ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

Written By:

உயர்வகை எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்கியது. செரோக்கீ மற்றும் ரேங்லர் ஜீப் எஸ்யூவி மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இறக்குமதி செய்து விற்பனைக்கு வந்ததால், அந்த இரு மாடல்களின் விலையும் மிகவும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டிய நிலை ஜீப் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், ஜீப் எஸ்யூவிகளை விரும்பும் இந்தியர்களுக்கு தோதுவான விலையில் ஜீப் காம்பாஸ் என்ற புதிய எஸ்யூவி மாடலை ஜீப் நிறுவனம் களமிறக்க உள்ளது.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

சமீபத்தில் பெங்களூரில் இந்த புதிய எஸ்யூவி மாடல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறித்த செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம். விரைவாகவே இந்த எஸ்யூவி மார்க்கெட்டிற்கு வருவது உறுதி என்பது குறித்தும் நாம் செய்தியில் தெரிவித்திருந்தோம். அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

வரும் ஜூன் மாதம் புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக கார்தேக்கோ இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. எனவே, அடுத்த சில மாதங்களில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய காம்பாஸ் எஸ்யூவியின் இந்திய வருகையை ஏற்கனவே ஜீப் நிறுவனம் உறுதி செய்துவிட்ட நிலையில், தற்போது இந்த புதிய மாடல் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்தியர்கள் மத்தியில் இந்த புதிய எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரை இந்த எஸ்யூவியின் டீசல் எஞ்சின் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவியில் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்ட், லாங்டிடியூட் மற்றும் லிமிடேட் ஆகிய மூன்று மாடல்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஃப்ரோடு அம்சங்கள் பொருந்திய மாடல் ட்ரெயில்ஹாக் என்ற பெயரில் வருகிறது.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 2 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும். மேலும், ஆஃப்ரோடு பராக்கிரமத்திற்கு தேவையான பல தொழில்நுட்ப வசதிகள் இருக்கின்றன. செலக்ட் டெர்ரெய்ன் என்ற புதிய வசதியும் சேர்க்கப்பட உள்ளது. இந்த வசதியின் மூலமாக, சாலை நிலைக்கு தக்கவாறு காரின் செயல்திறனில் மாற்றங்கள் செய்ய முடியும்.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

புதிய ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ரூ.18 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் வரக்கூடும் என்பது இப்போதைய கணிப்பு தகவல். இதுதான் ஜீப் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட மாடலாகவும் இருக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்கு காரணம்.

ஜீப் காம்பாஸ் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கவுனில் உள்ள ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் ஆலையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், மிக சரியான விலையில் இந்த எஸ்யூவியை களமிறக்கும் வாய்ப்பு ஜீப் நிறுவனத்திற்கு உள்ளது.

2017 ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் படங்கள்!

2017 ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
According to reports, Jeep India is all set to launch its small and affordable SUV in the country by June 2017.
Story first published: Monday, January 23, 2017, 13:48 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos