புதிய ஹோண்டா சிட்டி காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

Written By:

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி கார் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், கடும் சந்தைப் போட்டி கொண்ட இந்த செக்மென்ட்டில் போட்டியாளர்களைவிட மிக அதிக விலையில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வாடிக்கையாளர்கள் எளிதாக வேறுபடுத்தி தெரிந்து கொள்வதற்கான ஒரு ஒப்பீடு அட்டவணையை இந்த செய்தியில் வழங்கி உள்ளோம்.

எஸ் வேரியண்ட்[ பேஸ் மாடல்]

எஸ் வேரியண்ட்[ பேஸ் மாடல்]

பெட்ரோல் மாடலில் இ வேரியண்ட் நீக்கப்பட்டு இப்போது எஸ் வேரியண்ட் பேஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், யுஎஸ்பி போர்ட், புளூடூத் வசதியுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி வசதி, ரியர் டீஃபாகர், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட வசதியுடன் கூடிய சைடு மிரர்கள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது.

பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே இந்த வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கும்.

எஸ்வி வேரியண்ட்

எஸ்வி வேரியண்ட்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் எஸ்வி வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. முந்தைய எஸ் வேரியண்ட்டில் இருந்த வசதிகளுடன் கூடுதலாக ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட், பவர் ஃபோல்டிங் சைடு மிரர்கள் மற்றும் ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டி குறைப்பதற்கான வசதிகள் உள்ளன.

பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் கிடைக்கும்.

வி வேரியண்ட்

வி வேரியண்ட்

எஸ் மற்றும் எஸ்வி வேரியண்ட்டுகளில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக பனி விளக்குகள், 15 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் தானியங்கி முறையில் மடங்கும் சைடு மிரர்கள் போன்ற சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மாடலிலும், டீசல் மாடலிலும் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

 விஎக்ஸ் வேரியண்ட் வசதிகள்

விஎக்ஸ் வேரியண்ட் வசதிகள்

விஎக்ஸ் வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், சன்ரூஃப், லெதர் இருக்கைகள், 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல்கள், டெலிஸ்கோப்பிக் அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன.

பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் மாடலிலும், டீசல் மாடலிலும் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

இசட்எக்ஸ் வேரியண்ட்

இசட்எக்ஸ் வேரியண்ட்

இந்த டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், பூட் ஸ்பாய்லர், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்றவை இடம்பெற்று இருக்கின்றன. மொத்தத்தில் போட்டியாளர்களைவிட பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வேரியண்ட்டானது ஹோண்டா சிட்டி பெட்ரோல் காரின் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலிலும், டீசல் மாடலிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
2017 Honda City variants explained.
Story first published: Tuesday, February 14, 2017, 16:02 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos