இந்திய கார்கள் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், 0 மதிப்பீடு

By Ravichandran

இந்திய கார்கள் அனைத்தும் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், 0 மதிப்பீட்டையே பெற்றன.

இந்திய தயாரிப்புகள் மற்றும் அவை பெற்ற மதிப்பீடுகள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கிராஷ் டெஸ்ட்;

கிராஷ் டெஸ்ட்;

எந்த ஒரு தயாரிப்புகளும், விபத்து நிகழும் நேரத்தில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, அவை கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது.

அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார், 3 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தரத்தை நிர்ணயிக்க, குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP), லேட்டின் என்கேப் (Latin NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

குளோபல் என்கேப்;

குளோபல் என்கேப்;

உலகளாவிய சந்தைகளை கருத்தில் கொண்டு அவற்றிகு என நடத்தபடும் கிராஷ் டெஸ்டையே குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட் என சொல்லபடுகிறது.

முதல் கட்ட சோதனைகள்;

முதல் கட்ட சோதனைகள்;

இந்திய கார்களின் தரத்தை சோதிப்பதற்கான முதல் கட்ட சோதனைகள், 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ளபட்டது.

அப்போது மொத்தம் 8 மாடல்கள் சோதிக்கபட்டன. 2014-ல், ஃபோக்ஸ்வேகன் போலோ, மாருதி ஆல்ட்டோ 800, மாருதி ஸ்விப்ட், டாடா நானோ, ஹூண்டாய் ஐ10, போர்டு ஃபிகோ டொயோட்டா இட்டியாஸ் மற்றும் டட்சன் கோ ஆகிய கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் நடத்தபட்டது.

இதில் போலோ மற்றும் எட்டியாஸ் ஆகிய மாடல்கள் மட்டுமே, ஃப்ராண்டல் ப்ரொடெக்‌ஷன் என்ற முன் பக்க கிராஷ் டெஸ்டில் 4-ஸ்டார் ரேட்டிங் பெற்றன.

மற்ற பிற கார்கள் அனைத்தும், 0 ரேட்டிங் மதிப்பீட்டையே பெற்றன.

சமீபத்திய கிராஷ் டெஸ்ட்கள்;

சமீபத்திய கிராஷ் டெஸ்ட்கள்;

உலக அளவிலான ஆட்டோமோட்டிவ் வாகனங்களுக்கான பாதுகாப்பு அமைப்பான குளோபல் என்கேப், தற்போது இந்தியாவில் விற்பனையாகும் 5 முன்னோடி கார்களை கிராஷ் டெஸ்ட் சோதனைகளை நடத்தியது.

ரெனோ க்விட், மாருதி சுஸுகி செலெரியோ, மாருதி சுஸுகி ஈக்கோ, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகியவற்றிக்கு கிராஷ் டெஸ்ட்கள் நடத்தபட்டன.

மதிப்பீடு;

மதிப்பீடு;

சமீபத்திய கிராஷ் டெஸ்ட்களின் மதிப்பீடுகள், ஃபரீதாபாத் நகரில் வெளியிடபட்டது.

இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில், 5 முன்னோடி கார்களும் 0 ரேட்டிங் மதிப்பீட்டையே பெற்றன.

ரெனோ க்விட்;

ரெனோ க்விட்;

பிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் தயாரித்து வழங்கும் க்விட், 3 விதமான முறைகளில் கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபட்டது.

இதில் ஒரு விதமான கிராஷ் டெஸ்ட், ஏர்-பேக்குகளுடன் நடத்தபட்டது.

ஆனால், 3 விதமான கிராஷ் டெஸ்ட்களிலும், பெரியவர்களுக்கான பாதுகாப்பில், ரெனொ க்விட் 0 ரேட்டிங் மதிப்பீட்டையே பெற்றது.

கிராஷ் டெஸ்ட் நடைமுறை;

கிராஷ் டெஸ்ட் நடைமுறை;

தற்போது நடந்து முடிந்த கிராஷ் டெஸ்ட்களின் போது, அனைத்து கார்களும் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் பரிசோதிக்கபட்டன.

இப்படி செய்யும் போது, இதன் திடமற்ற பாடி ஷெல் (உடல் கூடு) கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி, உள்ளிருக்கும் பயணியர்களை அபாயங்கள் நிறைந்த காயங்களுக்கு ஆளாக்குகிறது.

மதிப்பீடுகள் வெளியீடு;

மதிப்பீடுகள் வெளியீடு;

ஃபரீதாபாத் நகரில் ஐஆர்டிஇ எனப்படும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரோட் டிராஃபிக் எஜுகேஷன் மையத்தில் இந்த சமீபத்திய கிராஷ் டெஸ்டின் மதிப்பீடுகள் வெளியிடபட்டன.

இதை குளோபல் என்கேப் அமைப்பின் செக்ரட்ரி ஜெனரல் டேவிட் வார்ட் வெளியிட்டார். அப்போது, அவர் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

அப்போது, டேவிட் வார்ட் பல்வேறு ஆலோசனைகளயும் வழங்கினார். "சேஃபர் கார்ஸ் ஃபார் இந்தியா (‘SaferCarsforIndia') என்ற இந்த சோதனைகளின் தரவுகள், ஒரு விபத்தின் போது, காரின் உடற்கூடு திடமாக இருப்பது எவ்வளவு முக்கியமானது" என விவரித்தார்.

ஆலோசனைகள் - 2;

ஆலோசனைகள் - 2;

"இத்தகைய ஆபத்துகளால், காரின் ஃப்ரண்ட் ஏர்பேக்குகளாவது கட்டாயமாக இருக்க வேண்டியது மிக அத்தியாவசியமாகிறது. ரெனோ போன்ற முன்னோடி கார் நிறுவனம், எப்படி ஏர்பேக்குகள் போன்ற அத்தியாவசியமான அம்சங்கள் கூட இல்லாமல் க்விட் போன்ற இத்தகைய கார்களை தயாரித்து வழங்கியது" என டேவிட் வார்ட் ஆச்சர்யத்தை வெளிபடுத்தினார்.

"உலகின் எந்த பகுதிகளிலும், எந்த ஒரு நிறுவனமும், தரம் குறைவான பொருட்களை தயாரித்து வழங்க கூடாது. அனைத்து கார் நிறுவனங்களும், யுனைட்டட் நேஷன்ஸ் எனப்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் குறைந்தபட்ச கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு மதிப்பு வழங்கி, ஃப்ரண்ட் ஏர் பேக்குகளுடனாவது தங்கள் கார்களை வழங்க வேண்டும்" என டேவிட் வார்ட் தெரிவித்தார்.

பாரத் என்கேப்;

பாரத் என்கேப்;

உலகின் பிற பகுதிகளில் உள்ளது போல், இந்தியாவிலும் இந்தியாவிற்கு என பாரத் என்கேப் எனப்படும் பாரத் நியூ கார் அசெஸ்மெண்ட் புரோகிராம் (Bharat New Car Assessment Programme) எனப்படும் பிரத்யேகமான கிராஷ் டெஸ்ட் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

குளோபல் என்கேப் அமைப்பின் செக்ரட்ரி ஜெனரல் டேவிட் வார்ட், இந்த முன்னேற்றங்களை வரவேற்றார். "இந்த கிராஷ் டெஸ்ட்களின் கண்டுபிடிப்புகள், அக்டோபர் 2017 முதல் கட்டாயம் ஆக்கப்பட உள்ள ஃப்ரண்ட் மற்றும் சைட் (பக்கவாட்டு) கிராஷ் டெஸ்ட் முறையினை அவசியத்தை மேலும் முக்கியமானதாக மாற்றுகிறது" என டேவிட் வார்ட் கூறினார்.

"ஐக்கிய நாடுகள் பரிந்துரைக்கும் ஆலோசனைகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க சட்டங்கள் அவசியமாக்கப்பட வேண்டுமோ என தோன்ற வைக்கிறது. தற்போதைய நிலையில், சட்டங்கள் ஏதும் இல்லாததால், கார் உற்பத்தி நிறுவனங்கள் இத்தகைய சட்டங்களுக்கு காத்திருக்க வேண்டாம். கார் உற்பத்தி நிறுவனங்கள் தாமாக முன் வந்து, இத்தகைய 0 மதிப்பீடு கொண்ட கார்களை தயாரிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்" என டேவிட் வார்ட் தெரிவித்தார்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

மாருதி பலேனோ ஹேட்ச்பேக்கிற்கு 3 ஸ்டார் ரேட்டிங்

கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய ஃபோர்டு என்டெவர்!

கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles
English summary
Global NCAP crash tests were conducted for Kwid, Eeco, Celerio, Eon and Scorpio in second round of testing Indian cars. All Indian cars which were tested received 0 star ratings in latest round of test results. All cars were tested for crash safety at speed of 64kph. To know more about Crash Tests for Indian Cars, Global NCAP, Bharat NCAP, check here...
Story first published: Tuesday, May 17, 2016, 20:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X