புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்:இந்திய வருகை எப்போது?

Written By:

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகச் சிறந்த சந்தைப் பங்களிப்பை பெற்று இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்குகி்றது. இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், தனது துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களையும் இந்தியாவில் களமிறக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கியா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார் பிகான்டோ. தற்போது புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு கூடுதல் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய கார் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த காரின் படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய கியா பிகான்டோ காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், கிராண்ட் ஐ10 காரைவிட மிக கவர்ச்சியாக இருக்கிறது கியா பிகான்டோ.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

பழைய பிகான்டோ காரிலிருந்து முற்றிலும் வேறுபட்ட டிசைனுடன் புதிய பிகான்டோ கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வடிவத்தில் கிராண்ட் ஐ10 காரினை ஒத்திருக்கிறது. மேலும், ஜிடி வரிசை கார்களை பிரதிபலிக்கும் டிசைன் தாத்பரியங்கள் கொண்ட புதிய பிகான்டோ காரின் படங்கள்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு, கவர்ச்சிகரமான முன்புற பம்பர் என அசத்தலாக இருக்கிறது. ஆனால், பக்கவாட்டு டிசைனில் மாறுதல்கள் இல்லை. அலாய் வீல்கள் கவர்ச்சியை கூட்டுவதாக இருக்கின்றன.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

பின்புறத்தில் சி வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் கவர்ச்சியாக இருக்கிறது. இரட்டைக் குழல் சைலென்சர்கள், முறுக்கலான பம்பர் அமைப்புடன் முரட்டுத்தனமான ஹேட்ச்பேக் கார் தோற்றத்தை பெற்றிருக்கிறது.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

இன்டீரியர் மிகவும் பிரிமியமாக இருக்கிறது. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கவர்ச்சியான ஸ்டீயரிங் வீல், அலுமினிய பெடல்கள், சிவப்பு வண்ண அலங்காரத்துடன் கூடிய இருக்கைகள் என மிக மிக பிரிமியமான தோற்றத்தை கொண்டுள்ளது.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

எஞ்சின் விபரங்கள் பற்றிய தகவல் இல்லை. டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களிலும் வரும்.

 புதிய கியா பிகான்ட்டோ கார் அறிமுகம்: 2018ல் இந்தியா வருகை!

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2019ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

புது மாருதி ஸ்விஃப்ட் வாங்க ஐடியா இருக்கா? கண்டிப்பா இந்த ஆல்பத்தை மிஸ் பண்ணாதீங்க!

English summary
Kia Reveals The 2017 Picanto; India Launch Likely By Late 2018.
Please Wait while comments are loading...

Latest Photos