இந்தியாவில் ரூ. 68.05 லட்சம் தொடக்க விலையில் 2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

Written By:

லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிஸ்கவர் எஸ்.யூ.வி காரை ரூ.68.05 லட்சம் விலையில் (எக்ஸ்-ஷோரூம், அனைத்து இந்தியாவிற்கும்) அறிமுகப்படுத்தி உள்ளது.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

இந்தியாவில் மூன்றாவது தலைமுறையாக வெளியாகியுள்ள இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளில் 5 வேரியண்ட்கள் கொண்ட மாடலாக வெளிவந்துள்ளது.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

லேண்ட்ரோவரின் அதீத சிறப்பம்சங்களை பெற்ற டீசல்-பவர்டு வேரியண்ட் மாடலின் விலை ரூ.1.03 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆடம்பர எஸ்.யூ.வி கார் முதலாவதாக 2014 நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

எஸ்.யூ.வி கார்களுக்காக காலம் காலமாக பின்பற்றி வந்த வடிவமைப்புகள் முற்றிலும் நீங்கலாக புதுவித தோற்றத்தில் லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் வெளியாகியுள்ளது.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

பெட்ரோல் வேரியண்ட் லேண்ட்ரோவர் டிஸ்கவரி காரில் 3.0 லிட்டர் வி6 டர்போ-பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 335 பிஎச்பி பவர் மற்றும் 450 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

மேலும் டீசல் வேரியண்ட் மாடலில் 3.0 வி6 லிட்டர் டர்போ எஞ்சின் உள்ளது. இது 255 பிஎச்பி பவர் மற்றும் 600 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

இந்த இரண்டு வேரியண்ட் கார்களுக்குமே லேண்ட்ரோவரின் இக்னியம் எஞ்சின் குடும்பத்தில் இருந்து தான் எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளது.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

அனைத்து சக்கரங்களையும் இயக்கும் திறன் பெற்ற இந்த கார்கள் 8-ஸ்பீடு இசட்.எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாஸ் கொண்டுள்ளது.

4டபுள்யூ.டி லேண்ட்ரோவரின் டெரையன் ரெஸ்பான்ஸ் அமைப்பை பெற்றுள்ள கார்களில் பல டிரைவிங் மோட் தேவைகளும் உள்ளது.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

காருக்கான உள்கட்டமைப்புகளில் 10- அங்குல தொடுதிரைக்கொண்ட இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், டீயல் பனரோமிக் சன்ரூஃப், பேரலல்-பார்க் அசிஸ்ட், ஹெட்ஸ் ஆஃப் போன்ற தேவைகளும் இதில் உள்ளது.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

இதனுடைய உயர் ரக மாடலில் இன்-கன்ட்ரோல் டச் பிரோ இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம், 17 மெரிடியன் ஸ்பீக்கர் சிஸ்டம், ஹீடட் சீட்ஸ், 9 யுஎஸ்பி போர்ட், 12வி சார்ஜிங் பாயின்ட்ஸ் மற்றும் 3ஜி வைஃபை போன்ற இதர இத்யாதி தேவைகளும் உள்ளன.

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரி கார் விற்பனைக்கு வந்தது..!!

2017 லேண்ட்ரோவர் டிஸ்கவரிக்கு போட்டியாக இந்திய மார்கெட்டில் வால்வோ எக்ஸ்.சி 90, ஆடி க்யூ5, பிஎம்டபுள்யூ எக்ஸ்3 மற்றும் மெர்சிடிஸ் ஜிஎல்இ கார்கள் உள்ளன.

ஆனால் எஸ்.யூ.வி மற்றும் விலை ஆகியவற்றோடு ஆடி க்யூ 7 கார் லேண்ட் ரோவர் டிஸ்கவரி காருக்கான சரிநிகர் போட்டியாக உள்ளது.

English summary
Read in Tamil: 2017 Land Rover Discovery Launched In India With Prices Starting At Rs 68.05 Lakh. Click for Details...
Story first published: Wednesday, August 9, 2017, 17:25 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark