடந்த ஆர்எம் சோத்பீஸ் ஏலத்தில், இந்த காரும் ஏலத்திற்கு விடப்பட்டது.

நல்ல மதிப்புக்கு ஏலம்;

நல்ல மதிப்புக்கு ஏலம்;

பீல் பி50 என்ற உலகின் மிகச்சிறிய கார், 1,76,000 அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடதக்கது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

1964 பீல் பி50 கார், 49 சிசி, ஃபேன்-கூல்ட், பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த கார், பீல் இஞ்ஜினியரிங் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் தயாரிக்கபட்டு புதியதாக இருந்த நிலையில் 4 ஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

1964 பீல் பி50 காரின் இஞ்ஜின், 3-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் கியர்பாக்ஸ் அமைப்பின் மூலம் தான், முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

இந்த மாடலுக்கு ரிவர்ஸ் கியர் அமைப்பு இல்லை.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

1964 பீல் பி50 மைக்ரோ காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 61 கிலோமீட்டராக இருந்தது.

இருப்பினும், இந்த காரின் உச்சபட்ச வேகம், இந்த காரை ஓட்டுபவரின் உருவத்தை பொருத்தும் மாறுபடும் வகையில் உள்ளது.

இதர அம்சங்கள்;

இதர அம்சங்கள்;

1964 பீல் பி50 காரின் பாக்ஸ் போன்ற வடிவம், ஃபைபர்கிளாஸ் கொண்டுள்ளது. இந்த காரின் முன் பகுதியில், ஒரே ஒரு சிங்கிள் ஹெட்லேம்ப் மட்டும் உள்ளது.

இதன் இஞ்ஜின், முன் சக்கரத்தின் பின்னால், வலது பக்கத்தில் பொருத்தபட்டுள்ளது. இதன் பின் பக்கத்தில், சிறிய கிராப் ஹேண்டில் போன்ற அமைப்பு உள்ளது.

இதன் மூலம் தான், இந்த காரை திருப்ப முடிகிறது.

இந்த காரின் இடது புறத்தில், இந்த காரின் ஒற்றை கதவு உள்ளது. இதன் மூலம் தான், இந்த காரின் உள்ள சிங்கிள் சீட்டில் சென்று அமர முடியும்.

இது பெரிய ஸ்டீயரிங் வீல் மற்றும் பெடல்கள் கொண்டுள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

1964 பீல் பி50 என்ற இந்த காரின் சிறிய அளவுகள் தான், இதை உலகின் சிறிய காரின் புகழுக்கு உரியதாக ஆக்கியது.

1964 பீல் பி50 கார், 137 செண்டிமீட்டர் நீளமும், 99.06 செண்டிமீட்டர் அகலமும், 100 செண்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது.

இதன் வீல் பேஸ், 127 செண்டிமீட்டராக உள்ளது.

எடை;

எடை;

1964 பீல் பி50 கார், வெரும் 56 கிலோகிராம்கள் என்ற குறைந்த அளவிலான எடையை கொண்டுள்ளது.

தயாரிப்பு விவரம்;

தயாரிப்பு விவரம்;

கின்னஸ் உலக சாதனை படைத்த பீல் பி50 கார், ஐல் ஆஃப் மேன் என்ற பகுதியில், 1963 மற்றும் 1964 ஆண்டுகளுக்கு இடையில் தயாரிக்கபட்டது.

இந்த காலகட்டத்தில், இதன் வகையில் வெரும் 47 கார்கள் மட்டுமே தயாரிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. அறிமுகபட்ட செய்யபட்ட நேரத்தில், ஒரு காரின் விலைவெரும் 199

பவுண்ட்களாக மட்டுமே இருந்தது.

அரிய கார்;

அரிய கார்;

கின்னஸ் உலக சாதனை படைத்து, அமேரியா தீவில் இப்படி அசாதாரன விலைக்கு ஏலம் போன இந்த கார், இந்த மாடலில் உலக அளவில் உள்ள கடைசி 26 அரிய கார்களில் ஒன்றாகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

முதல் புகாட்டி வேரான் கார் பெரும் தொகைக்கு ஏலம்!!

இமாலய விலைக்கு ஏலம் போன ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக தயாரிக்கப்பட்ட அஸ்டன் மார்ட்டின் கார்!

அன்னா ஹசாரேவுக்கு 'தம்பி'யாக தோள் கொடுத்த ஸ்கார்ப்பியோ நாளை ஏலம்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
World's Smallest Car named 1964 Peel P50 was sold for $176,000 at RM Sotheby's Amelia Island Auction in Florida, USA. The Peel P50 is the Guinness World Record Holder of title of 'Worlds's Smallest Production Car'. This Car kerb weight is just 56 kilograms. It was giving a mileage of 61km/h. It is one of 26 remaining examples. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark